9 கி.மீ நீளமுள்ள எலக்ட்ரானிக் சிட்டி பாலமே ஸ்தம்பித்தது.. வண்டியை விட்டு நடந்துபோன ஐடி ஊழியர்கள்
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூர் கடந்த சில நாட்களாக கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. நேற்றிரவு பெய்த மழை காரணமாக, புறநகரான ஒசூர் சாலையில் அமைந்துள்ள எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து பெங்களூருக்குள் வர முடியாமல் 3 மணி நேரத்திற்கும் மேலாக பாலத்தின் மீது ஒரே இடத்தில் நின்றிருந்தன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிப்படைந்தனர்.
இந்தியாவில் அதிகம் போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரம் பெங்களூர்தான். ஐடி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, இங்கு வாகன பயன்பாடு என்பது அதிகரித்துள்ளது. பெங்களூர் நகரத்தில் மட்டும் சுமார் 1.1 கோடி வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதில், பைக்குகளின் எண்ணிக்கை மட்டுமே 75.6 லட்சம். கார்கள் 23.1 லட்சம். இப்படி ரமணா விஜயகாந்த் மாதிரி புள்ளி விவரம் அள்ளி வீச முடியும். அதிக வாகனங்களால் அடிக்கடி டிராபிக் ஜாம் ஏற்படுவது வழக்கமானதாக இருக்கிறது.

இப்படி இருக்கையில், நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக பெங்களூரில் வரலாறு காணாத அளவுக்கு டிராபிக் ஜாம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக எலக்ட்ரானிக் சிட்டியில் சுமார் 3 மணி நேரத்திற்கும் அதிகமாக மக்கள் தங்கள் வாகனங்களில் காத்திருந்திருக்கின்றனர். எலக்ட்ரானிக் சிட்டி பாலம் சுமார் 9 கி.மீ தூரமுள்ளது. அதில் ஒரு பகுதியில் மழை நீர் தேங்கியதால், சிட்டிக்குள் வரும் பாதை மூடப்பட்டது. சிட்டியிலிருந்து வெளியேறும் பாதை வழக்கம் போல திறந்திருந்தது.
இதன் காரணமாக அலுவலகங்களிலிருந்து வீடு திரும்ப முயன்றவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சிலர் நிறுவனத்தின் டாக்ஸியிலிருந்து இறங்கி வீடுகளுக்கு நடக்க தொடங்கினர். எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்திற்கு டோல் வசூலிக்கப்படுகிறது. அதையும் கொடுத்துவிட்டு மக்கள் நடந்துபோனதை பார்க்க பரிதாபமாக இருந்தது. ஒர்க் பிரம் ஹோம் தராத கம்பெனிகளை ஐடி ஊழியர்கள் சமூக வலைத்தளங்களில் வறுக்க ஆரம்பித்துள்ளனர்.
இது குறித்து ஐடி ஊழியர்கள் கூறுகையில், "நாங்கள் 5.30க்கு அலுவலகத்திலிருந்து வெளியே வந்தோம். வீடு 30 கி.மீக்கு அப்பால் இருக்கிறது. வழக்கமாக 1.30-2 மணி நேரத்தில் வீட்டிற்கு சென்றுவிடுவோம். ஆனால் இன்று 3 மணி நேரத்திற்கும் மேல் நாங்கள் எலக்ட்ரானிக் சிட்டியில்தான் இருக்கிறோம்" என்று கூறியுள்ளனர்.
கடந்த 3 நாட்களுக்கு மேலாக பெங்களூரில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், சுமார் 100 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. வழக்கமாக வெள்ளம், தாழ்வான பகுதியை நோக்கி ஓடி நீர்நிலைகளில் கலந்துவிடும். ஆனால் கனமழை காரணமாக ஏரிகள் நிரம்பி, நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்திருந்ததால் வெள்ளம் வடிய வாய்ப்பில்லாமல் தேங்கி நின்றிருக்கிறது. மட்டுமல்லாது நீர் நிலைகளை ஆக்கிரமித்து வீடுகளும், கட்டிடங்களும் கட்டப்பட்டிருப்பதால் வெள்ளம் தேங்கியிருக்கிறது.
மழை காரணமாக சுமார் 1500க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பெங்களூரின் சில பகுதிகளில் 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்திருக்கிறது. மழை காரணமாக புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த வீடு இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகியுள்ளனர். அதேபோல மன்யாதா டெக் பார்க் முழுவதும் மழைநீர் வெள்ளம் போல சூழ்ந்திருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications