‛தகிக்கும் பெங்களூர்’.. 8 ஆண்டில் மிகமோசமான 2 நாள் இதுதான்! குளுகுளு சிட்டி ஹாட்டாக மாறியது எப்படி?
பெங்களூர்: கடந்த 8 ஆண்டுகளில் 2வது அதிகபட்ச வெப்பநிலை நேற்று பெங்களூரில் பதிவானது. குளுகுளு சிட்டி என பெயர் பெற்ற பெங்களூர் ஹாட் சிட்டியாக மாறியுள்ள நிலையில் அதன் பின்னணியில் உள்ள 3 காரணங்கள் குறித்த விபரம் வெளியாகி உள்ளது.
பெங்களூர்.. கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருக்கு பல புனைப்பெயர்கள் உள்ளன. கார்டன் சிட்டி, சிலிக்கான் வேலி என்ற பெயர்களுடன் அழைக்கப்படும் பெங்களூர் குளுகுளு சிட்டி என பெயர் பெற்றிருந்தது.

ஆனால் இந்த ஆண்டு நிலைமை என்பது முற்றிலும் மாறிவிட்டது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் பெங்களூரில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக பெங்களூர் சிட்டியில் பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் அதள பாதாளத்துக்கு சென்றுவிட்டது. சில இடங்களில் போர்வெல்லில் தண்ணீர் முற்றிலும் இல்லாத நிலை உள்ளது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் டேங்கர்களில் தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க தற்போது கோடை மழையும் பெய்யவில்லை. இதனால் வெயில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இந்த மாதம் அதிகபட்சமாக 37.6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி இருந்தது. ஆனால் நேற்றைய தினம் வெப்பநிலை புதிய உச்சம் தொட்டது. அதாவது நேற்று பெங்களூரில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை தொட்டது. இது கடந்த 8 ஆண்டுகளில் பதிவான 2வது அதிகபட்ச வெப்பநிலையாகும். அதாவது கடந்த 2016ம் ஆண்டில் 39.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. அதற்கு அடுத்தப்படியாக நேற்று தான் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.
அதோடு கடந்த 10 ஆண்டுகளில் இந்த ஏப்ரல் மாதம் அதிக வெப்பமான மாதமாக பெங்களூரில் அமைந்துள்ளது. அதாவது இந்த மாதத்தில் மட்டும் 10 நாட்கள் வெப்பநிலை என்பது 37 டிகிரி செல்சியஸை தாண்டி பதிவாகி உள்ளது. மேலும் பெங்களூரில் தொடர்ந்து வெப்பநிலை அதிகரிக்க முக்கிய காரணம் பருவமழை பொய்த்து போனது தான் என கூறப்படுகிறது. ஆனாலும் கூட இன்னொரு முக்கிய காரணமும் உள்ளது.
இதுபற்றி பெங்களூரில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், ‛‛எல் நினோ மற்றும் பூமி வெப்பமயமாதல் ஆகியவற்றால் பெங்களூரில் வெயில் அதிகரித்து வருகிறது. இருப்பினும் பெங்களூரில் மே மாதம் தொடக்கத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதாவது மே மாதம் 2ம் தேதி கோடை மழைக்கான வாய்ப்புள்ளது.
கர்நாடகாவில் பல மாவட்டங்களில் ஏப்ரல் 30ம் தேதி முதல் மழை பெய்வதற்கான சான்ஸ் இருந்தாலும் கூட பெங்களூர் மே மாதம் 2ம் தேதி வரை காத்திருக்க வேண்டியது அவசியமாகும். அதுவரை தொடர்ந்து பெங்களூரில் வெயில் அதிகமாக தான் இருக்கும். இருப்பினும் இன்றைய தினம் பெங்களூரில் அதிகபட்ச வெப்பநிலை என்பது 37 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் '' என தெரிவித்துள்ளது.
-
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
மேகதாது அணை.. கட்டியே ஆக வேண்டும்.. டெல்லிக்கு சென்ற டி.கே. சிவகுமார்.. தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது? -
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!











Click it and Unblock the Notifications