சுடச்சுட உணவு சாப்பிட்டு கொண்டே சினிமா பார்க்கலாம்.. இந்தியாவில் முதல் முறையாக பெங்களூரில் அறிமுகம்
பெங்களூர்: இந்தியாவிலேயே முதல் முறையாக ‛டைனிங்' டேபிளில் அமர்ந்து சினிமா பார்த்தபடியே சுடச்சுட தங்களுக்கு பிடித்த உணவுகளை சாப்பிடும் வசதி பெங்களூரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி பெங்களூர் ஓசூர் ரோட்டில் உள்ள எம்5 இசிட்டி மாலில் உள்ள தியேட்டரில் கொண்டு வரப்பட்டுள்ளது.
தியேட்டர்களுக்கு சினிமா பார்க்க செல்லும்போது வெளியில் இருந்து உணவு, நொறுக்குத்தீனி உள்ளிட்டவற்றை எடுத்து செல்ல அனுமதியில்லை. அதேவேளையில் தியேட்டரில் உள்ள ‛கபே'வில் டீ, காபி, பாப்கார்ன், பப்ஸ் உள்பட பிற திண்பண்டங்களை வாங்கி கொண்டு தியேட்டரில் படம் பார்த்தபடி சாப்பிட அனுமதி உள்ளது.

ஒருவேளை தியேட்டரில் படம் பார்க்கும்போது பசி எடுத்தால் அங்குள்ள ‛கபே'வில் விற்பனையாகும் கூல்ட்ரிங்ஸ், காபி, டீ, திண்பண்டங்களை மட்டுமே சாப்பிட முடியும். கட்டாயமாக உணவு தான் சாப்பிட வேண்டும் என்றால் சினிமா முடிந்த பிறகு அருகே உள்ள உணவகங்களுக்கு தான் செல்ல வேண்டும்.
இந்த குறையை போக்கும் வகையில் பெங்களூரில் உள்ள தியேட்டரில் புதிய வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக ‛டைனிங் டேபிளில்'அமர்ந்து சினிமா பார்த்தபடியே உணவு சாப்பிடும் வசதி பெங்களூரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெங்களூர் ஓசூர் ரோட்டில் எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தின் அருகே அமைந்துள்ள எம்5 இசிட்டி மாலில் உள்ள பிவிஆர் ஐநாக்ஸ் தியேட்டரில் தான் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இங்கு ‛டைனிங் டேபிள்' வசதியுடன் சொகுசான சோபாக்கள் போடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதில் அமர்ந்து பிடித்த உணவை சுடச்சுட சாப்பிட்டு கொண்டே சினிமாவை ரசிக்கலாம். இதன்மூலம் சினிமா ரசிகர்கள் வெளியே எழுந்து செல்ல வேண்டாம். அவர்கள் இருக்கும் இடத்திலேயே அவர்களுக்கு தேவையான உணவுகள் கொண்டு வந்து தரப்படும்.

இதற்காக பிரத்யேகமாக மெனு தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் குளிர்பானங்கள், டீ, காபி இடம்பெற்றுள்ளது. மேலும் பல்வேறு வகையான உணவுகள் உள்ளன. க்ரோஸ்டா, சினி கஃபே, டைன்-இன், ஸ்டீமெஸ்ட்ரி, வோக்ஸ்டார், இன்-பிட்வீன், ஃப்ரைடோபியா, டாக்ஃபாதர் மற்றும் லோக்கல் ஸ்ட்ரீட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இதில் ஒன்றை பொதுமக்கள் தேர்வு செய்து அதில் உள்ள உணவுகளை ருசிக்கலாம்.
அதன்படி பீட்சா, பர்க்கர், சாண்ட்விச் முதல் வேகவைத்த உணவு, வறுத்தெடுக்கப்ட்ட உணவுகள் முதல் பெங்களூர், கர்நாடகாவில் பிரபலமாக உள்ள உணவுகளை இருந்த இடத்தில் இருந்தே ஆர்டர் செய்து சாப்பிடலாம். இதுபற்றி பிவிஆர் ஐநாக்ஸின் நிர்வாக இயக்குனர் அஜய் பிஜ்லி கூறுகையில், "M5 ECity மாலில் எங்கள் புதிய மல்டிபிளக்ஸ் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் புதிய முறையில் சினிமாவை ரசிக்கும் வகையில் இதனை கொண்டு வந்துள்ளோம். இதுதான் இந்தியாவின் முதல் டைன்-இன் ஆடிட்டோரியம் உணவகம். இது மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும்'' என்று கூறியுள்ளார்.
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு












Click it and Unblock the Notifications