கர்நாடகாவில் கனமழை தொடர்கிறது... காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு
பெங்களூரு: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 7,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2,500 கனஅடி திறக்கப்பட்டு வந்த நிலையில், தொடர் மழையால் 7,500 கனஅடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதே போல் கே.ஆர்.எஸ். அணையில் நீர் திறப்பு 2,000 கன அடியில் இருந்து 2,511 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆனையத்தின் கூட்டத்தில் காவிரி படுகையில் மழையின் அளவை பொறுத்தும், அணைக்கான நீர் வரத்தை பொறுத்து தமிழகத்திற்கு ஜூன் மாதம் வழங்க வேண்டிய 9.19டி.எம்.சியும், ஜூலை மாதம் வழங்க வேண்டிய 31.24 டி.எம்.சியையும் சேர்த்து மொத்தமாக 40.43 டி.எம்.சி நீரை கர்நாடகா திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில் கடந்த மாதம் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக கே.ஆர்.எஸ், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு வரும் நீரின் அளவு 15 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இதனால் 13 டிஎம்சி இருந்த அணைகளின் கொள்ளளவு தற்பொழுது 30 டிஎம்சி ஆக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில், கேரள மாநிலத்தின் வயநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த பருவ மழை இன்னும் ஒரு சில தினங்களில் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அவ்வாறு பருவமழை தீவிரம் அடையும் பட்சத்தில் கபினி அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கக்கூடும். அதன் மூலம் தமிழகத்திற்கு திறக்கக் கூடிய நீரின் அளவும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications