பெங்களூர்: 5 மணி நேரத்திற்கு மேலாக சில்க் போர்டு சாலை நீரில் சிக்கிய ஊழியர்கள்.. ரூ 225 கோடி இழப்பு
பெங்களூர்: பெங்களூரில் உள்ள சில்க் போர்டு ஜங்ஷனில் உள்ள சாலையில் தேங்கிய தண்ணீரில் சிக்கியவரை அங்கிருந்த காவலர்கள் மீட்டனர். இந்த நிலையில் வெள்ளத்தால் 5 மணி நேரத்திற்கும் மேலாக ஊழியர்கள் சிக்கியதால் ரூ 225 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
தென் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதிலும் கர்நாடகா, கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பெங்களூர்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை வெள்ளநீரில் தத்தளித்து வருகிறது. கிட்டதட்ட ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து கடுமையாக பாதிககப்பட்டுள்ளது.

மாரத்தஹள்ளி
மாரத்தஹள்ளி- சில்க் போர்டு சந்திப்பில் உள்ள மேம்பாலத்தில் தண்ணீர் தேங்கி வாகன போக்குவரத்துக்கு லாயகற்றதாக மாறிவிட்டது. இந்த நிலையில் கனமழையிலும் பணிக்கு ஏராளமான ஐடி நிறுவன ஊழியர்களும் தனியார் ஊழியர்களும் பைக்கில் சென்றுக் கொண்டிருந்தனர்.

சில்க் போர்டு சந்திப்பு
அப்போது அந்த சந்திப்பு சாலையில் தேங்கியிருந்த தண்ணீரில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் தடுமாறி விழுந்தார். அப்போது அவர் தண்ணீரில் தத்தளிப்பதை கண்ட அங்கிருந்த காவலர்கள் அந்த நபரை மீட்டனர். இந்த மழையால் மத்திய பட்டு வாரியம் (சில்க் போர்டு)- கே.ஆர். புரம் இடையே உள்ள அவுட்டர் ரிங் ரோடில் அரை மில்லியனுக்கும் அதிகமாக தொழில் வல்லுநர்கள் பணிபுரிவதாக கூறப்படுகிறது.

பெங்களூர் சாலைகளில் தண்ணீர்
சுமார் 17 கி.மீ. நீளமுள்ள இந்த சாலையில் பல்வேறு சேவைகள் மற்றும மறைமுக வேலைவாய்ப்புகளுடன் 10 லட்சம் பேர் பணிபுரிகிறார்கள். இந்த சாலையில் தண்ணீர் தேங்கியதால் அங்குள்ள நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் 5 மணி நேரமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் 225 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக அவுட்டர் ரிங் ரோடு நிறுவனங்களின் சங்கங்கள் கர்நாடகா அரசுக்கு கடிதம் எழுதியுள்ளன.

பெங்களூரில் மழை
பல இடங்களில் பாலத்தில் வாகனங்கள் சிக்கியுள்ளதால் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு டிராபிக் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க சாக்கடை மற்றும் வடிகால் வசதிகளை விரைந்து செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். சாலைகளில் உள்ள நடைபாதை மற்றும் வடிகால்களில் உள்ள அடைப்புகளை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications