பிரஜ்வலின் உல்லாச வீடியோக்கள் கசிந்தது எப்படி? முன்னாள் கார் டிரைவர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
பெங்களூர்: ஹாசன் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வீடியோக்களை வெளியிட்டது யார் என்பது தொடர்பாக பாஜக தலைவர் தேவராஜ கவுடாவும் ரேவண்ணாவின் முன்னாள் கார் ஓட்டுநரான கார்த்திக்கும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார்கள்.
கர்நாடகா மாநிலத்தின் ஹாசன் தொகுதியில் ஜேடிஎஸ் கட்சியின் எம்பியாக உள்ளவர் பிரஜ்வல் ரேவண்ணா. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். அதாவது தேவகவுடாவின் மூத்த மகனான ரேவண்ணாவின் மகன் தான் பிரஜ்வல் ரேவண்ணா. இதேபோல் ரேவண்ணாவின் உடன் பிறந்த தம்பிதான் முன்னாள் முதல்வர் குமாரசாமி.

லோக்சபா தேர்தலில் ஜேடிஎஸ் கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. இதையடுத்து மீண்டும் பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் தொகுதியிலேயே போட்டியிட்டுள்ளார். ஹாசன் தொகுதிக்கு கடந்த 26-ம் தேதி நடந்த 2 ஆம் கட்ட லோக்சபா தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் தான் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகியுள்ளது.
விசாரணை குழு அமைப்பு: பிரஜ்வல் பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் வாட்ஸ்அப்களில் ஹாசன் தொகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பரவியது. அதோடு பெண்களை ஆபாசமாக காட்டும் வீடியோக்களும் இருந்தன. உதவி கேட்டு வரும் பெண்கள், பழக்கமான பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா நெருக்கமாக இருந்தபோது அதனை வீடியோவாக எடுத்து பென் டிரைவில் வைத்திருந்ததாகவும் அந்த வீடியோ தான் வெளியானதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் பூகம்பத்தையே கிளப்பி விட்டுருக்கிறது. எனினும், இவை அனைத்து மார்பிங் செய்யப்பட்ட போலி வீடியோக்கள் என்று பிரஜ்வல் ரேவண்ணா தரப்பு இதனை மறுத்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ தொடர்பாக எஸ்ஐடி எனும் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
ரேவண்ணாவின் கார் டிரைவர்: இந்த விவகாரத்தில், வீடியோ வெளியானதால் தற்போது பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்தும் பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கர்நாடக அரசியலில் பெரும் புயலையே பிரஜ்வால் ரேவண்ணாவின் விவகாரம் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவின் முன்னாள் கார் ஓட்டுநரான கார்த்திக் என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில், கூறியிருப்பதாவது:- தேவகவுடாவின் குடும்பத்திற்கு ஓட்டுனராக நான் பணியாற்றினேன். என்னுடைய நிலத்தை அவர்கள் அபகரித்து விட்டார்கள். என்னுடைய மனைவியையும் அடித்து துன்புறுத்தினர். அதன்பிறகு நான் பாஜகவின் தேவராஜ கவுடாவை சந்தித்தேன். எனக்கு நியாயம் பெற்று தருவதாக கூறிய தேவராஜ கவுடா, ஊடகங்களிடம் என்னிடம் பேசுமாறு கூறினார்.
காங்கிரஸ் கட்சியிடம் கொடுத்தேன்: நான் இந்த விவகாரம் தொடர்பாக தேவராஜ கவுடாவிடம் விவாதித்து பிரஜ்வலின் பாலியல் சீண்டல்கள் அடங்கிய பென்டிரைவை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை எவ்வாறு பயன்படுத்தினார் என்று எனக்கு தெரியவில்லை. அதன் பிறகு என் வழக்கில் முன்னேற்றம் எதுவும் இல்லை. காங்கிரஸ் கட்சியிடம் அந்த பென் டிரைவை கொடுத்ததாக கூறுவது தவறானது.
முழு ஒத்துழைப்பு தருவேன்: காங்கிரஸ் அவர்களின் கூட்டணி கட்சி என்பதால் நான் அவர்களை (காங்கிரஸ்) நம்பவில்லை. நான் தேவகவுடா குடும்பத்துடன் 15 ஆண்டுகளாக இருந்துள்ளேன். அங்கு வந்தவர்கள், போனவர்கள் என அனைத்து விஷயங்களும் எனக்கு தெரியும். மாநில அரசு அமைத்துள்ள சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்புத் தருவேன்" என்று கூறியுள்ளார்.
வேறு யாரிடமும் கொடுத்தாரா: அந்த வீடியோ அடங்கிய பென் டிரைவை கவுடா வேறு யாரிடமும் கொடுத்தாரா என்பது எனக்கு தெரியாது. ஆனால், நான் தேவராஜ கவுடாவை தவிர யாரிடமும் நான் அந்த பென் டிரைவை கொடுக்கவில்லை. ஆனால், தற்போது நான் தான் காங்கிரஸ் கட்சியினரிடம் பென் டிரைவை கொடுத்தாக குற்றம் சாட்டுகிறார். காங்கிரஸ் கட்சியினரிடம் அதை கொடுத்து இருந்தால் நான் ஏன் அவரிடம் நீதி கேட்க போகிறேன்" என்றும் கூறினார்.
முன்னதாக நேற்று பாஜகவை சேர்ந்த தேவராஜ கவுடா கூறும் போது, கார்த்திக் தன்னை தொடர்பு கொண்டு வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவை டிகே சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் தலைவர்களிடம் கொடுத்ததாக கூறியிருந்தார். இந்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக கார்த்திக் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications