சொதப்ப போகுது.. வேண்டாம்.. பாஜகவிற்கு முன்பே போன எச்சரிக்கை.. ரிஸ்க் எடுத்து மாட்டிக்கிட்டாங்களே!
பெங்களூர்: கர்நாடகா தேர்தலை மட்டுமின்றி.. இந்தியாவையே உலுக்கி உள்ள ரேவண்ணா செக்ஸ் வீடியோ விவகாரம் பாஜகவிற்கு எதிராக திரும்பி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக கட்சிக்கு ஏற்கனவே எச்சரிக்கை சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது எச் டி ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் ரேவண்ணாவிற்கு இடம் கொடுக்க கூடாது. அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க கூடாது என்று ஜேடிஎஸ் கட்சி, பாஜக இரண்டிற்கும் எச்சரிக்கை சென்றுள்ளது.

ஆனால் உள்ளூர் நிர்வாகிகள் கொடுத்த இந்த எச்சரிக்கையை இரண்டு பேருமே கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. பிரஜ்வால் ரேவண்ணாவிற்கு கர்நாடகாவில் ஹசன் தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இவருக்கு இடம் கொடுத்தால் அது தேர்தலில் பெரிய அளவில் இடியாக மாறும் என்று உள்ளூர் நிர்வாகிகள் எச்சரித்தும் கூட மோடி பிரஜ்வால் ரேவண்ணாவை சந்தித்து அவருடன் போட்டோவும் எடுத்துள்ளார். பாஜவிற்கு இது பெரிய டேமேஜாக மாறி உள்ளது. முன்பே எச்சரிக்கை வந்தும் இதில் பாஜக சுதாரிக்காமல் இருந்தது அந்த கட்சிக்கே எதிராக மாறி உள்ளது.
என்ன விவகாரம்: ஜேடிஎஸ் எனப்படும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் எச் டி தேவகவுடாவின் பேரன், எச் டி ரேவண்ணாவின் மகன் எம்பி ப்ரஜ்வால் ரேவண்ணாவின் வீடியோக்கள் வடஇந்தியாவிலும் பரவ தொடங்கி உள்ளன.
கர்நாடகாவை உலுக்கிய எம்பி ப்ரஜ்வால் ரேவண்ணாவின் வீடியோக்கள் தற்போது உத்தர பிரதேசம், பீகாரில் தீவிரமாக பரவி வருகிறது. அங்கே உள்ள வாட்ஸ் ஆப் குழுக்களில் இந்த வீடியோக்கள் புயலை கிளப்பி உள்ளன.
பொதுவாக பாஜக கட்சிக்கு கை கொடுப்பதே வாட்ஸ் ஆப்தான். ஆனால் அதே வாட்ஸ் ஆப் தற்போது பாஜகவிற்கு எதிராக திரும்பி உள்ளது. பாஜகவிற்கு எதிராக எம்பி ப்ரஜ்வால் ரேவண்ணாவின் செக்ஸ் ஸ்கேண்டல் வீடியோக்கள் உத்தர பிரதேசம், பீகாரில் அரசியல் அஸ்திரமாக மாறி உள்ளது.
இன்றைய நிலவரப்படி ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வாட்ஸ் ஆப்பில் உத்தர பிரதேசம், பீகாரில் மட்டும் பரவி உள்ளன. மூன்றாம் கட்ட தேர்தல்கள் நெருங்கும் நிலையில் இந்த வீடியோக்கள் பாஜகவை உலுக்கி உள்ளது.
கர்நாடக பென் டிரைவ்: கர்நாடகாவில் பென் டிரைவ் ஒன்று மக்கள் இடையே பரவ தொடங்கி உள்ளது. அதேபோல் சில வீடியோக்களும் மக்களிடையே பரவ தொடங்கி உள்ளன. அந்த வீடியோக்களில் ஜேடிஎஸ் எனப்படும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் எச் டி தேவகவுடாவின் பேரன் எம்பி ப்ரஜ்வால் ரேவண்ணா உள்ளார். அதன்படி அவர் பல பெண்களை கடுமையாக பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வீடியோக்கள் பதிவாகி இருக்கின்றன.
ப்ரஜ்வால் ரேவண்ணா மட்டுமல்லாமல் பல ஆண்கள் இந்த வீடியோக்களில் உள்ளனர். இதில் பல வீடியோக்களை ரேவண்ணாவே எடுத்துள்ளதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக பெண்கள் பலரும் கதறும் வீடியோக்கள்,. பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாகும் வீடியோக்கள் இதில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவிலேயே மிகப்பெரிய செக்ஸ் ஸ்கேண்டல் ஆக இந்த சம்பவம் மாறி உள்ளது. ப்ரஜ்வால் ரேவண்ணா இந்த விவகாரத்தில் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இவருக்கு எதிராக தனி எஸ்ஐடி விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார்.
பல ஆயிரம் வீடியோக்கள்: பல ஆயிரம் வீடியோக்கள் இதில் உள்ளதாக கூறப்படுகிறது. அதில் ப்ரஜ்வால் ரேவண்ணா மூலம் பல ஆயிரம் பெண்கள் கடுமையாக துன்புறுத்தலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. முக்கியமாக இவர்கள் கடுமையாக பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கின்றனர்.
இந்த நிலையில் ப்ரஜ்வால் ரேவண்ணா ஏற்கனவே வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார் என்று கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன் இவரை கைது செய்ய முடியவில்லை. அம்மாநில உள்ளூர் செய்தி சேனல்களின்படி 2700க்கும் மேற்பட்ட வீடியோ கிளிப்புகள் மக்கள் இடையே பரவி உள்ளன. 300 பேர் ரேவண்ணா மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications