Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ட்விஸ்ட்.. பறிபோன தேசிய பொதுச்செயலாளர் பதவி.. கர்நாடகா பாஜக தலைவராகும் சிடி ரவி? அவரே சொன்ன பதில்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி வகித்து வந்த கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பதவி நேற்று திடீரென்று பறிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் அவர் கர்நாடகா மாநில பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் அதுதொடர்பாக சிடி ரவி சொன்ன பதில் ட்விஸ்ட்டை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா பாஜக தலைவராக நளின் குமார் கட்டீல் எம்பி உள்ளார். இத்தகைய சூழலில் தான் சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக கர்நாடகாவில் ஆட்சியை இழந்துள்ளது. இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக கர்நாடகாவில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணியில் மேலிட தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

I will be a Karnataka State BJP president? CT Ravi says this after his national secretary post lost

இத்தகைய சூழலில் தான் கர்நாடகாவில் அமைப்பு ரீதியான கட்டமைப்புகளில் மாற்றம் செய்யப்படலாம் என்ற தகவல்கள் கடந்த சில நாட்களாக உலா வருகின்றன. குறிப்பாக கர்நாடகாவில் பெரும்பான்மை சமுதாயமாக உள்ள லிங்காயத், ஒக்கலிகர் பிரிவு தலைவர்களுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

அதன்படி கர்நாடகா மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக பாஜகவின் மூத்த தலைவரான லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த பசனகவுடா எத்னால் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் கர்நாடகா மாநில பாஜக தலைவராக உள்ள நளின் குமார் கட்டீலை நீக்கிவிட்டு அவருக்கு பதில் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்த சிடி ரவி நியமனம் செய்யப்படலாம் என சொல்லப்படுகிறது.

இதில் சிடி ரவி கர்நாடகாவின் சிக்கமகளூர் மாவட்டத்தை சேர்ந்தவர். எடியூரப்பாவின் அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் செயல்பட்டார். சிக்கமகளூர் தொகுதியில் கடந்த 2004 முதல் 2018 வரை நடந்த 4 சட்டசபை தேர்தல்களில் சிக்கமகளூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் அவர் தோல்வியடைந்தார்.

இருப்பினும் கூட அவர் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராகவும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா மேலிட பொறுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். இத்தகைய சூழலில் தான் நேற்று சிடி ரவியிடம் இருந்து பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. பாஜக மேலிடத்தின் இந்த செயல் என்பது சிடி ரவி கர்நாடகா மாநில தலைவராக நியமனம் செய்யப்படுவதை உறுதி செய்யும் வகையில் இருப்பதாக சில செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன.

அதாவது கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக இருக்கும் ஒருவருக்கு மாநில தலைவர் பதவியை வழங்க முடியாது. மீறி வழங்கினால் அவர் தேசிய மற்றும் மாநில என 2 அரசியலிலும் சிறப்பாக செயல்பட முடியாது. இதனால் சிடி ரவி தேசிய அரசியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அவர் மாநில அரசியலில் கர்நாடகா பாஜக தலைவராக வலம் வர உள்ளதாக செய்திகள் பரவின.

இந்நிலையில் தான் சிடி ரவியிடம் அதுபற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சிடி ரவி அளித்த பதில் வருமாறு: எனக்கு மாநில தலைவர் பதவி தருகிறார்களா? இல்லையா? என்பது பற்றிய தகவல் தெரியவில்லை. நான் இப்போது பாஜகவினர் முன்னாள் தேசிய பொதுச்செயலாளராக இருக்கிறேன். மாநில தலைவர் பதவி என்பது ஒரு பெரிய பொறுப்பு. அதனை கேட்டு வாங்குவது என்பது முடியவே முடியாது. அதோடு மாநில தலைவர் பதவியை யாருக்கு கொடுக்க வேண்டும்? எந்த சமயத்தில் கொடுக்க வேண்டும்? என்பதை கட்சி மேலிட தலைவர்கள் தான் முடிவு செய்வார்கள்.

இருப்பினும் நான் மாநில தலைவர் போட்டியில் இல்லை. அதேவேளையில் கட்சி சார்பில் எனக்கு எந்த பொறுப்பு வழங்கினாலும் அதனை ஏற்று செயல்படுவேன். பொதுவாக ஒரு பதவி என்பது நிரந்தரம் கிடையாது என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டும். பாஜக எனக்கு நிறைய பொறுப்புகளை தந்துள்ளது. இருப்பினும் நான் எப்போதும் பாஜகவின் தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன்'' என்றார்.

அதாவது சிடி ரவி விரைவில் கர்நாடகா மாநில பாஜக தலைவராக நியமனம் செய்யப்படுவார் என செய்திகள் வெளியாகி வரும் நிலையில் மாநில தலைவர் போட்டியில் நான் இல்லை என அவர் கூறியுள்ளார். இருப்பினும் கட்சி சார்பில் எந்த பொறுப்பு வழங்கினாலும் அதனை ஏற்று செயல்படுவேன் எனக்கூறி ட்விஸ்ட் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+