பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மக்கள் ஷாக்.. உடைந்தது ஹுலிமாவு ஏரி.. நீரில் மூழ்கிய கார்கள், பைக்குகள்.. எங்கெங்கும் வெள்ளம்.. !

Google Oneindia Tamil News

Recommended Video

    நீரில் மூழ்கிய கார்கள், பைக்குகள்.. எங்கெங்கும் வெள்ளம்

    பெங்களூரு: கண்ணிமைக்கும் நேரத்தில் முடிந்துவிட்டது.. பெங்களூர், ஹுலிமாவு ஏரிக்கரை உடைந்ததில், வெள்ள நீர் புகுந்து ஊரே நீரில் மிதந்தது. 1000 குடும்பங்கள் வெள்ளத்தில் தவித்து வருகின்றன.

    பெங்களூருவின் ஹூலிமாவு பகுதியில் உள்ளது பெரிய ஏரி. திடீரென ஏரி கரையின் ஒரு பகுதி இடிந்துவிட்டது. இதனால், அங்கிருந்த குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்து கொண்டது.

    ஏரி உடைந்து தண்ணீர் வந்துவிடும் என்று அந்த பகுதி மக்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. கிட்டத்தட்ட 250 குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை அங்கு ஏற்பட்டுள்ளது.

     உடைப்பு

    உடைப்பு

    இந்த திடீர் சம்பவம் குறித்து மேயர் கவுதம் குமார் சொல்லும்போது, "அந்த பகுதியில் ஏரி கரை குடிநீர் குழாயில் போர்வெல் போடுபவர்களின் உதவியுடன் இணைப்பை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. அந்த சமயத்தில்தான் எதிர்பாராத விதமாக ஏரி கரையின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டுவிட்டது.

     துரித பணி

    துரித பணி

    இதனால் ஏரி நீர் முழுசும் குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்றுவிட்டது. இதனால் 1000 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை பத்திரமாக மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. மேலும் இவர்களை தவிர, நிறைய பைக், கார்களும் வெள்ள நீரில் மிதக்கின்றன. முதலில் 1000 குடும்பங்களை சேர்ந்தவர்களை பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற வேண்டும்.

     விசாரணை

    விசாரணை

    அதுவரை அவர்களுக்கு தேவையான சாப்பாடு உள்ளிட்ட பிற உதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் ஏரிகரையின் உடைப்பும் சரி செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே, ஏரியில் உடைப்பை ஏற்படுத்தியவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது" என்றார்.

     மீட்பு பணி

    மீட்பு பணி

    வெள்ள நீரில் பாதிக்கப்பட்ட இப்பகுதிகளின் போட்டோக்களும் தற்போது வெளியாகி உள்ளன. நடுரோட்டிலேயே கார்களும், பைக்குகளும் முழுவதாகவும், முக்கால்வாசியும் மூழ்கியபடி காணப்படுகின்றன.. மீட்பு படையினர் முதியோர் உள்ளிட்ட அனைவரையுமே பாதுகாப்பாக மீட்டு வருகின்றனர்.

    அங்கலாய்ப்பு

    இதற்கிடைய, திட்டமிடாத நகரமயமாக்கல்தான் பெங்களூரை இந்த அளவுக்கு சீர்குலைத்து வருகிறது. ஏரிகளை அழிக்கிறார்கள் அல்லது இப்படி சட்டவிரோதமாக போர்வெல் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுத்து ஊரையே வெள்ளக்காடாக்கி விடுகிறார்கள். இதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இல்லாவிட்டால் பெங்களூர் பெரும் சிரமத்தை சந்திக்க நேரிடும் என்று சமூக வலைதளங்களில் மக்கள் அங்கலாய்த்து வருகிறார்கள்.

    English summary
    Hulimavu lake breaches and more than 1000 Familes Affected in Bengaluru
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X