"நிர்வாணம்!" திடீரென வந்த வீடியோ கால்.. பட்டென எடுத்த பாஜக எம்எல்ஏவுக்கு சிக்கல்? போலீசில் புகார்
பெங்களூர்: கர்நாடகாவில் பாஜக எம்எல்ஏ ஒருவர் தனக்கு வந்த ஒற்றை வீடியோ காலால் மிரண்டு போய் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இப்போது பதற்றத்துடன் காத்திருக்கிறார்.
டெக் உலகில் நமக்கு நன்மைகள் எந்தளவுக்கு இருக்கிறதோ, அதே அளவுக்கு மோசடி சம்பவங்களும் கூட தொடர்ந்து அரங்கேறிக் கொண்டே தான் இருக்கிறது.
தொழில்நுட்பத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரியாதவர்களைக் குறிவைத்தே இந்த மோசடிகள் அரங்கேறுகின்றன. இதனால் பணத்தை இழப்பது மட்டுமின்றி அவர்கள் பண நிம்மதியையும் இழக்கின்றனர்.

சைபர் மோசடி
நமக்கு ஃபோன் செய்து கார்டின் மீது இருக்கும் நம்பரை சொல்லச் சொல்லி முன்பெல்லாம் இந்த மோசடி நடந்து வந்தது. இப்போது மோசடி பேர்வழிகளும் பல வகைகளில் அப்டேட் ஆகிவிட்டனர். கலெக்டர், அரசியல் பிரபலம் அல்லது சினிமா பிரபலங்களின் பெயரில் போலியான பேஸ்புக் கணக்குகளை உருவாக்கி, அதில் இருந்து பணத்தைக் கேட்கும் மோசடிகளும் பல இடங்களில் நடந்து உள்ளன.

புதுவித மோசடி
இதற்கிடையே இப்போது புது வகையான மோசடி சம்பவம் அரங்கேறத் தொடங்கி உள்ளன. அதாவது யாரென்றே தெரியாது நம்பர்களில் இருந்து நமக்கு வாட்ஸ்அபில் வீடியோ கால் வரும். அதே நாம் எடுத்தால் எதிர்த் தரப்பில் நிர்வாணமாகப் பெண் ஒருவர் இருப்பார். இந்த வீடியோ காலை ரெக்கார்ட் செய்து கொள்ளும் அவர்கள், இதை வைத்து பிளாக்மெயில் செய்யும் சம்பவங்களும் நடப்பதாகப் புகார் அளித்து உள்ளனர்.

கர்நாடகா பாஜக எம்எல்ஏ
அப்படித்தான் கர்நாடகா பாஜக எம்எல்ஏ ஜி.எச்.திப்பா ரெட்டி என்பவருக்கும் ஒரு சம்பவம் நடந்து உள்ளது. இந்தச் சம்பவம் கடந்த அக். 31ஆம் தேதி நடந்து உள்ளது. தன்னை சிலர் ஹனிட்ராப் செய்ய முயன்றதாக அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அன்றைய தினம் எம்எல்ஏ திப்பா ரெட்டிக்கு அடையாளம் தெரியாத நம்பரில் இருந்து வீடியோ கால் வந்து உள்ளது.

வீடியோ கால்
வழக்கமான வீடியோ கால் தான் என அவர் எடுத்துப் பேசிய நிலையில், எதிர்புறத்தில் இருந்த பெண் நிர்வாணமாக இருந்து உள்ளார். ஆபாசமான செயல்களிலும் அந்த பெண் ஈடுபட்டு இருக்கிறார். இதையடுத்து திப்பா ரெட்டி உடனடியாக அந்த வீடியோ காலை துண்டித்து உள்ளார். இருப்பினும், சில நிமிடங்களில் வீடியோ காலின் ஸ்கீரீன் ரெக்காட்டிங் அவரது மொபைலுக்கு அடையாளம் தெரியாத நம்பரில் இருந்து வந்துள்ளது. இதைப் பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

ஆபாசம்
அதன் பின்னர் பணம் கேட்டோ அல்லது பிளாக்மெயில் செய்யும் வகையிலோ எந்த ஒரு போன் காலும் வரவில்லை என்றாலும் கூட, முன்னெச்சரிக்கையாகத் தன்னை சிலர் ஹனிட்ராப் செய்ய முயன்றதாகப் புகார் அளித்து இருக்கிறார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்!












Click it and Unblock the Notifications