Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமணமான பெண்ணை வீட்டுக்கு அழைத்து உல்லாசம்.. குடும்பத்தினரிடம் சிக்கிய இளைஞருக்கு நேர்ந்த கதி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் திருமணமான பெண்ணை வீட்டுக்கு அழைத்து இளைஞர் உல்லாசமாக இருந்தார். இதுபற்றி அறிந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் இளைஞரை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் அவர் பலியானார். இந்த திடுக்கிட வைக்கும் சம்பவம் பற்றிய ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூர் யஷ்வந்தபுராவில் உள்ள முத்யாலம்மா நகரில் வசித்து வந்தவர் நரசிம்மராஜூ. இவருக்கு வயது 32. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. முதலில் இருவரும் பக்கத்து வீட்டுக்காரர்கள் என்ற அடிப்படையில் பழகினர்.

in-bengaluru-32-year-old-man-lynched-to-death-after-having-affair-with-married-woman

ஆனால் நாளடைவில் இருவருக்கும் இடையேயான பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் செல்போன் எண்களை பரிமாறி கொண்டு பேச தொடங்கியதோடு அடிக்கடி வெளியே சென்று வந்தனர்.

மேலும் இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அடிக்கடி நரசிம்மராஜூ, அந்த பெண்ணின் வீட்டுக்கு செல்வதையும், வீட்டில் ஆள் இல்லாதபோது அந்த பெண்ணை தனது வீட்டுக்கு நரசிம்மராஜூ அழைத்து உல்லாசம் அனுபவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே தான் அந்த பெண்ணின் நடத்தையில் குடும்பத்தினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அவரது செயல்பாட்டை கடந்த சில வாரங்களாக உன்னிப்பாக கவனிக்க தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தான் கடந்த 22ம் தேதி நரசிம்மராஜூ, கள்ளக்காதலியை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார்.

தன்னை குடும்பத்தினர் கண்காணிப்பதை அந்த பெண் அறிந்து வைத்திருந்ததால் முதலில் தயங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் நரசிம்மராஜூ விடவில்லை. தொடர்ந்து வற்புறுத்தி உள்ளார். இதனால் யாரும் பார்க்காத நேரத்தில் கள்ளக்காதலியும் அவரது வீட்டுக்கு நுழைந்துள்ளார். அங்கு இருவரும் உல்லாசம் அனுபவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இது எப்படியே அந்த பெண்ணின் உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து உறவினர்கள் நரசிம்மராஜூவின் கதவை தட்டி உள்ளனர். உள்ளே கள்ளகாதலியுடன் இருப்பதால் அவர் பதற்றமடைந்தார்.

நீண்நேரமாக அவர் கதவை திறக்கவில்லை. அதன்பிறகு ஒரு வழியாக கதவை திறந்தார். அப்போது நரசிம்மராஜூவும், அவரது கள்ளக்காதலியும் கையும், களவுமாக சிக்கி கொண்டனர். இதையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் நரசி்ம்மராஜூவை தனியாக அழைத்து சென்று சரமாரியாக தாக்கினர். இதில் அவர் பலத்த காயமடைந்தார்.

அதன்பிறகு நரசிம்மராஜூ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கேசி ஜெனரல் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி நரசிம்மராஜூ இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் யஷ்வந்தபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து நரசிம்மராஜூவை தாக்கியவர்கள் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே தான் நரசிம்மராஜூவை தாக்குவதற்காக பெண்ணின் உறவினர்கள் அழைத்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அதனை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+