பிறந்த நாள் கொண்டாட்டம்.. நண்பர்கள் சரமாரி அடி.. பரிதாபமாக உயிரிழந்த மாணவர்.. வைரலாகும் வீடியோ
பெங்களூரு: பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ் கல்லூரியில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது மாணவர் ஒருவரை சக மாணவர்கள் அடித்ததில் உயிரிழந்தார். இந்த சம்பவம் நடந்து 2 மாதங்கள் கடந்து விட்டது.
ஆனால் தற்போது அம்மாணவரை சக நண்பர்கள் பிறந்தநாள் ஜாலிக்காக அடித்த வீடியோ வைரலாகி வருகிறது. கல்லூரி விடுதியில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய மாணவர்கள், மனோஜ் என்பவரை சுற்றி வளைத்து ஜாலியாக அடிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் மாணவர் மனோஜ் சுட்கேவை, சக நண்பர்கள் எட்டி உதைப்பது, விலா எலும்பில் குத்துவது என்று துவம்சம் செய்கின்றனர். விஷயம் தெரியாமல் இந்த வீடியோவை பாா்த்தால், 20 பேர் சேர்ந்து ஒருவரை சீரியசாக அடித்து துவைப்பது போல உள்ளது.
ஆனால் மாணவர்கள் என்னவோ விளையாட்டாக தான் மஜோஜை கும்மி எடுத்துள்ளனர். மாணவர்களிடம் வாங்கிய அடிகளுக்கு பிறகு எழுந்து நின்று தனது சட்டையை சரி செய்து கொண்டு, இயல்பாக தான் நடந்து செல்கிறார் மனோஜ்.
ஆனால் மறுநாள் காலையில் அவர் உயிரிழந்துள்ளார். பயங்கரமாக வயிறு வலிப்பதாக கூறியதால் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சையும் நடைபெற்றுள்ளது. ஆனால், கணையம் வெகுவாக பாதிக்கப்பட்டதால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பின்னர் நடைபெற்ற பிரேத பரிசோதனையில் மாணவரின் உடலில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் உயிர் இழந்தது வந்தது தெரியவந்துள்ளது. விளையாட்டிற்காக பிறந்தநாளின் போது மனோஜை ஜாலிக்காக வெளுத்தெடுத்த நண்பர்களால், இன்று அவரது உயிர் பறிபோய் 2 மாதங்களாகிவிட்டது
இந்த வீடியோவை ஷேர் செய்துள்ள பிரபல வழக்கறிஞர் ஸ்ருதி தேசாய் தயவு செய்து உங்கள் பிள்ளைகளுக்கு பர்த்டே பம்ப்ஸில் ஈடுபட வேண்டாம் என அறிவுரை வழங்குங்கள், அல்லது இதற்கு ஏதாவது சட்டம் கொண்டு வர வேண்டுமா என வினவியுள்ளார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications