கர்நாடகா முதல்வராக சித்தராமையா தேர்வானது எப்படி தெரியுமா? காரணம் இதுதான்.. போட்டுடைத்த சீனியர் தலை
பெங்களூர்: கர்நாடகாவின் அடுத்த முதல்ரவாக காங்கிரஸ் சார்பில் சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சற்று நேரத்தில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் நிலையில் டிகே சிவக்குமாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் சித்தராமையாவை காங்கிரஸ் கட்சி எப்படி முதல்வராக தேர்வு செய்தது பற்றி முக்கிய புள்ளி விளக்கம் அளித்துள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. 135 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதால் அதனை பாஜகவால் எள்ளவும் அசைக்க முடியாத நிலை உள்ளது. இந்த தேர்தலில் பாஜக 66 இடங்களில் மட்டுமே வென்றது. மாறாக ஜேடிஎஸ் கட்சி 19 இடங்களிலும் மற்றவர்கள் 4 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் தான் கர்நாடகா முதல்வர் பதவிக்கான ரேஸில் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது. டெல்லியில் இன்று ராகுல் காந்தி சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமாரை தனித்தனியே சந்தித்து பேசினார். நேற்று மல்லிகார்ஜூன கார்கே இருவரிடமும் தனித்தனியே பேசிய நிலையில் இந்த சந்திப்பு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
மேலும் தேர்தல் முடிவு வந்து இன்றுடன் 4வது நாள் ஆகும் நிலையில் முதல்வர் பொறுப்பை இருவரில் யாருக்கு வழங்குவதில் என்பதில் குழப்பம் நீடித்ததால் இன்றைய ராகுல் காந்தி உடனான சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதோடு இன்று அடுத்த கர்நாடகா முதல்வரின் பெயர் இறுதி செய்யப்படும் என்ற தகவலும் வெளியானது.
அதன்படி ராகுல் காந்தி உடனான சந்திப்பின்போது சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. மாறாக டிகே சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவிழ கொடுப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் சித்தராமையாவின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மாறாக டிகே சிவக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இந்நிலையில் தான் சித்தராமையா எப்படி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார் என்பது பற்றி கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சதீஷ் ஜார்கிகோளி விளக்கிஉள்ளார். பெலகாவி மாவட்டம் எமகனமரடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சதீஷ் ஜார்கிகோளி, சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர். இந்நிலையில் தான் கர்நாடகா முதல்வர் பதவிக்கு சித்தராமையா தேர்வு செய்யப்பட்டத எப்படி என்பது பற்றி விளக்கி உள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
கர்நாடகாவில் தேர்தல் முடிந்த கையோடு எம்எல்ஏக்களின் சபை நடந்தது. இந்த கூட்டத்தில் அடுத்த முதல்வராக யார் வேண்டும் என்பதை தேர்வு செய்யும் வகையில் ரகசிய ஓட்டெடுப்பு நடந்தது. இந்த ரகசிய ஓட்டெடுப்பில் சித்தராமையாவுக்கு அதிகமான எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அந்த அடிப்படையில் தான் அவருக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சித்தராமையாவுக்கு முதல்வராக இருந்த அனுபவம் உள்ளது. முழுமையாக 5 ஆண்டுகள் அவர் முதல்வர் பதவியை நிர்வகித்துள்ளார். அவர் முதல்வராக பதவியில் இருந்தபோது நல்ல முறையில் ஆட்சியை வழங்கினார். இந்த முறையும் அவர் நல்லாட்சி வழங்குவார். இந்த நம்பிக்கை காங்கிரஸ் கட்சிக்கும், மக்களுக்கும் உள்ளது.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications