பெங்களூரில் அலறி ஓடிய கஸ்டமர்! ராமேஸ்வரம் கஃபேவில் வெடிகுண்டு வெடித்தது எப்படி? வெளியான ஷாக் வீடியோ
பெங்களூர்: பெங்களூரில் உள்ள பிரபல ராமேஸ்வரம் கஃபேயில் இன்று வெடிகுண்டு வெடித்தது. இதில் பெண் உள்பட 9 பேர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தான் கஃபேயில் வெடிகுண்டு வெடித்தபோது சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வீடியோவாக வெளியாகி அதிர வைத்துள்ளன.
பெங்களூர் ஒயிட்பீல்ட்டில் உள்ள ப்ரூக்பீல்ட் பகுதியில் ராமேஸ்வரம் கஃபே எனும் பிரபலமான உணவகம் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் அமைந்துள்ளன. இவர்கள் மதிய வேளையில் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் உணவு சாப்பிடுவது வழக்கம்.

இதனால் தினமும் மதிய வேளையில் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கூட்டம் அலைமோதும். அதேபால் இன்று மதியமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் உணவகத்தில் இருந்தனர். அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது.
இந்த வேளையில் மதியம் சுமார் 12.55 மணியளவில் சாப்பிட்ட பிறகு பிளேட்டுகளை வைக்கும் இடத்தில் திடீரென்று பயங்கர சத்தத்துடன் மர்மபொருள் வெடித்து சிதறியது. அடுத்த நொடியில் புகை கிளம்பி உணவகம் முழுவதும் பரவியது. இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர்.
CCTV footage of blast in Rameshwaram Cafe in Bengaluru. pic.twitter.com/NDSkpKvzkx
— Anshul Saxena (@AskAnshul) March 1, 2024
மேலும் சிலர் மர்மபொருள் வெடித்து படுகாயமடைந்தார்கள். உணவக ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என பெண் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி தகவல் அறிந்தவுடன் பெங்களூர் உயர் போலீஸ் அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள், என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் உணவகத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை அந்த உணவகத்தில் வெடித்தது எந்த பொருள் என்று போலீசார் தகவல் தெரிவிக்கவில்லை.
Another CCTV footage of blast in Rameshwaram Cafe in Bengaluru. pic.twitter.com/rca2vN6GMG
— Anshul Saxena (@AskAnshul) March 1, 2024
இருப்பினும் ராமேஸ்வரம் கஃபேயில் வெடித்தது வெடிகுண்டுதான் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இதற்கிடையே தான் தற்போது ராமேஸ்வரம் கஃபேயில் வெடிகுண்டு வெடித்தது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், உணவகத்தில் சாப்பிட்ட பிளேட்டுகளை வைக்கும் இடம் உள்ளது. அதில் ஊழியர் ஒருவர் நிற்கிறார். அப்போது பெண் வருகிறார். இந்த வேளையில் இன்னொரு ஊழியர் பிளேட்டை கொண்டு வந்து ரேக்கில் வைக்கிறார்.
அதன்பிறகு அந்த பெண் அங்கிருந்து புறப்பட்டு செல்லும் நிலையில் வெடிகுண்டு வெடிக்கிறது. இந்த அதிர்வில் உணவகத்தில் வாடிக்கையாளர்கள் வரிசையாக செல்லும் வகையில் வைக்கப்பட்டு இருந்த தடுப்புகள் கீழே விழுகின்றன. அடுத்த நொடியில் உணவகம் முழுவதும் கரும்புகை நிரம்பும் நிலையில் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓடுவது உணவகத்தில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோ தான் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications