10 மாவட்டங்களில் வேட்டு? அண்ணாமலை அரசியலை தீர்மானிக்க போகும் "நம்பர் 86"! அடடா கர்நாடகாவில் சிக்கல்?
பெங்களூர்: கர்நாடகாவில் நாளை சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் பெரிய அளவில் கவனிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. கர்நாடக அரசியல் 2024 லோக்சபா தேர்தல், தென்னிந்திய அரசியலை நிர்மாணிக்கும் என்பதால் இந்த தேர்தல் முடிவுகள் அதிக கவனம் பெற்றுள்ளது.

1 மாதமாக நடந்த பிரச்சாரம்.. காரசார விவாதம்.. அரசியல் மோதல்கள் எல்லாம் கர்நாடகாவில் முடிவிற்கு வந்துள்ளது. திருவிழாவிற்கு இணையாக கர்நாடகா சட்டசபை தேர்தல் நிறைவு பெற்றுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.
முக்கியமாக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இது முக்கியமான தேர்தல். இவர் தமிழ்நாடு பாஜக தலைவர் என்றாலும் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பதால் அங்கே தேர்தல் துணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கட்சியிலேயே நிர்வாகிகள் பலர் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். அண்ணாமலை திமுகவின் சொத்து பட்டியல் என்று சில ஆவணங்களை வெளியிட்ட போதும் பாஜக டாப் தலைவர்கள் யாரும் அண்ணாமலைக்கு ஆதரவாக பேசவில்லை.
அதேபோல் அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்திலும் அமர் பிரசாத் ரெட்டியை தவிர அண்ணாமலைக்கு யாரும் ஆதரவாகும் கருத்துக்களை பேசவில்லை. பாஜக உள்ளேயே அண்ணாமலை ஆதரவு கோஷ்டி - அண்ணாமலை எதிர்ப்பு கோஷ்டி என்ற கோஷ்டிகள் உருவாகி உள்ளன.
இப்படிப்பட்ட நிலையில் கர்நாடகா சட்டசபை தேர்தல் அண்ணாமலைக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜகவின் துணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டு பணிகளை செய்தார். வேட்பாளர் தேர்வு, வாக்குறுதிகளை முடிவு செய்தது உட்பட பல விஷயங்களில் அண்ணாமலை முக்கிய முடிவுகளை எடுத்தார்.
இந்த தேர்தலில் வென்று தனது ஆளுமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அண்ணாமலைக்கு ஏற்பட்டு உள்ளது. இல்லையென்றால் தேர்தல் தோல்வியை காரணமாக வைத்தே அண்ணாமலையை ஓரம்கட்ட கூட டெல்லி நினைக்கலாம் .
டெல்லி - அண்ணாமலை
அண்ணாமலையை டெல்லி தீர்க்கமாக நம்புகிறது என்பது சமீபத்தில் நடந்த அண்ணாமலை - அமித் ஷா - எடப்பாடி சந்திப்பிலேயே உறுதியானது. இருந்தாலும், அண்ணாமலை டெல்லியிடம் நல்ல பெயர் வாங்க இந்த கர்நாடக தேர்தல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் உள்ளதில் 10 மாவட்டங்களில் 86 தொகுதிகள் அண்ணாமலைக்கு வழங்கப்பட்டது. இது எல்லாம் தமிழர்கள் அதிகம் உள்ள தொகுதிகள் ஆகும்.
உடுப்பி 5 தொகுதிகள், சிக்கமகளூரு 5 தொகுதிகள், தாவணகெரே 7 தொகுதிகள், ஷிவமொகா 7 தொகுதிகள், கோலார் 6 தொகுதிகள், மாண்டியா 7 தொகுதிகள், ஹாசன் 7 தொகுதிகள், தட்சிண கன்னடா 8 தொகுதிகள், பெங்களூரில் 28 தொகுதிகள், உத்தர கன்னடா 6 தொகுதிகள், என்று அண்ணாமலைக்கு ஒதுக்கப்பட்டது.
இதில் அண்ணாமலை கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தொகுதிதான் புலிகேசி தொகுதி. தமிழர்கள் அதிகம் உள்ள இந்த தொகுதியில் அதிமுக, திமுகவிற்கு கூட ஆதரவாளர்கள் உள்ளனர். இந்த நிலையில்தான் தமிழர்கள் அதிகம் இருக்கும் புலிகேசி நகரில் தனித்து போட்டியிட அதிமுக முடிவு செய்து கடைசியில் பின்வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.
முக்கிய - கணிப்பு
இந்த தேர்தல் அண்ணாமலைக்கு முக்கியமான தேர்தல் என்ற நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் பலவும் பாஜகவிற்கு எதிராக வந்துள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.
கணிப்பு முடிவுகள்:
பீப்பிள்ஸ் பல்ஸ்:
காங்கிரஸ் 107-119,
பாஜக 78-90,
ஜேடிஎஸ் 23-29
ஜி நியூஸ் கருத்து கணிப்பு:
காங்கிரஸ் 103-118
பாஜக 79-94
ஜேடிஎஸ் 25-33
ரிபப்ளிக் டிவி பி மார்க்
காங்கிரஸ் 94-108
பாஜக 85-100
ஜேடிஎஸ் 24-38
டிவி9 - சிவோட்டர்
காங்கிரஸ் 100-112
பாஜக 83-95
ஜேடிஎஸ் 21-29
ஜன்கி பாத்-ஏசியாநெட் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பாஜக வெல்லும்
பாஜக 94-117
காங்கிரஸ் 91-106
ஜேடிஎஸ் 14-24
டிவி9 கருத்து கணிப்பு:
காங்கிரஸ் 99-109
பாஜக 88-98
ஜேடிஎஸ் 21-26
நியூஸ் நேஷன்: பாஜக வெல்லும் என்று கணிப்பு
காங்கிரஸ் 86
பாஜக 114
ஜேடிஎஸ் 21
Times Now-ETG: கருத்து கணிப்பு
பாஜக: 85
காங்கிரஸ்: 113
ஜேடிஎஸ்: 23
இதர : 3
ஜன்கி பாத் கருத்து கணிப்பு விவரங்கள்:
காங்கிரஸ் 38%-40%
பாஜக 37.5%- 39%
ஜேடிஎஸ் 14%-17%
இதர 8.5%-6%
ஜன்கி பாத் கருத்து கணிப்பு விவரங்கள்:
ஹைதராபாத் கர்நாடகா: பாஜக- 15; காங்கிரஸ் 24; ஜேடிஎஸ்-1 இதர 0
மும்பை கர்நாடகா: பாஜக- 31; காங்கிரஸ் 19; ஜேடிஎஸ்-0 இதர 0
பெங்களூரு: பாஜக- 17; காங்கிரஸ் 15; ஜேடிஎஸ்-0 இதர 0
பழைய மைசூரு: பாஜக 15; காங்கிரஸ் 24; ஜேடிஎஸ் 16; இதர 02
கடலோர கர்நாடகா: பாஜக- 15; காங்கிரஸ் 04; ஜேடிஎஸ்-0 இதர 0
மத்திய கர்நாடகா: பாஜக- 13; காங்கிரஸ் 11; ஜேடிஎஸ்-2 இதர 0
ETG கருத்து கணிப்பு:
காங்கிரஸ் 106-120
பாஜக 78-92
ஜேடிஎஸ் 20-26
இதர 2-4
ஸ்பைக் மீடியா: பாஜக வெல்லும்
பாஜக 104
காங்கிரஸ் 85
ஜேடிஎஸ் 29
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications