சித்தராமையா vs டி.கே.சிவக்குமார்.. டெல்லியில் நள்ளிரவில் நடந்தது என்ன? அதென்ன 30:30 பார்முலா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வென்றாலும் வென்றது, யார் முதல்வர் என்ற போட்டா போட்டியால் சிக்கித் தவித்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவில் டெல்லியில் சுமூக தீர்வு எட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மிகவும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கர்நாடகா சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வென்று தனிபெரும்பான்மை பெற்றுள்ளது.

அது போல் பாஜக 66 இடங்களிலும் மஜத 19 இடங்களிலும் வென்றுள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவின் முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்த போதே காங்கிரஸ் முன்னணி நிலவரத்தை பார்த்த சித்தராமையாவின் மகன் யதீந்திரா தனது தந்தைக்கு முதல்வர் பதவியை காங்கிரஸ் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

How consensus araised between Siddaramaiah and D.K.Shivakumar

இதற்கு டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முதல்வர் பதவி தந்தால் அது சிவக்குமாருக்குத்தான் கொடுக்க வேண்டும். அவரால்தான் ஒக்கலிகா சமூகத்தினரின் வாக்குகளை பெற முடிந்தது. ஓல்டு மைசூர் பகுதிகளில் மஜதவின் செல்வாக்கை சரியவிட்டு பெரும்பாலான வாக்குகளையும் அள்ளியதற்கு காரணம் டிகே.தான் என வாதம் செய்தனர்.

இதையடுத்து சித்தராமையா ஆதரவாளர்களோ டிகேவுக்கு ஒக்கலிகா சமூகத்தினரிடம் மட்டுமே செல்வாக்கு கொண்டவர். ஆனால் சித்தராமையாவோ குருபர், முஸ்லீம் உள்ளிட்ட சமூகத்தினரால் அறியப்படும் மாநிலம் தழுவிய அரசியல் தலைவர். மேலும் டிகே மீது வழக்குகள் உள்ளன. அதில் அவருடைய முதல்வர் பதவி எப்போது வேண்டுமானாலும் பறிபோகலாம். ஆனால் சித்தராமையா மீது எந்த விதமான அதிருப்திகளும் வழக்குகளும் இல்லை என தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் டெல்லியில் சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் சித்தராமையாவும் டி.கே.சிவக்குமாரும் தனித்தனியே சந்தித்து பேசினர். இதில் காங்கிரஸ் தலைமை சித்தராமையாவையே முதல்வராக்க விரும்பியது. இதையடுத்து டெல்லியில் டி.கே. சிவக்குமாரை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் காங்கிரஸ் தலைமை ஈடுபட்டது.

அந்த வகையில் இதற்கு பலன் கிடைத்துள்ளது. முதல் 30 மாதங்களுக்கு சித்தராமையா முதல்வராக இருப்பார். அடுத்த 30 மாதங்களுக்கு டி.கே. சிவக்குமார் முதல்வராக இருப்பார். அதே சமயம் கர்நாடகாவுக்கு ஒரே ஒரு துணை முதல்வர்தான். அந்த பதவி டி.கே. சிவக்குமாருக்குத்தான் என சமாதானப்படுத்தப்பட்டது. அது போல் டி.கே.சிவக்குமாருக்கு முக்கிய இலாகாக்கள் தரவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

இதுகுறித்து டி.கே.சிவக்குமார் கூறுகையில் காங்கிரஸ் கட்சி கர்நாடகா மக்களுக்கு கடமைப்பட்டுள்ளது. மேலும் நாடு நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கியுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் காந்தி குடும்பத்தினரின் முடிவுக்கு நான் கட்டுப்பட வேண்டிய தார்மீக பொறுப்பு உள்ளது. அதனால்தான் இந்த பார்முலாவுக்கு நான் ஒப்புக் கொண்டேன். சித்தராமையா முதல்வராக இருந்தால்தான் என்ன, பனிக்கட்டி ஒரு கட்டத்தில் உடைந்துதானே ஆக வேண்டும். அதனால் இந்த பார்முலாவை ஏற்றேன். கர்நாடகா மக்கள் நலனுக்காக நான் எனக்கு கொடுக்கப்பட்ட பதவியை ஏற்றேன் என சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

வரும் 30 மாதங்களுக்குள் டி.கே.சிவக்குமார் தன் மீதான வழக்குகளை முடித்துவிட்டு அடுத்த இன்னிங்ஸ்கிற்கு தயாராவார் என தெரிகிறது. இந்த நிலையில் தற்போது டெல்லி தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கர்நாடகா மாநில முதல்வராக சித்தராமையாவையும் துணை முத்லவராக சிவக்குமாரையும் தேர்வு செய்வதாக அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+