Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூரை அடித்து தூக்கும் ஓசூர்.. இன்னொரு பக்கம் மிரண்டு போன சீனா.. எதிர்பார்க்காத அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

ஓசூர்: டாடா குழுமம் ஓசூரில் உள்ள ஐபோன் கேசிங் யூனிட்டின் தற்போதைய ஆலையை விட இரண்டு மடங்கு அளவுக்கு விரிவுபடுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு பட்ஜெட்டில் இந்த வருடம் சென்னைக்கு மட்டுமின்றி வேறு பல மாவட்டங்களுக்கும் முக்கியமான பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. முக்கியமாக பல மாவட்டங்களில் முதலீடுகள் செய்யப்படுவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின.

How Hosur will beat Bangalore soon with the new investments from many fields?

அதன்படி தமிழ்நாட்டில் இந்த வருடம் ரூ100 கோடியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும். விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். இதனால் 22,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஓசூரில் முதலீடு: முக்கியமாக ஓசூரில் முதலீடுகள் குவிந்து வருகின்றன. உதாரணமாக தமிழ்நாட்டில் மின்சார பேட்டரி வாகனங்கள் உற்பத்தி அதிகரித்து உள்ளது. இதற்காக ஓசூரில் கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசுக்கும், ஓலா நிறுவனத்திற்கும் இடையே 7614 கோடி ரூபாய் மதிப்பிலான முக்கியமான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தமிழ்நாடு நான்கு சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்ய ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மேலும் 20 மெகாவாட் மின்கலன்கள் உற்பத்தி திறன் கொண்ட ஆலைகளை அமைக்கவும் ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த சிப்களை உற்பத்தி செய்யும் உலகிலேயே பெரிய ஆலையாக இது இருக்க போகிறது என்று ஓலா நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த ஆலைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள சிப்காட் பூங்காவில் அமைக்கப்படும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டு உள்ளது. இதன் மூலம் 3,111 நபர்களுக்கு வேலை கிடைக்கும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.

அடித்து தூக்கும் ஓசூர்: இந்த ஒப்பந்தத்தை பெற ஹைதராபாத், பெங்களூர் போன்ற நகரங்கள் முயன்றதாக கூறப்படுகிறது. ஏற்கனவே உலகிலேயே மிகப்பெரிய பைக் உற்பத்தி ஆலையை ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரியில் அமைத்தது. அங்கே ஓலா பைக் உற்பத்தியும் நடைபெற்று வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய இருசக்கர மின்சார வாகன உற்பத்தி மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 500 ஏக்கர் பரப்பளவில் இந்த இருசக்கர உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

ஓசூர் டாடா நிறுவனம்: டாடா குழுமம் ஓசூரில் உள்ள ஐபோன் கேசிங் யூனிட்டின் தற்போதைய ஆலையை விட இரண்டு மடங்கு அளவுக்கு விரிவுபடுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

5,000 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட்டு 500 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட ஓசூர் யூனிட்டில் 15,000 பேர் பணிபுரிகின்றனர், விரிவாக்கத்திற்குப் பிறகு 25,000-28,000 ஊழியர்கள் வரை பணியமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா எலெக்ட்ரானிக்ஸ், உயர்தர எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் ஆக்சஸெரீஸ் ஒப்பந்த தயாரிப்பில் அதன் திறனை கணிசமாக விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த நிறுவனம் சமீபத்தில் தான் விஸ்ட்ரானின் ஐபோன் அசெம்பிளி ஆலையை வாங்கியது. இந்த புதிய ஆலை =முற்றிலும் ஆப்பிள் போன் உதிரிபாகங்களுக்கானதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது,.

டாடா எலக்ட்ரானிக்ஸ் ஓசூரில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு ஆலையை விரிவுபடுத்த ஆலைக்கு அருகில் உள்ள நிலத்தை இந்த ஆண்டு மே மாதம் தேடியது. போன் உதிரிபாகங்கள் தயாரிப்பதற்காக ஓசூரில் ஆலையை விரிவுபடுத்த தீவிரமாக முயன்றது. அதற்கான சூழ்நிலை இப்போதுதான் கைகூடி வந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில்தான் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை அதன் விற்பனையாளராக தேர்வு செய்தது, சீனாவிலிருந்து வெளியேறி அதன் உற்பத்தியை வேறு நாடுகளில் செய்ய ஆப்பிள் முயன்று வருகிறது. அதன் ஒரு கட்டமாக ஓசூரில் டாடா உடன் ஆப்பிள் நேரடியாக ஒப்பந்தம் செய்துள்ளது.

ஐபோன் 17 உற்பத்தி: சென்னையில் ஐபோன் 16 உற்பத்தி ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில்தான்

சென்னையில் ஐபோன் உற்பத்தியாளர்கள் 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் iPhone 17 ஐ உருவாக்கத் தொடங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல் முறையாக புதிய ஐபோன் தயாரிப்பு சீனாவிற்கு வெளியே தொடங்கும் என்று ஆப்பிள் ஆய்வாளர் மிங் சி குவோ கூறியுள்ளார். சீனாவில் உற்பத்தி தொடங்கும் முன்பாக சென்னையில் இந்த முறை ஐபோன் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

இதன் மூலம் சர்வதேச ஐபோன் மார்க்கெட்டில் சீனாவை சென்னை முந்தி உள்ளது. சென்னையில் தற்போது சர்வதேச நிறுவனங்கள் முதலீடுகளை அதிகப்படுத்தி வருகிறது. அதிலும் சீனாவில் இருக்கும் நிறுவனங்கள் வேகமாக தமிழகத்தில் முதலீடுகளை பெருக்கி வருகிறது.

பெருகும் முதலீடு: சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க நிறுவனங்கள் சென்னையில் தனது கிளையை தொடங்க ஆலோசனை செய்து வருகிறது.சென்னை தற்போது உலக அளவில் டெலிகாம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களால் குறி வைக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் தற்போது முதலீடுகளை அதிகப்படுத்தி உள்ள பாக்ஸ்கான் நிறுவனம், மொத்தமாக தமிழகத்தில் உற்பத்தியை செய்து வருகிறது. இந்த நிறுவனம்தான் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை அனுப்பி வருகிறது. சீனாவில் பாதி, சென்னையில் பாதி என்று செய்யப்பட்டு வந்த உற்பத்தியை நிறுத்திவிட்டு மொத்தமாக சென்னையில் உற்பத்தியை செய்ய பாக்ஸ்கான் நிறுவனம் முதலீடு செய்து உற்பத்தி செய்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+