Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அமித்ஷா தான் சொன்னாரு".. ஜெயிலிலிருந்தே ரூ.200 கோடி பறித்த தில்லாலங்கடி சுகேஷ்.. திகில் திகார்

200 கோடி ரூபாய் வரை பண வசூல் செய்து ஏமாற்றி உள்ளார் சுகேஷ்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: ஜெயிலுக்குள்ளிருந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பெயரை பயன்படுத்தி, செல்போனில் பேசி பேசியே 200 கோடி ரூபாய் வரை பண வசூல் செய்துள்ளார் சுகேஷ் என்ற மோசடி மன்னன்.

பெங்களூருவை சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர்... மோசடி பேர்வழி.. இவர் மீது பல்வேறு மாநிலங்களில் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

தமிழ்நாட்டிலும் தன் வேலையை காட்டியவர்.. இரட்டை இலை சின்னத்தை டிடிவி தினகரனுக்கு பெற்றுத்தர ரூ 50 கோடி லஞ்சம் வாங்கி மோசடி செய்துள்ளார்..

வழக்கு

வழக்கு

இது தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது. ஆனால், இவர் வேறு சில மோசடி வழக்கில் கைதாகி திகாரில் அடைக்கப்பட்டுள்ளார்... அவருக்கு உடந்தையாக இருந்தது, இவருடைய காதலியும் நடிகையுமான லீனா மரியா என்பவர்தான். இப்போது விஷயம் என்னவென்றால், வெளியில் மோசடி செய்துவிட்டுதான் ஜெயிலுக்கு போயுள்ளார், ஆனால், ஜெயிலுக்குள்ளிருந்தே ஸ்கெட்ச் போட்டு 200 கோடி ரூபாய் வரை பணத்தை கறந்துள்ளார்.. இது தொடர்பான செய்திகள்தான் கடந்த 2 நாட்களாகவே வெளியாகி பரபரப்பை தந்து வருகிறது.

 தொழிலதிபர்

தொழிலதிபர்

ஜெயிலுக்குள்ளிருந்து தொழிலதிபர்களுக்கு போன் செய்து, தன்னை ஒரு அரசியல்வாதி என்று சொல்லி கொண்டு பேசுவாராம்.. அப்படியே பேசி பேசி பணத்தையும் கறந்துள்ளார்.. இதில் என்ன வேடிக்கை என்றால், சுகேஷ் ஜெயிலுக்குள்ளிருந்தே, ஜாமீன் பெற்று தருவதாக சொல்லி அவர்களிடம் பணமோசடி செய்துள்ளார்.. இப்படி எத்தனையோ தொழிலதிபர்களை ஏமாற்றி உள்ளார்.

கைது

கைது

அந்த வகையில், போர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் முன்னாள் டைரக்டர் ஷிவிந்தர் சிங் என்பவர் கைதாகி ஜெயிலில் உள்ளார்.. இவரை ஜாமீனில் வெளியே எடுக்க வேண்டும் என்று இவரது மனைவி அதிதி சிங் முயற்சி செய்து வருகிறதார்.. ஆனால், அதற்குள் ஷிவிந்தர் சிங்கை ஜெயிலுக்குள்ளேயே சந்தித்து பேசியுள்ளார் சுகேஷ்.. ஜாமீன் வாங்கி தந்தால், தனக்கு பணம் தர வேண்டும் என்று ஜெயிலுக்குள்ளிருந்தே, ஷிவிந்தர் சிங்கின் மனைவி அதிதி சிங்குடனும் பேசியுள்ளார்..

சாப்ட்வேர்

சாப்ட்வேர்

அப்போதுதான் தன் குரலை மாற்றி கொண்டு பேசியிருக்கிறார்.. இதற்காகவே உள்ள சாப்ட்வேரை பயன்படுத்தி குரல் மாற்றி பேசியிருக்கிறார்.. தான் மத்திய அமைச்சரக அதிகாரி என்று சொல்லி உள்ளார்.. அதாவது முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தின் உதவியாளர், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அலுவலக ஊழியர் என ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பெயரில் குரலை மாற்றி பேசி உள்ளார்.

 அஜய் பல்லா

அஜய் பல்லா

உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரியான அஜய் பல்லாவிடமும், சட்டத்துறை செயலாளராக அனூப்பிடமும் பேசியிருக்கிறேன்.. அவர்கள் இதை பற்றி உங்களுக்கு சொல்வார்.. அதேமாதிரி, இந்த கோரிக்கையை உள்துறை அமைச்சரிடமும் (அமித்) எடுத்து சொல்கிறேன்.. அதற்கு சரியான நேரம் வரும்.. உள்துறை அமைச்சர், உங்களை நேரில் அழைத்து உங்களுடன் பேசும்படி என்னிடம் சொன்னார்" என்றெல்லாம் அதிதியிடம் சுகேஷ் பேசியிருக்கிறார்.

ரிக்கார்ட்

ரிக்கார்ட்

அதிதியும் இவர் சொல்வதை எல்லாம் நம்பி கொண்டு, கிட்டத்தட்ட 200 கோடி வரை சுகேஷூக்கு பணம் அனுப்பியிருக்கிறார். இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த ஜுலை மாதம் அதிதி சிங்கை அமலாக்கத்துறையினர் சந்தித்தபோது, சுகேஷ் பற்றி கூறியுள்ளனர்.. அதை கேட்டு அதிதி அதிர்ச்சி அடைந்துள்ளார்.. நடந்ததை எல்லாம் அவர்களிடம் சொல்லவும், உடனடியாக அதிதியிடம் பேசிய ஆடியோ ரிக்கார்ட் எடுக்கப்பட்டது.. 80க்கும் மேற்பட்ட ஆடியோ கிடைத்தது.. எல்லாமே ஜெயிலில் இருந்துதான் சுகேஷ் பேசியிருக்கிறார்.

அமித்ஷா

அமித்ஷா

அதுமட்டுமல்ல, குறிப்பிட்ட அதிகாரிகளின் உண்மையான செல்போன் நம்பரில் இருந்து, அழைப்பது போல் மோசடி செய்துள்ளார்... ஒருகட்டத்தில் உண்மை தெரிந்துவிட்டது என்று தெரிந்ததும், அதிதி குடும்பத்தினரை மிரட்டவும் செய்திருக்கிறார்.. இறுதியில் அதிதி இது தொடர்பாக போலீசில் புகார் தந்துள்ளார்.. "நான் அவர்களுக்கு 200 கோடியைக் கொடுத்தேன், என் நகைகள், முதலீடுகள் மற்றும் பிற சொத்துகளை பயன்படுத்தினேன். அப்போதும், மிரட்டல் தொடர்ந்தது. அவர்கள் வெளிநாட்டில் படிக்கும் என் குழந்தைகளை சுட்டிக்காட்டியபடியே இருந்தார்கள்" என்று புகாரில் கூறியுள்ளார்.

பரபரப்பு

பரபரப்பு

உண்மையிலேயே இந்த சுகேஷ் விவகாரத்தில், எந்த அதிகாரிகளுக்கும் தொடர்பில்லை.. ஆனால் ஜெயிலுக்குள்ளிருந்தே, அவர்கள் பெயர்களை பயன்படுத்தி, செல்போனில் பேசி ஒரு பெண்ணிடம் 200 கோடி ரூபாயை பறித்துள்ளார் இந்த வசூல்மன்னன் சுகேஷ்.. இவ்வளவும் செய்த சுகேஷ் வெறும் பிளஸ் 2 தான் படித்துள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+