ஏரோபிளேன் மோடுக்கு எண்டு கார்டு.. விமானத்தில் இணையதள சேவை.. இஸ்ரோ குட்நியூஸ்
பெங்களூர்: இந்தியாவில் விமானத்தில் பயணிக்கும் போது இணையதள சேவையை பயன்படுத்த முடியாது. ஏனெனில் விமான நிலையங்களில் இருந்து விமானிகளுக்கு கிடைக்க வேண்டிய தகவல்கள் தடைப்பட கூடும் என்பதால் தான், இந்த சேவை தரப்படுவது இல்லை. இந்நிலையில் இந்திய வானத்தில் இணைய சேவை விரைவில் கிடைக்க போகிறது. இஸ்ரோ அதற்கான முயற்சியில் இறங்கி உள்ளது.
இந்திய வானில் விமானங்களில் செல்லும் போது, இணையதள சேவையை விமான பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை இருக்கிறது. ஏனெனில் விமான நிலையங்களில் இருந்து விமானிகளுக்கு கிடைக்க வேண்டிய தகவல்கள் தடைப்பட கூடும் என்பதால் இந்த வசதி கிடைக்கவில்லை. எனினும் இந்திய விமானங்களில் இணைய இணைப்பு சேவை அண்மைக் காலங்களில் மிக குறைந்த அளவில் உள்ளது. இந்த சேவையை முழுமையாக பெற முடியாது..

இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவைச் சேர்ந்த தகவல் தொடர்பு நிறுவனமான வியாசாட் என்ற உலகளாவிய செயற்கைக்கோள் தகவல் தொடர்பு நிறுவனம் இந்திய வானத்தில் இணைய இணைப்பை வழங்க முடியும் என்று அறிவித்துள்ளதால் எல்லாமே மாற போகிறது. இஸ்ரோ உடன் இணைந்து இணைய சேவை வழங்க போகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இதுதொடர்பான செயற்கைகோளை விண்ணில் ஏவ இருக்கிறது. இது வெற்றிகரமாக நடந்தால், மிக உயர் தொழில்நுட்ப செயற்கைகோள் 'ஜிசாட்-20' துணையுடன் விமானத்தில் இணையதள சேவையும் விமானங்களில் சாத்தியமாகும்.
இஸ்ரோவின் கீழ் செயல்படும், பெங்களூருவில் உள்ள யு.ஆர்.ராவ் செயற்கைகோள் மையம் இந்த உயர் செயல்திறன் செயற்கைகோளை உருவாக்கி உள்ளது. இந்த உயர் செயல்திறன் செயற்கைகோள் எப்படி என்றால், பாரம்பரிய செயற்கைகோள்களை விட அதிக விகிதத்தில் தரவை அனுப்பக்கூடிய தகவல் தொடர்பு செயற்கைகோள் ஆகும்.
இது செயற்கைகோள் அடிப்படையிலான இணைய இணைப்பை வழங்கும். அத்துடன், ஐந்தில் ஒரு பங்கு திறனில் விமானத்தில் இணையதள சேவையை வழங்குவதற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. தொலைதூர இடங்களை இணைப்பது என்பது உலகளாவிய செயற்கைகோள் தகவல் தொடர்பு நிறுவனமான வியாசாட் இன்க் இந்த திட்டத்தை இஸ்ரோவுடன் இணைந்து செயல்படுத்த போகிறது.
இந்திய ஆயுதப்படைகளுக்கு ஏற்கனவே மிகப்பெரிய அளவில் இணைய இணைப்புகள் செயற்கை கோள் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்தியாவில் விமானத்தில் இணைய வசதி இல்லாத குறை நீடித்து வந்தது. இந்த குறையை நிவர்த்தி செய்ய தற்போது வியாசாட் மற்றும் இஸ்ரோ இணைந்துள்ளன. இதன் மூலம் விரைவில் விமானங்களில் இணைய சேவை கிடைக்க போகிறது..
-
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
காரை அடிக்கடி துடைத்தால் இப்படியொரு பிரச்சனை வருமாம்.. தெரியாம கூட இதை மட்டும் செய்ய வேண்டாம்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications