பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதிய உச்சம்.. நாட்டிலேயே அதிகமாக கர்நாடகாவில் பதிவான கொரோனா கேஸ்கள்.. திணறும் பெங்களூர் நகரம்

கர்நாடகாவில் ஒரே நாளில் 41,457 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில், கடந்த 24 மணி நேரத்தில், 41,457 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது..!

இந்தியாவில் கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த கொரோனா தொற்று பாதிப்பானது, நேற்று திடீரென அதிகரித்துவிட்டது.. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 5 நாட்களுக்குப் பின் கோவில்கள் திறப்பு - பழனியில் சாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள் தமிழகத்தில் 5 நாட்களுக்குப் பின் கோவில்கள் திறப்பு - பழனியில் சாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்

அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,82,970 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, கடந்த 15-ந்தேதி நிலவரப்படி, தினசரி பாதிப்பு 2.71 லட்சமாக இருந்தது.

 கர்நாடகா

கர்நாடகா

அடுத்த நாள் 2.58 லட்சமாகவும், நேற்று முன்தினம் 2.38 லட்சமாகவும் குறைந்திருந்த நிலையில், நேற்று ஒரேநாளில் 18 சதவீதம் அதிகரித்து விட்டது.. 3-வது அலையில் இதுவரை இல்லாத அளவில் இந்த பாதிப்பு உச்சத்துக்கு சென்றுவிட்டது. இதில், அதிகபட்சமாக கர்நாடகாவில் 41,457 பேருக்கு தொற்று உறுதியானது... அங்கு நேற்று முன்தினம் 27,156 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மேலும் கடுமையாக உயர்ந்துள்ளது... மகாராஷ்டிராவில் 39,207 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது..

கேரளா

கேரளா

கேரளாவில் தினசரி கேஸ்கள் 22,946 என்றிருந்த நிலையில், இது 28,481 ஆக உயர்ந்து விட்டது.. தமிழ்நாட்டில் 23,888, குஜராத்தில் 17,119, உபியில் 14,701, டெல்லியில் 11,684, ஒடிசாவில் 11,086, மேற்கு வங்கத்தில் 10,430 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது... இதன்மூலம் தினசரி பாதிப்பு விகிதம் 14.43 சதவீதத்தில் இருந்து 15.13 சதவீதமாக அதிகரித்துள்ளது" என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

கர்நாடகா

கர்நாடகா

இதில், நாட்டிலேயே கர்நாடகாவில்தான் அதிக பாதிப்பு என்பது அம்மாநிலத்தில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.. காரணம், கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில், 41,457 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.. அதாவது கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது.. ஒரே நாளில் 41,457 கொரோனா கேஸ்கள் கண்டறியப்பட்டது அதிகபட்ச பாதிப்பாகும்.. இப்போதைக்கு அந்த மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 32,88,700 ஆக உயர்ந்துள்ளது.

Recommended Video

    Omicrons 20 Symptoms Revealed! How Long They Last | OneIndia Tamil
    பெங்களூர்

    பெங்களூர்

    தொற்று பாதிப்பினால் இன்று மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.. இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 38,465 ஆக உயர்ந்துள்ளது.. கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனையில் இருந்து 8,353 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றுள்ளனர்.. இதன்மூலம் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 29,99,825 ஆக உயர்ந்துள்ளது.. எனினும், 2,50,381 பேர் இப்போதைக்கு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்... பெங்களுருவில் 25,595 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பெங்களூரில் 2வது அலையின்போது பதிவான உச்சபட்ச கேஸ் எண்ணிக்கையை இப்போதைய கேஸ் எண்ணிக்கை கிட்டத்தட்ட தொட்டுவிட்டது பீதியை அதிகரித்துள்ளது. இருப்பினும் பெங்களூரில் வார நாட்களில் பெரிய கட்டுப்பாடுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    In a massive jump Karnataka reported 41,457 coronacases on Tuesday
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X