கொரோனாவுக்கு மத்தியிலும்... அதிக தொகை ஒதுக்கியதற்கு நன்றி.. விமானப் படை தளபதி
பெங்களூரு: கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு அதிகப்படுத்தப்பட்டுள்ளது மிக முக்கிய முடிவு என்று இந்திய விமானப் படை தளபதி பதாரியா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் 2020-21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். கொரோனா பரவல் காரணமாக இந்த பட்ஜெட் காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.
அதேபோல கொரோனாவுக்கு பின் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால் இதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கும் ஒதுக்கப்பட்ட தொகைகள் அதிகப்படுத்தப்பட்டன. கொரோனா தடுப்பூசி பணிகளை மேற்கொள்ள 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பாதுகாப்பு துறை செலவுகள்
எல்லையில் சீனாவுடனான மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்பு துறை ஒதுக்கப்படும் தொகையும் சுமார் 7.4% அதிகப்படுத்தப்பட்டது. இந்தாண்டு மட்டும் சுமார் 4 லட்சத்து 78 ஆயிரத்து 195 கோடி ரூபாய் பாதுகாப்பு துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புதிய ஆயுதங்களை வாங்க கடந்த முறை ஒதுக்கப்பட்ட ரூ1.14 லட்சம் கோடியைவிட 18% அதிகமாக ரூ.1.35 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு நன்றி
இந்நிலையில், பாதுகாப்பு துறை ஒதுக்கப்படும் தொகை அதிகப்படுத்தப்பட்டுள்ளது குறித்து இந்திய விமானப் படை தளபதி பதாரியா கூறுகையில், "இந்த கொரோனா காரணமாக நமது நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதை அனைவரும் அறிவோம். இந்தச் சூழ்நிலையில், பாதுகாப்புக்கு ஒதுக்கப்படும் தொகை அதிகப்படுத்தப்பட்டுள்ளது உண்மையில் மிகப் பெரிய விஷயம். இதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

கூடுதல் செலவு
கடந்தாண்டும்கூட பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருந்த தொகையைவிட கூடுதலாக 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவானது. முப்படைக்கும் தேவையான தளவாடங்களை கொள்முதல் செய்ய இந்தத் தொகை பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் நமது ராணுவத்தின் திறன் அதிகரிக்கும்" என்றார், கடந்தாண்டு இந்தக் கூடுதல் தொகையைக் கொண்டு ஸ்பைஸ் -2000 , ஸ்பைக் டேங்க், எஸ்.ஐ.ஜி துப்பாக்கிகள் ஆகியவற்றை ரஷ்யாவிலிருந்து இந்தியா வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய சீனா மோதல்
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது, அதிலும் குறிப்பாக கல்வான் மோதலுக்கு பின் நிலைமை மிகவும் மோசமானது, எல்லையில் இரு தரப்பு ராணுவமும் தொடர்ந்து வீரர்களை குவித்து வருகின்றனர். இதனாலேயே இந்தியா தனது பாதுகாப்பு செலவுகளை தொடர்ந்து அதிகப்படுத்தி வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications