Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த முறை சீமானை மன்னிக்க மாட்டேன்.. என்னோட அடுத்த மூவ் இதுதான்.. விஜயலட்சுமி மீண்டும் பரபர வீடியோ

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: 2011 ஆம் ஆண்டில் சீமானை மன்னித்து விட்டது போல இந்த முறை சீமானையும், மதுரை செல்வத்தையும் விடமாட்டேன். சவுக்கு சங்கர் கேஸை எல்லாம் எடுத்து இவ்வளவு எல்லாம் பண்ண முடிகின்ற போது சீமானை நல்லா காப்பாற்றி விட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்பது நல்லா தெரிகிறது என விஜயலட்சுமி ஆவேசமாக பேசியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக குற்றம் சாட்டி வரும் நடிகை விஜயலட்சுமி தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார். பெங்களூரில் இருந்தபடி அவ்வப்போது தனது சமூக வலைத்தளங்கள் மூலம் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

I Will Not Forgive Seeman This Time Actress Vijayalakshmi says in his new video

இந்த நிலையில், விஜயலட்சுமி இன்று வெளியிட்டிருக்கும் வீடியோவில், சீமானை மன்னித்து விட்டது போல இந்த முறை சீமானையும், அவருடன் இருக்கும் மதுரை செல்வத்தையும் மன்னிக்க மாட்டேன் என்று ஆவேசமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். விஜயலட்சுமி அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:-

சீமான் மேலே நான் கொடுத்த வழக்கை இப்படியே எடுக்காமல்... சீமானுடைய வட்டாரத்துக்கிட்ட கேட்டால் அவங்க வந்து அதனை காவல் நிலையத்திலேயே வாபஸ் பெற்றுவிட்டு போய்ட்டாங்க.. இனிமே அதை மீறி திமுக எடுக்கமாட்டாங்க என்கிறார்கள். காவல்துறையிடம் கேட்டால் சீமான் இந்த விவகாரத்தை ஹைகோர்ட்டுக்கு வர விட்டால் தான் உங்களுடைய போன், டாக்குமெண்ட் எல்லாத்தையும் திருப்பி கொடுக்க முடியும் என்று சொல்கிறார்கள்.

2011 ஆம் ஆண்டே அதிமுக ஆட்சியின் போது ஸ்டேசனில் வைத்தே அந்த கேஸை குளோஸ் பண்ணினாங்களோ அதே போல இப்போதும் குளோஸ் செய்துவிடலாம் என்று யாரும் நினைத்துக்கொண்டிருந்தார்கள் என்றால், நான் ஒரு விஷயத்தை மொத்த தமிழ்நாட்டிற்கும் சொல்லிவிடுகிறேன்.

2011 ஆம் ஆண்டில் சீமானை மன்னித்துவிட்டது போல இந்த முறை சீமானையும், மதுரை செல்வத்தையும் விடமாட்டேன். மதுரை செல்வம் செய்த கொடுமை, டார்ச்சருக்கு உடல் நிலை சரியில்லாத என் அக்காவை தமிழ்நாட்டுக்கு கூட்டிட்டு வந்து வழக்கு கொடுத்தது ஒன்னும் விளையாட்டு கிடையாது. சவுக்கு சங்கர் கேஸை எல்லாம் எடுத்து இவ்வளவு எல்லாம் பண்ண முடிகின்ற போது சீமானை நல்லா காப்பாற்றி விட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என்பது நல்லா தெரிகிறது.

அதனாலே இனிமேல் உங்க கிட்ட வந்து சீமானின் கேஸை எடுங்க என்று கேட்க மாட்டேன். எப்படி சின்னம் போச்சு என்ற ஷாக்கான தகவலை சீமானுக்கு கர்நாடகா கொடுத்துச்சோ.. கர்நாடகாவில் வந்து அவரை சின்னத்துக்காக பிச்சை எடுக்க வைத்தாரோ அந்த கடவுள். அதே மாதிரி இந்த வழக்கை எடுத்துக்கொண்டு போய் கர்நாடகாவில் புகார் கொடுப்பேன். புகாரை கொடுத்து 2011 ஆம் ஆண்டில் இருந்து என் வாழ்க்கையை இப்படித்தான் சீரழித்துக்கொண்டு இருக்கிறார்.

பொண்டாட்டி.. பொண்டாட்டி என்று என் வாழ்க்கையை நாசம் செஞ்சிட்டு இருக்காரு.. இதற்கு ஒரு தீர்வும் கொடுக்க மாட்டுக்கிறாரு.. அப்படி எல்லாத்தையும் பிரசண்ட் செய்வேன். ஜெக்கேஸ்வர் என்பவர் பெரிய நடிகர் கர்நாடகாவில்.. அவருடைய பொண்டாட்டி என்னையை பற்றி அசிங்கமாக பேசி கொச்சைபடுத்தியதற்கு அதையும் நீதிமன்றத்தில் கொடுத்து என்ன பண்ணனுமோ என்பதை கர்நாடகாவில் இருந்து செய்வேன்.

ஏன் நான் இதை இப்பவே சொல்கிறேன் என்றால் நான் எத்தனை தடவை சொன்னாலும், சீமான் ஒரு பெரிய மனுஷனாக இதை பார்க்க மாட்டுக்கிறாரு. என்னை ஒன்னும் பண்ண முடியாது என்று திமிர் பிடிச்சு சுத்துக்கிட்டு இருக்கிறார். இதனால் அடுத்த மூவ் கர்நாடகாவில் இருந்து தான் வரும். அதை இப்பவே நான் சொல்லிவிடுகிறேன் என்றால், நாளைக்கு நான் எதாவது பண்ணும் போது, சீமான் ரொம்ப பாவம், விஜயலட்சுமி வம்புக்கு இழுக்கிறார் பாருங்க என்றுன்னு தலைப்பு போட்டுடாதீங்க" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+