மத்திய கர்நாடகாவில்.. பாஜகவுக்கு ஏமாற்றம்..கை ஓங்கும் காங்கிரஸ்..இந்தியா டுடே கருத்துக்கணிப்பு
பெங்களூர்: கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், மத்திய கர்நாடகா மண்டலத்தில் உள்ள 23 தொகுதிகளில் காங்கிரஸ் 12 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று இந்தியா டுடே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.
கர்நாடகாவில் தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் 24 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதனால் அம்மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதன்படி, கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 10 (இன்று) ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி அறிவித்தது.

வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 13 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி நிறைவு பெற்றது. தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை விறு விறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கர்நாடக தேர்தல் களத்தில் மொத்தம் 2,615 வேட்பாளர்கள் உள்ளனர். ஆளும் பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் கட்சி சார்பில் 223 வேட்பாளர்களும் ஜேடிஎஸ் கட்சி சார்பில் 209 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. கர்நாடகாவில் பாஜக தற்போது 116 இடங்களுடன் தனிபெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி வரும் நிலையில், அடுத்து யார் ஆட்சி என்ற வாக்காளர்களின் தீர்ப்பு வரும் 13 ஆம் தேதி தெரியும். வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், 23 தொகுதிகளை கொண்ட மத்திய கர்நாடகா மண்டலத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது.
இதில், காங்கிரஸ் கட்சி 12 இடங்களில் வெற்றி பெறும் என்று இந்தியா டுடே கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. பாஜகவிற்கு 10 இடங்களும், ஜேடிஎஸ் கட்சி ஒரு இடத்திலும் வெல்லும் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது. கடலோர கர்நாடகாவில் பாஜக கை ஓங்கியிருந்த நிலையில், மத்திய கர்நாடகாவில் நிலைமை மாறியிருக்கிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications