மசூதியில் ஸ்பீக்கர் எதுக்கு? அல்லா பற்றி கர்நாடக பாஜக தலை சர்ச்சைக்குரிய விமர்சனம்! எகிறிய எதிர்ப்பு

அல்லாவிற்கு என்ன காது கேட்காதா? என்று பாஜக மூத்த தலைவர் கேஎஸ் ஈஸ்வரப்பா கேள்வி எழுப்பி உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: அல்லா குறித்து பாஜக மூத்த தலைவர் கேஎஸ் ஈஸ்வரப்பா பேசியது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது.

கர்நாடகாவில் இந்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் கடந்த சில வருடங்களாகவே அங்கே மத ரீதியான மோதல்கள் அதிகரித்து வருகின்றன. கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கிலும் மாணவிகள் தரப்பு தோல்வி அடைந்து உள்ளது. இது போக உடுப்பியில் உள்ள ஹொஸா மார்குடி கோவிலில் நடக்கும் விழாவில் இஸ்லாமியர்கள் கடை போட தடை விதிக்கப்பட்டது.இங்கு எல்லா வருடமும் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கடை போட்டு வந்தனர்.

தடை

தடை

இந்த வருடம் அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கர்நாடகாவில் ஹலால் பொருட்களை வாங்க கூடாது என்றும் இந்துக்கள் இடையே பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இது போக இஸ்லாமியர்களின் கடைகளை புறக்கணிக்க வேண்டும் என்று கடுமையாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இப்படி இந்துக்கள் இஸ்லாமியர்கள் இடையிலான பிரிவினை, மத மோதல் நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகிறது. இந்த நிலையில்தான் அங்கு வழிபாட்டு தலங்களில் லவுட் ஸ்பீக்கர் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. முதலில் சிக்மங்களூர் நகராட்சியில் இந்த கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஏன் இப்படி

ஏன் இப்படி

தற்போது பெங்களூர் உள்ளிட்ட கர்நாடகாவில் மற்ற பகுதிகளிலும் மசூதிகள், சர்ச்கள், கோவில்களில் இந்த கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. காற்று மாசு ஏற்படுத்துவதாக கூறி இந்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. மசூதிகளில்தான் அதிகமாக ஸ்பீக்கர் இருக்கும் என்பதால் அங்கே இந்த தடை தீவிரமாக நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் இஸ்லாமிய வழிபாடு குறித்தும் அல்லா குறித்தும் பாஜக மூத்த தலைவர் கேஎஸ் ஈஸ்வரப்பா பேசியது பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. அவர் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டு இருக்கையில் அருகில் இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்தும் சத்தம் ஸ்பீக்கரில் கேட்டது. இதையடுத்து கோபம் அடைந்த ஈஸ்வரப்பா கடுமையான விமர்சனங்களை வைத்தார்.

விமர்சனம்

விமர்சனம்

அதில், அல்லாவிற்கு என்ன காது கேட்காதா? நான் எங்கே போனாலும் இந்த தொழுகை சத்தம் கேட்கிறது. எனக்கு இது தலைவலியை கொடுக்கிறது. இதில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரப்போகிறது. இல்லையென்றால் இந்நேரத்திற்கு இந்த சத்தம் கேட்டு இருக்காது. இதற்கு நான் ஒரு முடிவு கட்டி இருப்பேன். அல்லா ஸ்பீக்கரில் தொழுதால் மட்டும்தான் கேட்பாரா? கோவிலில் கூட மக்கள் வழிபாடு நடத்துகிறார்கள். அவர்கள் இப்படியா செய்கிறார்கள். அவர்கள் ஸ்பீக்கரிலா தினமும் வழிபாடு நடத்துகிறார்கள். நீங்கள் ஸ்பீக்கர் போட்டுதான் வழிப்பாடு நடத்த வேண்டும் என்றால்.. அல்லாவிற்கு காது கேட்காதா? என்று கூறியுள்ளார். முன்னாள் துணை முதல்வரான ஈஸ்வரப்பா ஏற்கனவே இது போல் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி இருக்கிறார். இந்த நிலையில்தான் அவரின் தற்போதைய கருத்து சர்ச்சையாகி உள்ளது.

கர்நாடகா

கர்நாடகா

கர்நாடகாவில் பொது இடங்களில் லவுட் ஸ்பீக்கர் பயன்படுத்த கட்டுப்பாடுகளை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த கட்டுப்பாடுகள் இத்தனை நாட்களாக பின்பற்றப்படாமல் இருந்தது. இந்த நிலையில்தான் மசூதிகள், சர்ச்கள், கோவில்களில் மற்றும் பப்கள், பார்ட்டி நடக்கும் இடங்களில் லவுட் ஸ்பீக்கர் பயன்படுத்த கட்டுப்பாடு விதித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 300க்கும் மேற்பட்ட வழிபாட்டு தலங்களுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் தெரிவித்துள்ளார். ஹைகோர்ட் அனுமதித்த அளவை விட அதிக அளவு டெசிபல் கொண்ட ஒலிபெருக்கிகளை பயன்படுத்தியதாக கூறி இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் 49 வழிபாட்டு தலங்கள் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது. இந்து வலதுசாரி அமைப்புகள் பல கொடுத்த புகாரின் அடைப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+