அதிகாலையில் மாந்திரீக பூஜை.. கனரா வங்கியில் ரூ.53 கோடி தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது எப்படி?
பெங்களூர்: கர்நாடக மாநிலம் விஜயாப்புராவில் உள்ள கனரா வங்கிக்கு கடந்த மே மாதம் 25ம் தேதி கொள்ளையர்கள் சென்றுள்ளனர். அங்கு கொள்ளையடிக்கும் முன்பு வங்கி கட்டிடத்தில் வைத்து மாந்திரீக பூஜை செய்துள்ளனர். பின்னர் வங்கிக்குள் புகுந்து ரொக்க பணம் மற்றும் அடமானம் வைத்த தங்க நகைகள் என 53 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துள்ளனர். அவர்கள் போகும் போகுது சிசிடிவி ஹார்ட் டிஸ்க்கையும் தூக்கி சென்றுள்ளனர். எப்படி கொள்ளை நடந்தது என்பதை பார்ப்போம்.
கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் பசவனபாகேவாடி தாலுகா மனகூலி பகுதியில் கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் இரவு நேர காவலாளி இல்லை என்று கூறப்படுகிறது.இதனை துல்லியமாக கவனித்த கொள்ளை கும்பல், கொள்ளையடிக்க திட்டமிட்டது. இந்த நிலையில் கடந்த மே மாதம் 25-ந் தேதி இரவு இந்த வங்கியின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளது.

மாந்திரீக பூஜை
அங்கு கொள்ளையடிப்பதற்கு முன்னதாக வங்கி கட்டிடத்தில் வைத்து கொள்ளையர்கள் மாந்திரீக பூஜை செய்துள்ளனர். தொடர்ந்து அந்த கொள்ளை கும்பல் வங்கியில் இருந்த இரும்பு பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்திருக்கிறார்கள். பின்னர் அதில் இருந்த தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து சென்றிருக்கிறார்கள்.
அடகு நகைகள்
இதுகுறித்து மறுநாள் வந்த தகவலின் பேரில், மனகுலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் நடந்த இடத்துக்கு விஜயப்புரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லட்சுமண் நிம்பரகி சென்று ஆய்வு நடத்தினார். முதற்கட்ட விசாரணையில் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை. ஏனெனில் அவை வாடிக்கையாளர்கள் அடகு வைத்த தங்க நகைகள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
வங்கி ஊழியர்கள் தகவல்
இதையடுத்து வங்கி மேலாளர், காசாளர் மற்றும் ஊழியர்கள் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை கணக்கீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில கொள்ளையடித்த தங்க நகைகளின் மதிப்பு நேற்று முழுமையாக கணக்கிடப்பட்டது. அந்த தகவலை வங்கி ஊழியரக்ள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
53 கோடி ரூபாய் நகைகள்
இதுகுறித்து விஜயாப்புரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லட்சுமண் நிம்பரகி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, "கனரா வங்கி கொள்ளை வழக்கில், கொள்ளைப்போன தங்க நகைகள் குறித்த மதிப்பு விவரத்தை வங்கி ஊழியர்கள் கூறினார்கள். அதில் ரூ.53 கோடி மதிப்பிலான 58 கிலோ தங்க நகைகள், ரூ.5.20 லட்சம் ரொக்கம் கொள்ளை போயிருப்பது தெரியவந்துள்ளது.
எத்தனை பேர் வந்தார்கள்
இந்த கொள்ளையில் 6 முதல் 8 பேர் கொண்ட கும்பல் திட்டமிட்டு ஈடுபட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. வங்கியின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் ஒரு பெட்டகத்தில் இருந்த தங்கநகைளை மட்டும் கொள்ளையடித்தனர். மற்றொரு பெட்டகத்தில் கை வைக்கவில்லை. இந்த கொள்ளை சம்பவத்துக்கு முன்னதாக வங்கிக்குள் கொள்ளையர்கள் மாந்திரீக பூஜை செய்திருக்கிறார்கள். மேலும் வங்கியில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமரா இணைப்புகளை துண்டித்திருக்கிறார்கள். மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகும் டி.வி.ஆரையும் அவர்கள் திருடி சென்றுவிட்டார்கள்.
8 தனிப்படை அமைப்பு
இதனால் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. எனினும் வங்கி அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அனைத்தையும் கைப்பற்றி, கொள்ளையர்களை அடையாளம் கண்டு வருகிறோம். அவர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைத்திருக்கிறோம். 8 தனிப்படை போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். மர்மநபர்களை கைது செய்யும்நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்" இவ்வாறு விஜயப்புரா மாவட்ட எஸ்பி லட்சுமண் நிம்பரகி கூறினார்.
-
நிலத்தைத் தோண்டும்போது தங்கம், சிலைகள் கிடைத்தால் செய்ய வேண்டியவை? கவனிக்காவிட்டால் ஜெயில் நிச்சயம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications