அண்ணாமலை பணியாற்றியதால் பாஜக படுதோல்வி அடைந்ததா? ரிசல்ட் சொல்வது என்ன? அந்த மாவட்டம் க்ளீன் ஸ்வீப்!
பெங்களூர் : தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கர்நாடகாவில் பாஜகவுக்காக தீவிரமாக தேர்தல் பணியாற்றிய நிலையில் அக்கட்சி ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. கர்நாடகாவில் பாஜகவின் தோல்விக்கு அண்ணாமலை காரணம் என பலரும் விமர்சித்து வருகின்றனர். அண்ணாமலை பணியாற்றிய தொகுதிகளில் பாஜக எவ்வளவு சீட்களில் வென்றது? வாங்க பார்க்கலாம்.
கர்நாடகா தேர்தலுக்காக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானும், தேர்தல் இணைப் பொறுப்பாளர்களாக மன்சுக் மாண்டவியா மற்றும் தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரும் நியமிக்கப்பட்டிருந்தனர். கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மே 10-ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது.

கர்நாடகாவில் அண்ணாமலை : கர்நாடகாவில் பல ஆண்டுகள் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் அண்ணாமலைக்கு இருப்பதை கருத்தில்கொண்டு அவரை அங்கு தேர்தல் இணைப் பொறுப்பாளராக பாஜக தலைமை களமிறக்கியது. கர்நாடகாவில் உள்ளதில் 10 மாவட்டங்களில் 86 தொகுதிகள் அண்ணாமலை பொறுப்பில் வழங்கப்பட்டது. இவை பெரும்பாலும் தமிழர்கள் அதிகம் உள்ள தொகுதிகள்.

உடுப்பி மாவட்டத்தில் 5 தொகுதிகள், சிக்மகளூர் மாவட்டத்தில் 5 தொகுதிகள், தாவணகெரே மாவட்டத்தில் 7 தொகுதிகள், ஷிவமொகாவில் 7 தொகுதிகள், கோலார் மாவட்டத்தில் 6 தொகுதிகள், மாண்டியாவில் 7 தொகுதிகள், ஹாசன் மாவட்டத்தில் 7 தொகுதிகள், தட்சிண கன்னடாவில் 8 தொகுதிகள், பெங்களூரில் 28 தொகுதிகள், உத்தர கன்னடாவின் 6 தொகுதிகள் என 86 தொகுதிகள் அண்ணாமலைக்கு ஒதுக்கப்பட்டது.
தீவிர தேர்தல் பணி : கர்நாடகாவிலேயே தங்கியிருந்து தீவிரமாக தேர்தல் பணி ஆற்றி வந்தார் அண்ணாமலை. வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகங்களைச் செயல்படுத்துவது என முக்கியப் பணிகளை அண்ணாமலை கவனித்து வந்தார். அண்ணாமலை பம்பரமாகச் சுழன்று வேலை செய்த போதிலும், கர்நாடகாவில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.
கடந்த 2018 சட்டமன்றத் தேர்தலில் 104 இடங்களில் வெற்றிபெற்ற பாஜக இந்த முறை 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பாஜகவின் இந்த படுதோல்வியை அடுத்து அம்மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். அண்ணாமலையே கர்நாடகாவில் பாஜகவின் தோல்விக்கு காரணம் என விமர்சித்து வருகின்றனர்.
அண்ணாமலை காரணமா? அண்ணாமலை தான் கர்நாடகாவில் பாஜகவின் தோல்விக்கு காரணமா? கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதியில் 86 தொகுதிகள் மட்டுமே அண்ணாமலை பொறுப்பில் விடப்பட்டன. பாஜக வென்ற மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 66. அதில் அண்ணாமலையின் பொறுப்பில் இருந்த 35 தொகுதிகள் வெற்றி பெற்றுள்ளன.
அவற்றில் சிக்மகளூர், கோலார், மாண்டியா ஆகிய மாவட்டங்களில் பாஜக வாஷ் அவுட் ஆகியுள்ளது. உடுப்பி மாவட்டத்தில் பாஜக க்ளீன் ஸ்வீப் செய்துள்ளது. உடுப்பி மாவட்டத்தில் அண்ணாமலை எஸ்.பியாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. பெங்களூரில் மொத்தமுள்ள 28 இடங்களில் 16-ஐ பாஜக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உடுப்பி ஸ்வீப்:
உடுப்பி - 5 (5)
சிக்மகளூர் - 0 (5)
தாவணகெரே - 1 (7)
ஷிவமொகா - 3 (7)
கோலார் - 0 (6)
மாண்டியா - 0 (7)
ஹாசன் - 2 (7)
தட்சிண கன்னடா - 6 (8)
பெங்களூர் - 16 (28)
உத்தர கன்னடா - 2 (6)
இந்த முடிவுகளைச் சுட்டிக்காட்டி அண்ணாமலை பணியாற்றிய 86ல் 35 தொகுதிகளில் பாஜக வென்றுள்ளது. மற்ற 138 தொகுதிகளில் 31 தொகுதிகளில் மட்டுமே பாஜக வென்றுள்ளது. அண்ணாமலை மட்டும் இல்லையென்றால் கர்நாடகாவில் பாஜக படுதோல்வி அடைந்திருக்கும், என ட்விட்டரில் அண்ணாமையின் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications