பெட்ரூமில் கேமரா.. மனைவியை ஆபாச வீடியோ எடுத்த கணவர்.. நண்பர்களுடன் உறவு வைக்கும்படி மிரட்டிய ஷாக்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் வீட்டு பெட்ரூமில் மனைவியுடன் உல்லாசமாக இருப்பதை ரகசிய கேமரா வைத்து கணவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதன்பிறகு அந்த வீடியோவை வெளிநாடுகளில் உள்ள நண்பர்களுக்கு அனுப்பியதோடு, அவர்களுடன் உறவு கொள்ளும்படி மனைவியை கட்டாயப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூர் புட்டேனஹள்ளி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபர் சையத் இனாமுல் ஹக். இவருக்கு கடந்த 2024 டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. இந்நிலையில் தான் அவரது மனைவி புட்டேனஹள்ளி போலீசில் பரபரப்பான புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

in-bengaluru-husband-secretly-hid-camera-and-records-videos-and-forced-to-sex-with-foreign-friends

அந்த புகார் அனைவரையும் அதிர வைத்துள்ளது. புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: எனக்கும் சையத் இனாமுல் ஹக் என்பவருக்கும் கடந்த 2024ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமண நிச்சயதார்த்தத்தை தொடர்ந்து 2 மாதங்கள் கழித்து இருவரும் திருமணம் செய்து கொண்டோம்.

இது எனது கணவர் சையத் இனாமுல் ஹக்கிற்கு 2வது திருமணம். ஏற்கனவே அவர் முதலில் ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். அந்த திருமணத்தை மறைத்து ஏமாற்றி என்னை 2வது திருமணம் செய்துள்ளார். மேலும் பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாக அவரே கூறியுள்ளார். என்னை ஏமாற்றி திருமணம் செய்தது மட்டுமின்றி இப்போது கடுமையான தொல்லைகளை கொடுத்து வருகிறார்.

நாளுக்கு நாள் என் கணவரால் நான் அனுபவித்து வரும் கொடுமை அதிகரித்துள்ளது. வீட்டு பெட்ரூமில் எனக்கு தெரியாமல் ரகசியமாக கேமராவை பொருத்தி உள்ளார். அதன்பிறகு இருவரும் தாம்பத்தியத்தில் சேர்ந்து இருப்பதை அந்த கேமராவில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை வெளிநாடுகளில் உள்ள நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களை பார்க்க வைத்துள்ளார். அதுமட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் அவரது நண்பர்களுடன் உல்லாசமாக இருக்கும்படி வலியுறுத்தி வருகிறார். நான் மறுக்கும் பட்சத்தில் பெட்ரூம் கேமராவில் பதிவு செய்த வீடியோவை இணையதளங்களில் வெளியிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

திருமணத்தின்போது எனக்கு 340 கிராம் தங்க நகைகளை பெற்றோர் தந்தனர். அவருக்கு யமஹா பைக் வழங்கினர். இப்போது அந்த நகையை கேட்டு தொல்லை கொடுத்து வருகிறார். நகையை விற்பனை செய்து ஃபிளாட் வாங்க வேண்டும் என்று கூறி வருகிறார். நான் நகையை கொடுக்க மறுப்பதால் பொது இடங்கள், ஹோட்டல்கள், எனது பெற்றோர் வீடுகளில் வைத்தும் கூட எனது கணவர் என்னை தாக்கி துன்புறுத்துகிறார். இதனால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பெரும் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறேன்.

இதற்கு அவரது குடும்பத்தினரும் உடந்தையாக இருக்கின்றனர். இதனால் என் கணவர் அவரது சகோதரர், சகோதரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுபற்றிய புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அந்த பெண்ணின் கணவர் சையத் இனாமுல் ஹக் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுபற்றி அறிந்த இனாமுல் ஹக் தற்போது தலைமறைவாகி விட்டார்.

திருமணம் செய்த மனைவியுடன் உல்லாசமாக இருப்பதை ரகசிய கேமரா பொருத்தி வீடியோ எடுத்து சொந்த கணவரே தனது நண்பர்களுக்கு அனுப்பிய சம்பவம் பெங்களூரை அதிர வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+