ஒரு பக்கம் தண்ணீர் பஞ்சம்.. மறுபக்கம் சுட்டெரிக்கும் வெயில்- கதறும் பெங்களூர் மக்கள்! கோடை மழை எப்போ
பெங்களூர்: அண்டை மாநிலமான கர்நாடக தலைநகர் பெங்களூரில் வரலாறு காணாத வெப்பம் பதிவாகி உள்ளது. இது பெங்களூர் மக்கள் வாழ்க்கை முறையையே முழுமையாக மாற்றிப் போடுவதாக இருக்கிறது.
பெங்களூர் ஏற்கனவே தண்ணீர்ப் பஞ்சத்தால் தள்ளாடும் நிலையில், இப்போது வரலாறு காணாத அதீத வெப்பமும் பெங்களூர்வாசிகளை வாட்டி வதைக்கிறது.

வெப்பம் உச்சத்தில் இருப்பதால் பகல் நேரங்களில் வெளியே வரத் தயங்கும் மக்கள் மாலை நேரங்களிலேயே வெளியே வருகிறார்கள். இது பெங்களூர் அதீத வெப்பத்தால் எந்தளவுக்குக் கடுமையாகப் பாதித்துள்ளது என்பதையே காட்டுகிறது.
பெங்களூர் வானிலை: கடந்த சில நாட்களாகப் பெங்களூரில் பகல் நேரத்தில் வெப்பம் உச்சத்தில் இருக்கிறது. அங்கு இப்போது வெப்பம் 38 டிகிரியை தொட்டுவிட்டது. ஏப்ரல் மாதம் கடந்த 2016ல் அதிகபட்சமாக 39.2 டிகிரி வெப்பம் பதிவான நிலையில், இந்த முறை அதை விட அதீத வெப்பம் பதிவாகும் என அஞ்சப்படுகிறது. பெங்களூரில் வழக்கமாகப் பதிவாகும் வெப்பத்தைக் காட்டிலும் குறைந்தது மூன்று டிகிரி வரை வெப்பம் அதிகமாகப் பதிவாகி உள்ளதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
வெப்பம் இந்தளவுக்கு ஏன் அதிகரிக்கிறது என்பதை விளக்கிய ஆய்வாளர் புவியரசன், "கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் பெங்களூரில் குறைந்த மழையே பெய்துள்ளது.. குளிர் காலத்திலும் வழக்கமான அளவுக்கு மழை பெய்யவில்லை. காலநிலை மாற்றம் மற்றும் எல் நினோ நிலைமை காரணமாகவே பருவமழை குறைந்து இருக்கிறது. விரிவான நகர மயமாக்கலும் கூட வெப்பம் வேகமாக அதிகரிக்கக் காரணமாக இருக்கிறது" என்றார்.
கதறும் மக்கள்: திடீரென அதிகரித்துள்ள வெப்பத்தால் பொதுமக்கள் தங்கள் அன்றாட திட்டங்களை மொத்தமாக மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பெங்களூர்வாசிகள் இது குறித்துக் கூறுகையில், "இந்த வெப்பம் எனது முழு வழக்கத்தையும் மாற்றிவிட்டது. நான் மாலை 4 மணியளவில் நடைப்பயிற்சிக்குச் செல்வேன். இப்போது வெளியே கால் வைக்க முடியாத அளவுக்கு வெப்பம் அதிகமாக இருக்கிறது. இதனால் ஏசியிலேயே உட்கார வேண்டி இருக்கிறது. நான் 10 ஆண்டுகளாகப் பெங்களூரில் வசித்து வருகிறேன். இதுபோன்ற வெப்பத்தைப் பார்த்தே இல்லை" என்றார்.
இரவிலும் வெப்பம் உச்சம்: பெங்களூரில் ஏற்கனவே தண்ணீர் பஞ்சம் மிக மோசமாக இருக்கும் நிலையில், அத்துடன் இந்த அதீத வெப்பமும் நிலைமையை மிக மோசமானதாக மாற்றுவதாகப் பெங்களூர் மக்கள் கூறுகிறார்கள். பகல் நேரம் மட்டுமின்றி பெங்களூரில் இப்போது இரவு நேரங்களிலும் வெப்பம் உச்சத்தில் இருக்கிறது. இதனால் இரவு வீடுகளில் தூங்க முடியாத சூழல் நிலவுகிறதாம்.
மழை இருக்கு: டெல்லி, குருகிராம் பகுதிகளுக்கு இணையான வெப்பம் பெங்களூரில் இரவு நேரத்தில் நிலவுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அடுத்த மாதம் வெப்பம் மேலும் மோசமடையுமோ என்று மக்கள் கதறுகிறார்கள். ஆனால், வெப்பத்திற்குக் குட்டி பிரேக் விடும் வகையில் கொஞ்சம் மழை வரும் என்ற நல்ல செய்தியை வானிலை மையம் கூறியுள்ளது. ஏப்ரல் 14 ஆம் தேதியை ஒட்டி மழை வரும் என்று கூறப்படுகிறது.
பெங்களூரு மற்றும் தெற்கு உள் கர்நாடகாவில் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் இருந்து இடியுடன் கூடிய கோடை மழை பெய்யும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெயிலால் மக்கள் திண்டாடும் நிலையில், இந்த கோடை மழை சற்றே நிம்மதி தருவதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications