தரை தட்டிய இண்டிகோ விமானம்.. பெங்களூர் விமான நிலையத்தில் நூலிழையில் தப்பிய 225 பயணிகள்.. திக்திக்
பெங்களூர்: அசாம் மாநிலம் கவுஹாத்தியில் இருந்து வந்த இண்டிகோ விமானம் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது திடீரென்று அதன் வால்பகுதி தரைத்தட்டிய சம்பவம் அதில் பயணித்த 225 பயணிகளையும் திடுக்கிட வைத்தது. அதிர்ஷ்டவசமாக பைலட் விமானத்தை வெற்றிக்கரமாக தரையிறக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
அசாம் மாநிலம் கவுஹாத்தியில் இருந்து பெங்களூருவுக்கு விமானம் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று இண்டிகோவின் ஏர்பஸ் ஏ 321 நியோ ரகத்தை சேர்ந்த 6E 5542 என்ற எண் கொண்ட பயணிகள் விமானம் பெங்களூருவுக்கு புறப்பட்டது.

இந்த விமானத்தில் மொத்தம் 225 பயணிகள் பயணித்தனர். விமானிகள், விமான பணியாளர்கள் பயணம் செய்தனர். இந்த விமானம் பெங்களூரில் தரையிறங்க முயன்றது.
ஆனால் சூறைக்காற்று வீசியதால் விமானத்தால் உடனடியாக தரையிறங்க முடியவில்லை. இதனால் முதல் தரையிறங்கும் முயற்சி கைவிடப்பட்டது. விமானம் மீண்டும் வானில் பறந்தது. அடுத்து 2வது கட்டமாக விமானம் தரையிறங்கியது.
அப்போது விமானத்தின் வால் பகுதி தரையில் மோதியது. இதனால் விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் அதிர்ந்து போயினர். இருப்பினும் விமானிகள் சாதுர்யமாக விமானத்தை தரையிறக்கினர். அனைத்து பயணிகளும், விமானிகளும் இறங்கினர்.
இந்த சம்பவத்தை இண்டிகோ நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதுபற்றி அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ''கவுஹாத்தி - பெங்களூர் இண்டிகோ 6E 6542 என்ற விமானம் தரையிறங்கியபோது வழக்கத்துக்கு மாறாக 'Abnormal Runway Contact' பிரச்சனையை எதிர்கொண்டது. இதற்கு பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வீசிய சூறைக்காற்று தான்.
இருப்பினும் பயணிகள், விமான பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டன. தற்போது இந்த விமானம் பராமரிப்பு பரிசோதனைக்கு செல்கிறது. அனைத்து தேவையன பாதுகாப்பு அம்சங்களும் உறுதி செய்த பிறகு இந்த விமானம் மீண்டும் இயக்கப்படும்'' என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
