‛உல்லாச வீடியோ’.. விசா இன்றி பிரஜ்வல் ஜெர்மனி பறந்தது எப்படி? இது டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட் ரகசியம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் பாஜக கூட்டணியின் ஜேடிஎஸ் வேட்பாளரான பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. தற்போது அவர் ஜெர்மனியில் உள்ள ஆபாச வீடியோ வெளியான உடனேயே விசா இன்றி பிரஜ்வல் எப்படி வெளிநாடு சென்றார்? என்பதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. அதன் பின்னணியில் டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட்டின் கதை உள்ளது.

கர்நாடகாவில் பாஜக கூட்டணியில் உள்ள ஜேடிஎஸ் கட்சி பெரிய சிக்கலில் சிக்கி உள்ளது. இந்த கட்சியின் நிறுவனரான முன்னாள் பிரதமர் தேவேகவுடாவுக்கு அவரது மூத்த மகன் ரேவண்ணா மற்றும் பேரன் பிரஜ்வல்லால் தலைவலி ஏற்பட்டுள்ளது. தேவகவுடாவின் மகன் ரேவண்ணா ஹாசன் மாவட்டம் ஹொலேநரசிப்புரா எம்எல்ஏவாக உள்ளார்.

How prajwal Revanna escaped to Germany and what is Diplomatic Passport details here

ரேவண்ணாவின் மகனும், தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ஜேடிஎஸ் சார்பில் ஹாசன் எம்பியாக உள்ளார். தற்போதைய லோக்சபா தேர்தலிலும் ஹாசனில் பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் வேட்பாளாராக பிரஜ்வல் போட்டியிட்டுள்ளார். கடந்த மாதம் 26ம் தேதி இந்த தொகுதிக்கு தேர்தல் நடந்தது.

இதில் ஓட்டளித்த பிரஜ்வல் உடனடியாக ஜெர்மனி பறந்தார். இதற்கு முக்கிய காரணம் அவரது ஆபாச வீடியோக்கள் ஹாசன் தொகுதி மக்கள் மத்தியில் பரவியது தான் காரணம். இதுதொடர்பாக முதல்வர் சித்தராமையா எஸ்ஐடி சிறப்பு விசாரணை குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். எஸ்ஐடி குழுவினர் விசாரணையை தொடங்கி உள்ளனர். மேலும் முன்னாள் பணிப்பெண் அளித்த பாலியல் புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பிரஜ்வல், அவரது தந்தை ரேவண்ணாவுக்கு எஸ்ஐடி விசாரணைக்கு அழைத்து அவர்களின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் விசாரணைக்கு ஆஜராக 7 நாட்கள் எஸ்ஐடியிடம் தனது வக்கீல் மூலம் ஜெர்மனியில் உள்ள பிரஜ்வல் ரேவண்ணா அவகாசம் கோரியுள்ளார். இந்நிலையில் தான் ஆபாச வீடியோ வெளியான மறுநாளே எப்படி பிரஜ்வல் ஜெர்மனிக்கு சென்றார். அவர் ஜெர்மனி செல்ல விசா எடுக்காத நிலையில் எப்படி வெளிநாட்டுக்கு விமான பயணம் மேற்கொண்டார் என்ற பல கேள்விகள் கடந்த சில நாட்களாக எழுந்தன. இந்நிலையில் தான் தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. அதாவது ஹாசன் தொகுதிக்கு கடந்த மாதம் 26ம் தேதி லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. ஆனால் அதற்கு முன்பே அவரது ஆபாச வீடியோக்கள் வெளியாகி விட்டன.

இதையடுத்து தேர்தல் நாளில் ஹாசனில் ஓட்டுப்போட்ட பிரஜ்வல் உடனடியாக அவர் ஜெர்மனிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். இதற்கு அவர் வழக்கமாக பயன்படுத்தும் பாஸ்போர்ட்டை பயன்படுத்தவில்லை. அந்த பாஸ்போர்ட்டை பயன்படுத்தினால் கட்டாயம் விசா வேண்டும். விசா எடுக்க காலதாமதமும் ஏற்படலாம். இதனால் பிரஜ்வல் ‛டிப்ளமெட்டிக்' பாஸ்போர்ட்டை பயன்படுத்தி ஜெர்மனி பறந்துள்ளார்.

அதாவது பிரஜ்வல் ரேவண்ணா தற்போது ஹாசன் தொகுதி எம்பியாக உள்ளார். இதனால் அவர் தூதரக பாஸ்போர்ட் எனும் டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி உள்ளார். இந்த தூதரக பாஸ்பார்ட்டை பொறுத்தமட்டில் சில நாடுகள் விசா உடனடியாக வழங்கும். பல நாடுகளில் விசா எடுக்காமலே இந்த பாஸ்போர்ட் மூலம் செல்லும் வசதி உள்ளது. இந்த முறையில் தான் பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு சென்றுள்ளார். மேலும் இந்த பாஸ்போர்ட் மூலம் பிரஜ்வல் நவம்பர் மாதம் வரை வெளிநாடு செல்ல அனுமதி உள்ளது. ஜெர்மனி உள்பட பிற நாடுகளுக்கும் அவரால் செல்ல முடியும்.

பொதுவாக இந்த ‛டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட்' என்பது ‛Type D' வகை பாஸ்போர்ட் என அழைக்கப்படும். இந்தியாவை பொறுத்தமட்டில் தூதர்கள், அரசு அதிகாரிகள், மத்திய அரசு சார்பில் வெளிநாடு பயணம் செல்வோர்களுக்கு இந்த பாஸ்போர்ட் என்பது வழங்கப்படும். இந்த பாஸ்போர்ட் மெரூன் அல்லது குங்குமப்பூ நிறத்தில் இருக்கும். மேலும் இந்த பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்வோருக்கு பாதுகாப்பு உள்பட சில சிறப்பு வசதிகளும் கிடைக்கும்.

இந்நிலையில் தான் பிரஜ்வல் ரேவண்ணா ‛டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட்டில்' வெளிநாடு சென்றிருப்பதை அறிந்த கர்நாடகா முதல்வர் சித்தராமையா அதனை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதில், ‛‛பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் பிரஜ்வல் ரேவண்ணா மீதான புகார் குறித்து கர்நாடகா எஸ்ஜடி விசாரணை றே்கொண்டு உள்ளது. ஆனால் பிரஜ்வல் வெளிநாடு சென்றுள்ளார். அவர் ‛டிப்ளமெட்டிக் பாஸ்பார்ட்' பயன்படுத்தி வெளிநாடு சென்றுள்ளார். இதனால் அவரது ‛டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட்டை' ரத்து செய்து இந்தியா அழைத்து வர உதவி செய்ய வேண்டும்'' என கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+