வாழ்வா சாவா ரேஸ்.. பாஜகவிடம் பணிந்த குமாரசாமி! 2024 தேர்தலில் கணக்கு பலிக்குமா? கூட்டணியின் பின்னணி
பெங்களூர்: கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிந்து நாடாளுமன்ற தேர்தலுக்கு நாடே தயாராகி வரும் நிலையில் புதிய திருப்பமாக கர்நாடக மாநில கட்சியான குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம், பாஜகவுடன் 2024 தேர்தலில் கூட்டணியை அறிவித்துள்ளது எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதை விரிவாக பார்ப்போம்.
இந்திய முன்னாள் பிரதமர் தேவகவுடாவால் தொடங்கப்பட்டு தற்போது, கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தலைமை தாங்கி வரும் கட்சி மதசார்பற்ற ஜனதா தளம். கடந்த 2018 ஆம் ஆண்டு கர்நாடக தேர்தலில் குறைவான இடங்களில் வெற்றிபெற்றாலும் தேர்தலுக்கு பிறகு காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்தது அக்கட்சி. அம்மாநில முதலமைச்சராக குமாரசாமி பதவியேற்றார்.

ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே பாஜக குதிரை பேரம் மூலமாக காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்.எல்.ஏ.க்களை வாங்கி குமாரசாமியின் ஆட்சியை கவிழ்த்தது. அதன் பிறகு தொடர்ந்து பாஜக, ஆர்.எஸ்.எஸ். குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த குமாரசாமி கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற கர்நாடக தேர்தலில் தனித்து போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் இறங்கிவிட்ட நிலையில், தங்களின் ஆட்சியையே கவிழ்த்த பாரதிய ஜனதாவுடன் குமாரசாமியின் கட்சியின் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து உள்ளது. பாஜக தலையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தாங்கள் இணைந்து உள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார் குமாரசாமி.
நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பின்னர், 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற ஆறு மாதங்களே உள்ள நிலையில், பாஜக கூட்டணியில் இணைய ஜேடிஎஸ் முடிவு செய்துள்ளது. கர்நாடகாவில் பாஜக - ஜேடிஎஸ் கூட்டணியின் அரசியல் கணக்கு பலிக்குமா?
மதசார்பற்ற ஜனதா தளம் கர்நாடகாவின் தென்பகுதியில் அதிக செல்வாக்குடன் செயல்பட்டு வரும் கட்சி. அங்கு காங்கிரஸுடன் நீண்டகாலமாக அக்கட்சி போட்டி போட்டு வருகிறது. 2018 கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர், அப்பகுதியில் பாஜகவின் செல்வாக்கு பெரிய அளவில் இல்லை.
ஆனால், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டபோது, 28 நாடாளுமன்றத் தொகுதிகளில் 25 ஐ பாஜக கைப்பற்றிய. 2023 சட்டமன்றத் தேர்தலில், ஜேடிஎஸ் கட்சியின் வாக்கு சதவீதம், அதன் கோட்டையான தெற்கு கர்நாடகாவிலும் குறைந்து, காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு வாக்குகள் சென்றுவிட்டன. அதன் அடிப்படையில் பார்த்தால் குறைந்து வரும் தங்கள் கட்சியின் வாக்கு விகிதத்தை காப்பாற்றவும், கட்சியின் செல்வாக்கை தக்க வைக்கவுமே குமாரசாமி பாஜகவுடன் கைகோர்த்து இருப்பது தெரிகிறது.
பாஜக - ஜேடிஎஸ் கூட்டணி தேர்தல் வெற்றியைப் பெற்றுத் தருமா? என்று கேட்டால் அதற்கு வாய்ப்புகள் உள்ளன. 2023 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், அனைத்து 224 சட்டமன்றத் தொகுதிகளிலும் பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சிகளின் வாக்கு சதவீதத்தைச் சேர்த்தால், காங்கிரஸ் பெற்ற 135 இடங்கள் 90 என குறைந்துவிடும்.
ஆனால், அரசியல் கட்சிகள் வைக்கும் கூட்டணிகள் எல்லா நேரத்திலும் கூட்டணி கட்சிகளின் வாக்குகளை சேர்க்கும் என்று சொல்லிவிட முடியாது. அதேபோல் சட்டமன்ற தேர்தலில் கிடைக்கும் வாக்கு விகிதம், நாடாளுமன்ற தேர்தலில் கிடைக்கும் எனவும் சொல்ல முடியாது. சில சமயங்களில் கூட்டணி வைக்கும் கட்சியை பிடிக்காவிட்டால், காலம் காலமாக ஆதரவளித்து வரும் கட்சிக்கே மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
2019 நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளாம் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டபோது இதுதான் நடந்தது. 2018 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் பெற்ற வாக்குகளை எளிமையாகச் சேர்த்தால், அவை 152 இடங்களைக் கைப்பற்றியிருக்கும். ஆனால், உண்மையில் அவை 224 சட்டமன்றத் தொகுதிகளில் 47 தொகுதிகளை மட்டுமே வென்றன. எனவே இன்னும் சில மாதங்கள் பொறுத்திருந்தால் நமது கேள்விகளுக்கான விடை கிடைக்கும்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை!












Click it and Unblock the Notifications