100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ

Subscribe to Oneindia Tamil

சென்னை: கர்நாடகா அரசு காவிரிக்கு குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட திட்டமிட்டு வருகிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் முதல்வர் விஜய் இன்னும் மவுனமாக இருந்து வருகிறார். இந்நிலையில் தான் தவெக உடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் கர்நாடகா எம்எல்ஏ ரவி கனிகா, முதல்வர் விஜய்க்கு சவால் விட்டுள்ளார். 100 விஜய் வந்தாலும் மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க முடியாது என்று திமிராக பேசி உள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவக்குமார் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் தான் கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே ராமநகர் மாவட்டம் மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடகா அரசு தீவிரம் காட்டி வருகிறது.

if-comes-100-vijay-no-one-can-stop-mekedatu-dam-project-says-karnataka-congress-mla-ravi-ganiga

அணை அமையும் மேகதாது துணை முதல்வர் டிகே சிவக்குமாரின் சொந்த மாவட்டமாகும். இதனால் அவர் அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த அணை கட்டினால் தமிழகத்துக்கு வரும் தண்ணீர் அளவு குறையும். இதனால் தமிழக விவசாயிகள், அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேகதாதுவில் அணை கட்ட தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதோடு பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் முதல்வராகி உள்ளார். இவரது கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. இந்நிலையில் தான் தற்போது கர்நாடகாவில் மேகதாதுவில் அணை கட்டும் பணி தீவிரமாகி உள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். முதல்வர் விஜய் மேகதாது கட்டவிடமாட்டோம் என்று உறுதியளிக்க வேண்டும். அனைத்து கட்சி கூட்டங்களை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று அரசியல்வாதிகள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் விஜய் மவுனம் காட்டி வருகிறார். மேகதாது அணை விவகாரம் பற்றி அவர் எந்த வார்த்தையையும் பேசவில்லை.

இந்நிலையில் தான் 100 விஜய் வந்தாலும் மேகதாது அணை கட்டுவதை தடுக்க முடியாது என்று கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ ரவி கனிகா கூறியுள்ளார். இவர் மண்டியா சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். மண்டியாவில் தான் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கும் கேஆர்எஸ் எனும் கிருஷ்ணராஜசாகர் அணை அமைந்துள்ளது இந்நிலையில் தான் ரவி கனிகா கூறியதாவது:

''மேகதாது அணை கட்டுவது பற்றி காவிரி மேலாண்மை வாரியத்தில் முடிவெடுத்து கொள்ளலாம் என்று ஸ்டாலின் ஆட்சி நடந்தபோதே உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அதனடிப்படையில் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து உள்ளோம்.

100 விஜய் முதல்வராகி வந்தாலும் கூட மேகதாதுவில் அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது. பெங்களூருவுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும். காவிரி படுகை மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த அணை கட்டப்பட உள்ளது. தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை கேட்கட்டும். அதனை நாங்கள் கொடுத்து விடுகிறோம். அதனை விட்டு விட்டு நம்முடைய இடத்தில் அணை கட்டுவதை தடுக்கும் உரிமை தமிழ்நாட்டிற்கு கிடையாது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளோம். சீக்கிரமாகவே மேகதாது அணையை கட்ட உள்ளோம்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+