வங்கி சேவைகளில் ஹிந்தி திணிப்பு.. விழித்துக் கொண்ட கர்நாடகா.. கொந்தளிக்கும் கன்னடர்கள்
பெங்களூர்: வங்கிகளில் மெல்லமெல்ல ஹிந்தி திணிப்பு நடைமுறைப்படுத்தப்படுவதை எதிர்த்து கன்னட அமைப்பினர் மற்றும் கன்னட ஆர்வலர்கள் பொங்கி எழ ஆரம்பித்துள்ளன.
ஹிந்தி திணிப்புக்கு எதிராக எப்போதுமே முன்னால் நிற்கக்கூடிய மாநிலம் தமிழகம்.
சமீப காலமாக ஹிந்தி திணிப்பு அதிகரித்து வரும் நிலையில், கர்நாடகாவும் இந்த போராட்ட பட்டியலில் சேர்ந்துள்ளது.
பெங்களூர் மெட்ரோ நிலையங்களில் ஹிந்தியில் எழுதப்பட்ட வாக்கியங்களை தார்பூசி அழித்தனர் கன்னட அமைப்பினர். சமீபகாலமாக ஹிந்தி திணிப்புக்கு எதிரான விழிப்புணர்வு கர்நாடக மக்களிடையேயும் அதிகரித்து வருகிறது.

வங்கிகளில் ஹிந்தி திணிப்பு
இதன் ஒரு பகுதியாகத்தான் வங்கிகளில் நிகழ்த்தப்படும் ஹிந்தி திணிப்புக்கு எதிராக மக்கள் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனர். கர்நாடகாவில். வங்கிகளின் ஏடிஎம் மெஷின்கள், டெபாசிட் ஸ்லிப்புகள், பணம் பெறக்கூடிய சலான்கள், கால் சென்டர்கள் உள்ளிட்டவற்றில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகள்தான் பயன்படுத்தப்படுகின்றன. உள்ளூர் மொழி கன்னடம் பயன்படுத்தப்படவில்லை. இதுதான் இந்த கொந்தளிப்புக்கு காரணம்.
|
சமூக வலைத்தளங்கள்
எங்கள் மொழியில் சேவை கொடுங்கள் என்ற முழக்கத்துடன் சமூக வலைத்தளங்களில் #ServeInMyLanguage ஹேஷ்டேக், வைரலாகி வருகிறது. அதில், இந்தி மொழி, வங்கிகளில் எப்படி எல்லாம் திணிக்கப்படுகிறது என்றும்.. ஹிந்தி தெரியாதவர்கள் ஒரு அவசரத்துக்கு சேவைகளை பெற முடியாமல் எப்படியெல்லாம் தவிக்கிறார்கள் என்று விளக்கமாக தெரிவித்து வருகின்றனர்.
|
டெல்லியில் முடியுமா
டெல்லியில் கன்னட மொழியில் எழுத்துக்கள் இடம் பெற முடியுமா. அங்கு மட்டும் 2 மொழிகள். கர்நாடகாவில் மட்டும் ஏன் இந்தியோடு சேர்த்து 3 மொழிகள் என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
|
தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில், மைசூரைச் சேர்ந்தவர் ஹிந்தியில் விவரம் தேட வேண்டிய நிலையில் இருப்பது எவ்வளவு பொருத்தமற்றது. அதைத்தான் இவர், ஏன் ஹிந்தி போன்ற அன்னிய மொழியை எங்களிடம் தள்ளுகிறீர்கள். கன்னடம் எங்கே என்று கேட்கிறார்.
|
ஹிந்தி ஆக்டோபஸ்
எல்லா துறைகளிலும் ஆக்டோபஸ் போல ஹிந்தி தனது கரங்களை விரித்தபடி வருகிறது. விரைவில் நமது இடத்தில், நாம் அந்நியராக மாற்றப்படுவோம் என்று பயம் வருகிறது என்கிறார் இந்த நெட்டிசன்.












Click it and Unblock the Notifications