ஹிந்தியில் பேச சொல்லி டெலிவரிபாய் மீது கொடூர தாக்குதல்.. பெங்களூரில் வெளிமாநில கும்பல் அட்டூழியம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் ஹிந்தியில் பேசும்படி டெலிவரிபாய் மீது வெளிமாநில பெண் உள்பட சிலர் சேர்ந்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் அது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்டும் என்று வார்னிங் செய்துள்ளனர்.

in-bengaluru-zepto-delivery-boy-attacked-by-a-group-after-he-refuses-to-speak-hindi

வடகர்நாடகா மாவட்டத்தை சேர்ந்தவர் பசவராஜ். இவர் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். பெங்களூரில் தங்கி படித்து வருகிறார். தனது படிப்பு செலவிற்காக பசவராஜ் 'ஜெப்டோ' டெலிவரி பாய் வேலை செய்து வருகிறார். இந்த பணியை அவர் 'பார்ட்டைம்'மாக மேற்கொண்டு வருகிறார்.

இன்று அதிகாலை சுமார் 4.40 மணிக்கு பசவராஜ் டெலிவரி கொடுக்க பெங்களூர் எலகங்கா நியூ டவுன் 4வது ஸ்டேஜ் பகுதிக்கு சென்றார். டெலிவரியை முடித்துவிட்டு பசவராஜ் அங்கிருந்து புறப்பட்டார்.

சந்தோஷ் நகர் நோக்கி அவர் சென்று கொண்டிரந்தார். அப்போது எதிரே நடந்து சென்ற சில பெண்கள் ஹிந்தி மொழியில் அவரை திட்டியபடி சென்றுள்ளனர். ஹிந்தி தெரியாததால் அது பசவராஜ்க்கு புரியவில்லை. இதனால் அவர்கள் என்ன சொல்கிறார்கள்? என்பதை தெரிந்து கொள்ள பசவராஜ் ஹிந்தி தெரியாது.. கன்னடத்தில் சொல்லும்படி கன்னடத்தில் கூறியுள்ளார். அதற்கு அவர்கள் ஹிந்தியில பேசும்படி கூறி திட்டி அவமானப்படுத்தி உள்ளார்.

மேலும் அந்த இளம்பெண்கள் அவரது தொப்பியை கழற்றி சட்டையை பிடித்து இழுத்து தாக்க முயன்றனர். இதனால் அதிர்ந்துபோன பசவராஜ் உடனடியாக 112 என்ற போலீஸ் கட்டுப்பாட்டு அறை மற்றும் நண்பர் அசோக் ஆகியோருக்கு போன் செய்து பேசினார். இதில் கோபமான பெண்கள், சில இளைஞர்களை அங்கு வரவைழத்தனர். பசவராஜை அவர்கள் அனைவரும் சேர்ந்து தாக்கினர். இந்த சமயத்தில் ஸ்பாட்டுக்கு வந்த அசோக், நண்பன் பசவராஜை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரையும் அடித்து உதைத்தனர்.

அதன்பிறகு போராடி பசவராஜ் மற்றும் அசோக் ஆகியோர் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்தனர். பசவராஜ் கொடுத்த புகாரின் பேரில் எலகங்கா நியூ டவுன் போலீசார் பிஎன்எஸ் சட்டப்பிரிவு பிஎன்எஸ் 118 (1) (அபாயகரமான ஆயுதங்கள் கொண்டு தாக்குதல்), 352 (அமைதியை சீர்க்குலைக்கும் நோக்கில் ஒருவரை உள்நோக்கத்துடன் அவமானப்படுத்தி தாக்குதல்) உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாக்குல் நடத்தியவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

இந்த சம்பவம் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த சிசிடி கேமரா பதிவு தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. அதனை பார்க்கும் கன்னட அமைப்பினர் கொந்தளித்து வருகின்றனர். பசவராஜ் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று கன்னட அமைப்பினர் எச்சரிக்கை செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+