INDIA.. பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இதுதான் பெயர்! பின்னணி அர்த்தம் இதுதான்!
பெங்களூர்: 2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்காக 26 கட்சிகள் இணைந்து கூட்டணியை அமைத்துள்ளன. இந்த கூட்டணிக்கு இந்தியா (INDIA) என பெயரிடப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணி அர்த்தம் மற்றும் கூட்டணியில் உள்ள கட்சிகளின் முழுவிபரம் வெளியாகி உள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. 2வது கட்டமாக பெங்களூரில் நேற்று எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடந்தது. இந்த கூட்டத்தின் 2வது நாள் ஆலோசனை இன்று தொடங்கியது.

சோனியா காந்தி தலைமையில் மொத்தம் 26 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கான பெயர் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி I-N-D-I-A என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
I-N-D-I-A என்பதற்கு Indian National Developmental Inclusive Alliance என்பது தான் விரிவாக்கமாகும். தமிழில் கூற வேண்டும் என்றால் இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி என சொல்லலாம். இந்த கூட்டணியில் பாஜகவுக்கு எதிராக 26 கட்சிகள் தற்போது இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த கூட்டணியின் முதல் ஆங்கில எழுத்துகளை சேர்த்து படித்தால் இந்தியா என்று பொருள் வரும்.
இதன்மூலம் நாட்டின் நலன் கருதி இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்பதை பொதுமக்களுக்கு எளிதில் எடுத்து கூறலாம் என்பதன் நோக்கத்தில் தான் இந்த பெயர் கூட்டணிக்கு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த கூட்டணியில் மொத்தம் 26 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி காங்கிரஸ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி, பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரணின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, உத்தர பிரதேச எதிர்க்கட்சி தலைவரான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிகள் இடம் பெற உள்ளன.
மேலும் முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் மகன் அஜய் சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தளம், அப்னா தளம் (காமிராவாடி), பாரூக் அப்துல்லாவின் ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாடு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் விடுதலை கட்சி(மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்), புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, ஆல் இந்தியா பார்வர்ட் பிளாக் உள்ளிட்ட கட்சிகளும் இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.
மேலும் தமிழகத்தை சேர்ந்த வைகோவின் மதிமுக, திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஜவாஹூருல்லாவின் மனித நேய மக்கள் கட்சி, காதர் மொகீதினின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரளா காங்கிரஸ் (எம்), கேரளா காங்கிரஸ் (ஜோசப்) என மொத்தம் 26 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications