பாஜக ஆயுதத்தை அப்படியே தங்கள் கையில் எடுத்த எதிர்க்கட்சிகள்.. ஆரம்பமே அதிரி புதிரி "சக்சஸ்!"
பெங்களூர்: எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் ஆரம்பத்திலேயே மிகப்பெரிய சவாலை பாஜகவை நோக்கி வீசியுள்ளது. எதிர்க்கட்சி கூட்டணியின் ஆதரவாளர்களுக்கு நீண்ட காலத்திற்கு பிறகு, ஒரு நம்பிக்கை ஒளி பெங்களூரிலிருந்து பாய்ச்சப்பட்டுள்ளது.
மம்தா வருவாரா, கெஜ்ரிவால் வருவாரா, சரத் பவார் வருவாரா என்றெல்லாம் இழுபறி இருந்த நிலை மாறி 26 முக்கிய கட்சிகள் மொத்தமாக பெங்களூரில் கூடி கூட்டம் நடத்தியது முதல் வெற்றி என்றால், அந்த கூட்டணிக்கு, இந்திய தேசிய முன்னேற்ற வளர்ச்சிக் கூட்டணி- Indian National Developmental Inclusive Alliance (INDIA) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது பிரமாண்ட வெற்றியாக பார்க்கப்படுகிறது.

மோடி தலைமையிலான பாஜக அரசு ஆடி வரும் "மைண்ட் கேம்", அதே போன்ற ஒரு நகர்வால் தடுத்து நிறுத்த முயற்சி செய்யப்பட்டுள்ளது. இந்தியா என்று பொருள்படும் வகையில் இந்த பெயரை யார் பரிந்துரைத்தார்களோ அவர்கள் சம கால அரசியல் சாணக்கியராகத்தான் இருக்க முடியும்.
மைண்ட் கேம்: மோடி தலைமையிலான பாஜக அரசை வீழ்த்த முடியாது. இன்னும் பன்னெடுங்காலம் பாஜகவே இந்தியாவை ஆட்சி செய்யும், அறுதிப்பெரும்பான்மையுடன்தான் ஆட்சி செய்யும் என்பதெல்லாம் மக்கள் மனதில் மட்டுமல்ல எதிர்க்கட்சிகளின் மனதிலும் பதிய வைக்கப்பட்டிருந்தது. இந்த மைண்ட் கேமை சிறப்பாக ஆடி வருகிறது பாஜக. அரசியலிலும், கிரிக்கெட்டிலும் எதுவும் நடக்கலாம். ஆனால் அப்படி ஒரு யோசனை கூட எதிர்க்கட்சிகளுக்கு வரவில்லை இதுவரை. எதிர்க்கட்சிகளின் பிரச்சினையே தோல்வியல்ல.. தோல்வி மனப்பான்மைதான். அதை நன்கு நெய்யூற்றி தீபம் ஏற்றி கொளுந்துவிட்டு எரிய விட்டு வந்தது பாஜக. ஆனால் எல்லாமே ஒரே ஒரு சம்பவம் நடைபெறும்வரைதான்.
கர்நாடக தேர்தல்: அந்த சம்பவம், கர்நாடகாவில் காங்கிரஸ் செய்த "சம்பவம்தான்." பாஜகவை ஊதித்தள்ளி அறுதிப்பெரும்பான்மையோடு காங்கிரஸ் ஆட்சியை பிடித்ததுமே சோர்ந்துகிடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் முகத்தில் திடீரென ஆயிரம் வாட்ஸ் பல்பு எரியத் தொடங்கியது. இதோ இன்று, அதே கர்நாடகாவில்தான், "இந்தியா" உதயமாகியுள்ளது.
இந்தியா: பாஜகவின் மைண்ட் கேமுக்கு பதில் மைண்ட் கேம்தான், இந்தியா என்ற பெயர். பாஜக தேசியவாத கட்சியாகவும், மற்ற கட்சிகள் தேசியத்தின்மீது பக்தி இல்லாத கட்சிகள் என்பதை போலவும் ஒரு மூளை சலவை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியா என்று எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளதன் மூலம், இந்தியா உங்கள் வீட்டு சொத்து அல்ல, அதில் எங்களுக்கு சம உரிமை இருக்கிறது என்று உளவியல் ரீதியாக குட்டு வைத்துள்ளன எதிர்க்கட்சிகள். மேலும் இந்தியா VS பாஜக என்று பிரச்சாரம் செய்தால் அதன் உளவியல் தாக்கம் எப்படி இருக்கும் என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
உளவியல் விளையாட்டு: இந்தியாவே பாஜகவுக்கு எதிராக உள்ளது என்பதை உளவியல் ரீதியாக ஒவ்வொரு முறை இந்த கூட்டணி பெயரை உச்சரிக்கும்போதும் மக்கள் மனதில் பதிய வைக்கப்படும். எந்த மைண்ட் கேமில் பாஜக கில்லியோ அதே கேமை கையில் எடுத்துள்ளன எதிர்க்கட்சிகள். அந்த வகையில் ஆரம்பத்திலேயே பாஜக எதிர்பார்க்காத மிகப்பெரிய ஷாக்கை கொடுத்துள்ளது பெங்களூர்.
இந்த கூட்டணி இப்படியே தொடர்ந்து சிக்சர் அடிக்குமா, அல்லது பாஜக வீசும் பந்துகளில் விக்கெட்டுகளை பறிகொடுக்குமா என்பதை வைத்தே 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள் தெரியவரும்.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications