ஹிஜாப் வழக்கு.. நான் இந்து என்பதால் சர்ச்சையாக்குகிறார்கள்! இஸ்லாமிய மாணவிகளின் வக்கீல் பரபர வாதம்!
பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள பியு கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் காரசார விவாதம் நடைபெற்றது.
கர்நாடகவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து பியு கல்லூரிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மாணவிகள் பலர் இதற்கு எதிராக கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்து ராஜ் அஸ்வதி, நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித், ஜெஎம் காஸி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் இறுதி உத்தரவு வரும்வரை மாணவ, மாணவிகள் மத அடையாளங்களோடு கல்வி நிலையங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இன்று இந்த வழக்கில் கர்நாடக குந்தபுரா இஸ்லாமிய மாணவிகள் சார்பாக மூத்த வழக்கறிஞர் தேவ்தத் காமத் ஆஜர் ஆனார்.

இன்று இந்த வழக்கில் நடந்த வாதத்தில்,
நீதிபதிகள் அமர்வு: இந்த வழக்கு பற்றி செய்தி வெளியிடும் மீடியா அதை பொறுப்புடன் வெளியிட வேண்டும். அமைதியை நிலைநாட்டும் வகையில் செய்தி வெளியிட வேண்டும். நீங்கள் நாட்டின் 4வது தூண் என்பதை மறக்க வேண்டாம்.
மாணவிகள் தரப்பு வழக்கறிஞர் காமத்: இந்த வழக்கு இரண்டு முக்கியமான விஷயங்களை பற்றியது. மாணவ, மாணவியரின் யூனிஃபார்ம் பற்றி கர்நாடக அரசு வெளியிட்டுள்ள உத்தரவால் ஹிஜாப் என்பது சட்டம் 25ன் படி அடிப்படை உரிமை இல்லை என்று கூறி உள்ளது. இது தவறு. அதேபோல் ஹிஜாப் பற்றி கல்லூரி கமிட்டி முடிவு எடுக்கலாம் என்று கூறி உள்ளது. இதுவும் தவறு. இதனால் அரசின் உத்தரவே தவறாகிறது.
நீதிபதிகள்: அவர்கள் மற்ற உயர் நீதிமன்ற வழக்குகளை சுட்டிக்காட்டி குறிப்பிடுகிறார்கள்.

மாணவிகள் தரப்பு வாதம்
மாணவிகள் தரப்பு வழக்கறிஞர் காமத்: அவர்கள் தவறான மேற்கோள்களை காட்டி உள்ளனர். வேறு உயர் நீதிமன்ற வழக்குகள் வேறு விதமான தீர்ப்புகளை வழங்கி உள்ளன.
மாணவிகள் தரப்பு வழக்கறிஞர் காமத்: கேரளா உயர் நீதிமன்றம் AIPMT என்ற வழக்கில் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதித்து உள்ளனர். அதேபோல் மெட்ராஸ் நீதிமன்ற வழக்கில் ஹிஜாப் அணிய அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான தீர்ப்பு விவரங்களை நீதிபதிகள் படித்தனர்.
நீதிபதிகள்: ஆனால் கர்நாடக அரசு தங்கள் உத்தரவில் வேறு இரண்டு தீர்ப்புகளை சுட்டிக்காட்டி உள்ளனரே.

நீதிபதிகள் கேள்வி
மாணவிகள் தரப்பு வழக்கறிஞர் காமத்: அவர்கள் குறிப்பிட்ட ஒரு வழக்கு கேரளாவில் மைனாரிட்டி பள்ளிகள் மாணவிகளை ஹிஜாப் அணிய வற்புறுத்த கூடாது என்பது பற்றியது. அதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. இன்னொரு வழக்கு பம்பாய் வழக்கு. அங்கு பெண்கள் பள்ளியில் இன்னொரு பெண் ஹிஜாப் அணிய வேண்டாம் என்ற தீர்ப்பு. இதற்கும் கர்நாடக வழக்கிற்கும் சம்பந்தம் இல்லை. இதை ஒப்பிட்டு கர்நாடக அரசு உத்தரவிட்டது தவறானது.
நீதிபதிகள்: ஹிஜாப் அணிவது என்பது அடிப்படை உரிமையில் வருமா?
மாணவிகள் தரப்பு வழக்கறிஞர் காமத்: இஸ்லாமில் அடிப்படை விதிகளில் ஒன்றாக ஹிஜாப் உள்ளது. குரானில் ஹிஜாப் அணியும் படி கூறப்பட்டுள்ளது. மேலும் இது அரசியலமைப்பு சட்டத்தின் 25 விதிப்படி அடிப்படை மத உரிமைகளில் ஒன்றாக வரும். அடுத்தவர்களை பாதிக்காத மத உரிமைகள் மீது அரசு தலையிட முடியாது. ஒரு அரசு உத்தரவு மூலம் அரசியலமைப்பு சட்டம் வழங்கி உள்ள மத அடிப்படை உரிமைகளை தடுக்க முடியாது?
நீதிபதிகள்: ஆனால் இந்த சட்ட விதி 25 வழங்கும் உரிமைகள் அனைத்து இடத்திற்கும் பொருந்த கூடியதா?

நான் இந்து
வழக்கறிஞர் காமத்: இந்த வழக்கில் மாணவிகள் வித்தியாசமான யூனிபார்ம் கேட்கவில்லை. அவர்கள் தாங்கள் அணியும் யூனிபார்ம் மீது அதே நிறத்தில் ஹிஜாப் அணிய அனுமதி கேட்கிறார்கள். மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் கூட ஹிஜாப் அணிய ஆதரவாக விதி உள்ளது. யூனிபார்ம் நிறத்தில் ஹிஜாப் அணிய அனுமதி வழங்கி உள்ளனர்.
தொடர்ந்து சட்ட விதி 25 குறித்து நீதிபதி காமத் விளக்கினார்.
அதன்பின்இந்த வழக்கில் ஹிஜாப் குறித்து குரானில் குறிப்பிட்டு உள்ளதாகவும் மாணவிகள் தரப்பு வழக்கறிஞர் காமத் குறிப்பிட்டார். இதற்கான குரான் வசனங்களை மாணவிகள் தரப்பு வழக்கறிஞர் காமத் படித்து காட்டினார்.
அதன்பின் பேசிய காமத்: நான் ஒரு இந்து. ஆனாலும் குரான் வாசகங்களை பற்றி பேசுகிறேன். அதை எடுத்துக்காட்டுகிறேன். ஒரு வழக்கறிஞராக என்னுடைய பணியை செய்கிறேன். ஆனால் இதையும் கூட வெளியே சர்ச்சையாக்குகிறார்கள். மீடியா கவனமாக இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் சொன்னது சரிதான் என்று குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications