வாலாட்டிய வீட்டு ஓனர்.. மாற்றி யோசித்த பெங்களூர் இளைஞர்! ஒரு பைசா கூட குறையாமல் டெபாசிட் வந்துடுச்சு
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூரில் வீட்டு ஓனர் ஒருவர் டெபாசிட் தொகையைத் தராமல் இழுத்தடித்துள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் கோபமடைந்த இளைஞர், ஓனருக்கு சரியான பாடம் புகட்டியுள்ளார். அதன் பிறகு ஒரு பைசா கூட பிடித்தம் செய்யாமல் முழு டெபாசிட் தொகையையும் ஓனர் கொடுத்துவிட்டாராம். இது குறித்த பதிவு டிரெண்டாகி வருகிறது.
பெங்களூரில் வீட்டு ஓனர்களுக்கும் வாடகைதாரர்களுக்கும் இருக்கும் பஞ்சாயத்து எப்போதுமே ஓயாது. குறிப்பாக வீட்டைக் காலி செய்யும்போது அது இது எனச் சொல்லி டெபாசிட் தொகையைத் தராமல் இழுத்தடிப்பார்கள். அல்லது ஓவராக பிடித்தம் செய்து கொள்வார்கள். அப்படித் தான் பெங்களூரில் வீட்டு ஓனர் டெபாசிட் தொகையைத் திருப்பித் தராமல் இழுத்தடித்துள்ளார்.

டெபாசிட் தொகை
இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் குழம்பிப் போன இளைஞர் கடைசியில் ஒரு காரியத்தைச் செய்துள்ளார். அதன் பிறகு டெபாசிட் தொகை ஒரு பைசா கூட குறைக்காமல் ஓனர் கொடுத்துவிட்டாராம். இது தொடர்பாக அந்த இளைஞர் பதிவிட்ட போஸ்ட் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.
கொரோனா காலத்தில் எல்லாருமே பெருநகரங்களில் உள்ள தங்கள் வீடுகளைக் காலி செய்துவிட்டு, ஒர்க் ப்ரம் ஹோம் வாங்கி சொந்த ஊர்ப் பக்கம் போனது அனைவருக்குமே தெரியும். இதனால் பெங்களூரில் பல வீடுகள் காலியானதால் வீட்டு வாடகை கணிசமாகக் குறைந்தது. அந்தக் காலகட்டத்தில் மாதத்திற்கு ₹55,000 வாடகையில் ஒரு முக்கிய இடத்தில் 3.5 BHK பிளாட்டை வாடகைக்கு எடுத்துள்ளார்.
காலி செய்ய முடிவு
கொரோனா எல்லாம் முடிந்த பிறகு சில ஆண்டுகளில் மீண்டும் மக்கள் சொந்த ஊருக்கே திரும்ப ஆரம்பித்தனர். இதனால் வீட்டு உரிமையாளர் வாடகையை ₹78,000ஆக உயர்த்த முடிவு செய்தார். இந்த உயர்வு அதிகமாக இருந்தாலும், அப்போது கிட்டத்தட்ட எல்லா ஹவுஸ் ஓனர்களும் இதையே தான் செய்துள்ளனர். இதனால் அந்த இளைஞர் எதுவும் சொல்லவில்லை. தனக்கு இந்த வாடகை கட்டுப்படியாகாது என்பதால் அவர் வீட்டைக் காலி செய்து கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
ஏகப்பட்ட பிடித்தம்
வீட்டு ஒப்பந்தத்தில் இருந்தபடி 45 நாட்கள் நோட்டீஸ் காலத்திற்குள் வீட்டைக் காலி செய்வதாக ஓனரிடம் கூறியதாக ரெட்டிட் பக்கத்தில் கூறியிருக்கிறார். இப்படிச் சொன்னவுடனேயே ஓனரின் அணுகுமுறை மாறிவிட்டதாம். வீட்டைக் காலி செய்ய ஒரு வாரம் இருந்தபோது வந்து, பெயிண்டிங்கிற்கு ₹40,000, பாத்ரூம் சுத்தம் செய்ய ₹7,000 கழித்துக் கொள்வேன் எனச் சொல்லி இருக்கிறார். மேலும், வீட்டைக் காலி செய்த பிறகு பிற சேதங்களை ஆய்வு செய்து அதற்கேற்ப பிடித்தம் செய்யப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இதைக் கேட்டதும் இளைஞர் மிரண்டுவிட்டார். ஆனாலும் அப்போதும் பொறுமையாகவே இருந்துள்ளார். வீட்டைக் காலி செய்ய 3 நாட்கள் இருந்தபோது வந்து, தேய்மானத்திற்கு ₹38,000 கழித்துக் கொள்வேன் எனச் சொல்லியுள்ளார். இதை அந்த இளைஞரால் ஏற்கவே முடியவில்லை. இது தொடர்பாக அந்த இளைஞர் ரெட்டிட் பக்கத்தில், "இப்போது தான் அவருக்கு எனது டெபாசிட் தொகையைத் திரும்பத் தர வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்பது எனக்குப் புரிந்தது.
இழுத்தடித்த ஓனர்
வீட்டை விட்டு காலி செய்து 40 நாட்களுக்குப் பிறகும் டெபாசிட் தொகையைத் தராமல் இழுத்தடித்தார். ஓனரிடம் நேரடியாகவே சென்று கேட்டுப் பார்த்தேன். ஆனால், அவர் அந்தத் தொகையைக் கொடுப்பதாகத் தெரியவில்லை. அது இது எனப் பணத்தைத் தராமல் இழுத்தடித்தார். சம்பந்தமே இல்லாத பிடித்தங்களைச் சொன்னார். இதனால் எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. அவரது ஸ்டைலில் பதில் சொன்னால் தான் புரியும் என்பதை உணர்ந்தேன்.
தரமான சம்பவம்
எனது ஓனர் ராணுவ பின்னணி கொண்டவர் என்பது எனக்குத் தெரியும். அதை விசாரித்து, அவரது உயர் அதிகாரிகளை அணுகினேன்.. அந்த முன்னாள் அதிகாரி தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்வதாக ஆதாரங்களுடன் புகாரளித்தேன். இது நடந்து சில நாட்களிலேயே ஒரு பைசா கூட பிடித்தம் இல்லாமல் முழு டெபாசிட் தொகையையும் வீட்டு ஓனர் திருப்பிக் கொடுத்தார்" என்று பதிவிட்டுள்ளார்.. சரியாக பாடம் புகட்டிய அந்த இளைஞரை நெட்டிசன்கள் பாராட்டித் தள்ளி வருகிறார்கள்.
-
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications