சம்பவம் செய்த இண்டிகோ.. சொந்த கல்யாண ரிசப்ஷனிலேயே ஆன்லைனில் கலந்து கொண்ட கர்நாடக ஜோடி! வினோதம்
பெங்களூர்: இன்று நாடு முழுக்க பல நூறு இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இதனால் பல ஆயிரம் பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அப்படி விமான ரத்தால் ஒரு தம்பதியால் தங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் அவர்கள் தங்கள் சொந்த ரிசப்ஷனுக்கே ஆன்லைன் மூலமாகவே கலந்து கொண்டனர்.
கடந்த சில நாட்களாகவே இண்டிகோ நிறுவனத்தில் மிக பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாடு முழுக்க பல நூறு இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்திருந்த புதிய விதிகள் காரணமாகவே இந்தச் சிக்கல் எனக் கூறப்படுகிறது. விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

திருமண வரவேற்பு
அப்படித் தான் விமானம் ரத்து செய்யப்பட்டதால் ஒரு தம்பதியால் தங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. கர்நாடகாவின் ஹுப்பள்ளியில் அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கவிருந்தது. ஆனால், அந்தத் தம்பியால் தங்கள் திருமண வரவேற்பிற்கு நேரில் வர முடியவில்லை. இதனால் சொந்தக் கல்யாண ரிசப்ஷனுக்கே அவர்கள் காணொலி வாயிலாகவே கலந்து கொண்டனர். இந்தத் தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
பெங்களூரில் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்பவர் ஹுப்பள்ளி பகுதியைச் சேர்ந்த மேதா க்ஷீர்சாகர்.. இவருக்கும் ஒடிசாவின் புவனேஷ்வரை சேர்ந்த சங்கமா தாஸ் என்ற பெண்ணுக்கும் கடந்த நவம்பர் 23ம் தேதி புவனேஷ்வரில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவர்களுக்கு ஹுப்பள்ளியில் உள்ள குஜராத் பவனில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.
என்ன நடந்தது!
அவர்கள் கடந்த டிசம்பர் 2ம் தேதி கர்நாடகா வர திட்டமிட்டிருந்தனர். முதலில் விமானம் பல மணி நேரம் தாமதம் என அவர்களுக்குத் தகவல் வந்தது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு கடைசியில் விமானம் முழுமையாக ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. இதன் காரணமாக அந்தத் தம்பதியால் திட்டமிட்டபடி கர்நாடகாவுக்கு வர முடியவில்லை.
இருப்பினும், இங்கு ஹுப்பள்ளியில் ரிசப்ஷன் வேலை எல்லாம் முடிந்திருந்தது. கர்நாடகாவின் பல பகுதிகளில் இருந்தும் ரிசப்ஷனில் கலந்து கொள்ள உறவினர்கள் வந்திருந்தனர். இதனால் வேறு வழியில்லாமல் அந்த புதுமண ஜோடி தங்கள் சொந்தத் திருமணத்திலேயே ஆன்லைன் மூலமாகவே கலந்து கொண்டனர். மணமக்களுக்கான இருக்கைகளில் அவர்களது பெற்றோர் அமர்ந்து சடங்குகளைச் செய்தனர். அந்த இளம் ஜோடி திருமண உடையுடன் புவனேஸ்வரில் இருந்தபடி காணொலி வாயிலாகத் திருமண வரவேற்பில் பங்கேற்றனர்.
தாயார் தகவல்
இது தொடர்பாக மணப்பெண்ணின் தாயார் கூறுகையில், "நவம்பர் 23ம் தேதி திருமணம் செய்தோம். டிசம்பர் 3ம் தேதி திருமண வரவேற்பிற்கு திட்டமிட்டிருந்தோம். நாங்கள் (மாப்பிள்ளை வீட்டார்) முன்பே புவனேஷ்வரில் இருந்து திரும்பிவிட்டோம். திருமண வரவேற்பிற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தோம். இருப்பினும், அவர்கள் வரத் திட்டமிட்டிருந்த விமானம் ரத்தாகிவிட்டது. கடைசி வரை முயன்று பார்த்தார்கள். ஆனாலும், முடியவில்லை.
நாங்கள் பல உறவினர்கள் அழைத்திருந்தோம். இதனால் கடைசி நிமிடத்தில் ரிசப்ஷனை ரத்து செய்ய முடியவில்லை. இதனால் அவர்கள் ஆன்லைன் மூலம் கலந்து கொள்ளச் செய்தோம். அதை இங்குப் பெரிய திரையில் ஒளிபரப்பினோம். எல்லாத் திருப்திகரமாக நடந்து முடிந்தது" என்றார்.
ஆன்லைன் வாயிலாக
இன்றைய தினம் நாடு முழுக்க பல ஆயிரம் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக டெல்லி மற்றும் சென்னையில் விமானங்கள் மொத்தமாக ரத்து செய்யப்பட்டன. தினசரி 2,200 விமானங்களை இயக்கும் இண்டிகோ, வியாழக்கிழமை 500க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்தது. 20 ஆண்டுக்கால இண்டிகோ வரலாற்றில் ஒரே நாளில் இத்தனை விமானங்கள் ரத்து செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications