பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிகே சிவகுமாருக்கு செம தில்லுதான்.. கைதான அடுத்த நிமிடமே பாஜகவை எப்படி தெறிக்கவிட்டிருக்காரு பாருங்க

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Karnataka bandh: Bangalore-Mysore road full of traffic

    பெங்களூர்: பண மோசடி வழக்கில், கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.சிவகுமார் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதை எதிர்த்து, கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் கட்சி பந்த் நடத்தியது. தென் கர்நாடகாவில், பெங்களூரை தவிர பிற பகுதிகளில், மக்களின் இயல்பு வாழ்க்கை இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    ஆனால், சிவகுமாரோ, அவரை கைது செய்ததும், ட்விட்டரில், பாஜகவை கிண்டல் செய்து ட்வீட் செய்துள்ளார்.

    இறுதியாக வெற்றி

    அவர் கூறியுள்ளதை பாருங்கள்: என்னைக் கைது செய்யும் பணியில் இறுதியாக வெற்றி பெற்ற எனது பாஜக நண்பர்களை வாழ்த்துகிறேன். எனக்கு எதிரான வருமான வரி மற்றும் அமலாக்கத்துறை வழக்குகள், அரசியல் நோக்கம் கொண்டவை. நான் பாஜகவின் பழிவாங்கல் மற்றும் காழ்ப்புணர்ச்சி அரசியலுக்கு பலியாகியுள்ளேன்.

    வெற்றி

    நான் சட்டவிரோதமாக எதுவும் செய்யவில்லை என்பதால் கட்சியினர், ஆதரவாளர்கள் மற்றும் நலம் விரும்பிகள் கவலையடைய வேண்டாம் என்று, கேட்டுக்கொள்கிறேன். கடவுள் மீதும், நம் நாட்டின் நீதித்துறை மீதும், எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. பழிவாங்கும் அரசியலுக்கு எதிராக சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், வெற்றி பெறுவேன் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு ட்வீட் செய்துள்ளார்.

    சிதம்பரம் கிண்டல்

    சிதம்பரம் கிண்டல்

    சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்தபோது, நிருபர்களை நோக்கி 5 விரல்களை காண்பித்து, 5 என்றால் உங்களுக்கு புரிகிறதா என்று கேட்டார். நாட்டின் ஜிடிபி 5 சதவீதத்திற்கு சரிவடைந்துவிட்டதை தைரியமாக அவர் சுட்டிக் காட்டினார்.

    தைரியம்

    தைரியம்

    சிதம்பரத்தை போலவே, காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவர் சிவகுமார். அவரும், கைதான அடுத்த நிமிடமே, தனது கிண்டலை, ட்வீட் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அனேகமாக இது அவரது ட்விட்டர் அட்மின் மூலமாக வெளியிடப்பட்ட ட்வீட்டாக இருக்கும். ஆனால், ஏற்கனவே சிவகுமார் இதுபோல ஒரு ட்வீட்டை வெளியிட ஒப்புதல் வழங்கியிருக்க கூடும் என கூறப்படுகிறது. எனவே, கைது நடவடிக்கைகள், இவர்களின் தன்னம்பிக்கையை குலைக்கவில்லை என்பது மட்டும் நிச்சயமாக தெரிகிறது.

    English summary
    I congratulate my BJP friends for finally being successful in their mission of arresting me. The IT and ED cases against me are politically motivated and I am a victim of BJP's politics of vengeance and vendetta, says DK Shivakumar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X