மருத்துவரை கிழித்து போட்ட நீர்யானை! கர்நாடகாவில் நடந்த ஷாக் சம்பவம்! 27 வயசுல இப்படியா நடக்கனும்!
பெங்களூர்: கர்நாடகாவில், கர்ப்பமாக இருந்த நீர்யானைக்கு சிகிச்சையளிக்க வந்த விலங்கு நல மருத்துவரை, நீர்யானை தாக்கி கொன்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நீர்யானை தாக்கியதில் ரத்தம் அதிகமாக வெளியேறியதால் மருத்துவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.
கர்நாடக மாநிலம் சிவமொக்கா தயவரெகொப்பா சிங்கம் மற்றும் புலி சஃபாரியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. நீர்யானை தாக்கியதில் பயிற்சி கால்நடை அதிகாரி டாக்டர் சமீக்ஷா ரெட்டி (27) உயிரிழந்தார்.

என்ன நடந்தது?
பெங்களூரைச் சேர்ந்தவர் டாக்டர் சமீக்ஷா ரெட்டி. இவர், தயவரெகொப்பா சிங்கம் மற்றும் புலி சஃபாரியில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார். இன்றும் கொஞ்ச நாட்களில் இவரது பயிற்சி நிறைவடைய இருந்தது. உடல்நலம் பாதிக்கப்பட்ட சன் கோனூர் பறவைகள் இரண்டின் நலம் கண்காணிக்கும் வேலை இவர் பார்த்து வந்தார். 19ம் தேதி இரவு 10.30 மணியளவில், கர்ப்பிணி நீர்யானை ஒன்றின் உடல் வெப்பநிலையைச் சரிபார்க்க முயன்றார். இந்த பணியில் ஈடுபட்டிருந்த போது,நீர்யானை திடீரென அவரைத் தாக்கியது.
எதிர்பாராத விபத்து
இதை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள், அவரை மீட்டனர். ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை, ஊழியர்கள் சிவமொக்கா தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு, ரத்தப்போக்கு தீவிரமாக இருந்ததால், சிகிக்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை.
கடுமையான காயங்கள்
மருத்துவர்கள் இது குறித்து கூறுகையில், அவருக்கு ஆழமான காயங்கள் ஏற்பட்டு அதிக இரத்தப்போக்கு இருந்ததாகவும், இதனால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது என்றும் கூறியுள்ளனர். இது மாரடைப்புக்கு வழிவகுத்தது. நேற்று காலை 6.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி சமீக்ஷா ரெட்டி உயிரிழந்தார். சமீக்ஷா ரெட்டி பயிற்சி கால்நடை அதிகாரியாகப் பணிபுரிந்ததோடு, அவருக்கு மேலும் 45 நாட்கள் பயிற்சி இருந்தது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அமைச்சர் உத்தரவு
வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே, உயிரிழந்த சமீக்ஷா ரெட்டிக்கு இரங்கல் தெரிவித்து, இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOPs) கண்டிப்பாகப் பின்பற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஒரு குழுவை அமைத்து, அறிக்கை சமர்ப்பிக்கவும் அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே உத்தரவிட்டார். நீர்யானை தாக்கியதில், பயிற்சி மருத்தவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நீர்யானைகள் ஏன் ஆபத்தானவை?
நீர்யானைகள் இயல்பில் மிகவும் ஆபத்தானவை. ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் சிங்கம் தாக்கி மனிதர்கள் உயிரிழப்பதை விட, நீர்யானைகள் தாக்கிதான் அதிக அளவில் மனிதர்கள் உயிரிழக்கிறார்கள். நீர்யானைகள் எந்த முன்னெச்சரிக்கையைின்றி தாக்கும் குணம் கொண்டது. ஒரே கடியில் முதலையைகூட, இரண்டு துண்டாக்கிவிடும் வலிமை கொண்டது. எனவேதான் நீர்யானைகள் மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications