கர்நாடக அரசியலில் தடதட.. பாஜகவிற்கு பிரசாரம் செய்யும் பிரபல நடிகர் கிச்சா சுதீப்.. போட்டியில்லையாம்
பெங்களூர்: நான் ஈ படத்தில் வில்லனாக நடித்து புகழ்பெற்ற கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் (Kiccha Sudeep), கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போவதாகவும் தேர்தலில் தான் போட்டியிடவில்லை எனவும் தெரிவித்து இருக்கிறார்.
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் கிச்சா சுதீப். பல வெற்றிப்படங்களில் நடித்து கர்நாடகாவில் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ள இவர் பிற மாநில ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமான முகமாக உள்ளார்.
நானி - சமந்தா நடிப்பில் ராஜமவுலி இயக்கிய நான் ஈ என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்திய கிச்சா சுதீப், அதன் மூலம் கன்னட ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, மலையாள ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்தார்.

தமிழிலும் பிரபலம்
சமீபத்தில் இவர் நடித்த விக்ராந்த் ரோனா திரைப்படம் கன்னடம் மட்டுமின்றி பான் இந்தியா படமாக பல மொழிகளில் வெளியானது. முன்னதாக பாகுபலி திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் விஜய் நடித்த புலி திரைப்படத்திலும் நடித்து இருந்தார். அதேபோல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய முடிஞ்சா இவன புடி என்ற தமிழ் படத்திலும் இவர் நாயகனாக நடித்து இருந்தார்.

காங்கிரஸ் சிவக்குமாருக்கு நெருக்கம்
இப்படி பல மொழிகளில் நடித்து பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்து இருக்கும் கிச்சா சுதீப் கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமாருக்கு மிகவும் நெருக்கமானவர் என்ற பேச்சு உள்ளது. இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் ஏராளமாக உள்ளன.

கர்நாடக சட்டசபைத் தேர்தல்
இந்த நிலையில், வரும் மே மாதம் கர்நாடக மாநிலத்திற்கான சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதில் நடிகர்களை வைத்து பிரச்சாரத்தில் களமிறங்க ஆளும் பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்தது. அதன் அடிப்படையில் கேஜிஎப் ஹீரோ யஷ் உள்ளிட்ட பலரை பாஜக தலைவர்கள் சந்தித்து பேசினர்.

பாஜகவில் இணைகிறாரா?
இந்த நிலையில், கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைய முடிவு செய்து இருப்பதாகவும், அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை முன்னிலையில் கட்சியில் இணைவார் என்றும் நேற்று செய்திகள் வெளியாகின. உடனே சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹேஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பாஜகவுக்காக பிரச்சாரம்
#WeDontWantKicchaInPolitics என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் தற்போது டிரெண்ட் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பெங்களூருவில் நடிகர் கிச்சா சுதீபிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "நான் கர்நாடக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதாக வரும் தகவலில் உண்மை இல்லை. பாரதிய ஜனதா கட்சிக்காக நான் பிரச்சாரம் செய்ய உள்ளேன்." என்றார்.

பாஜக அமைச்சர் கருத்து
இதுகுறித்து பேசிய கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் பி சிராமுலு, "கிச்சா சுதீப் வருகையால் பாஜகவுக்கு பயன் கிடைக்கும். கிச்சா சுதீப் பிரபலமான தலைவர். பிரபலமான நடிகரும் கூட. இந்திய அளவில் மிகப்பெரிய திரை கலைஞராக அவர் உள்ளார். பாஜகவுக்கு அவர் அளித்து இருக்கும் ஆதரவு கட்சிக்கும் மிகப்பெரிய உதவியாக இருக்கும்." என்றார்.
-
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications