ஹிஜாப் விவகாரம்.. கர்நாடகாவில் +1, +2 வகுப்புகள் பிப். 16 முதல் தொடக்கம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் +1, +2 வகுப்புகள் மற்றும் கல்லூரிகளுக்கு வரும் புதன்கிழமை (பிப். 16) முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்

கர்நாடகாவில் உள்ள பல்வேறு கல்லூரிகளிலும் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் உடை அணிந்து வர எதிர்ப்பு கிளம்பியது. உடுப்பி, மங்களூர், சிக்மங்களூர், சிவமொக்கா மாவட்டங்களில் ஹிஜாப் விவகாரம் பூதாகரமாகியுள்ளது.

Hijab Row Karnataka Classes 11-12 To Reopen On Wednesday

அங்குள்ள பல பியூ கல்லூரிகளும் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டது. கல்லூரிகளின் இந்த உத்தரவை எதிர்த்து இஸ்லாமியப் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் முஸ்லீம் மற்றும் இந்துத்துவ மாணவர்களுக்கு இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இதன் காரணமாகப் பதற்றத்தைத் தணிக்க அங்குக் கடந்த வாரம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இது தொடர்பான வழக்கில் கர்நாடக ஐகோர்ட் ஹிஜாப், காவி உடை என எதையும் கல்வி நிலையங்களுக்கு அணிந்து வரக்கூடாது என்று உத்தரவிட்டது.

கர்நாடகாவில் இன்று (பிப்.14) முதல் ஏற்கனவே, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனிடையே இதர வகுப்புகளைத் திறப்பது குறித்த அறிவிப்பை அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

அதாவது +1, +2 வகுப்புகள் மற்றும் கல்லூரிகளுக்கு வரும் புதன்கிழமை (பிப். 16) முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். ஹிஜாப் விவகாரத்தில் விரைவில் நிலையான வழிபாட்டு நடைமுறைகள் வெளியிடப்படும் என்றும் பசவராஜ் பொம்மை அறிவித்தார்.

அதே நேரத்தில் இந்த விஷயத்தில் "அனைவரும் உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும்" என்பதையும் அவர் வலியுறுத்தினர். இது தொடர்பாகக் கர்நாடக கல்வித் துறை அமைச்சருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பசவராஜ் பொம்மை இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+