பாஜக “மாஸ்டர் பிளான்”.. கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் தலைகள் டிகே சிவக்குமார், சித்தராமையாவிற்கு குறி
பெங்களூரு: கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டு இருக்கிறது. இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களான சித்தராமையாவுக்கும், டிகே சிவக்குமாருக்கும் பாஜக குறிவைத்து இருப்பது அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலின் மூலம் தெரிகிறது.
பாஜக ஆளும் கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே மாதம் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. மே 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில் போட்டியிடும் முதல் கட்ட காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் ஏற்கனவே வெளியிட்டது.

பாஜக வேட்பாளர் பட்டியல்: இந்த நிலையில், பல கட்ட ஆலோசனைக்கு பிறகு பாஜகவும் இன்று முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் 189 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில், 52 பேர் புதிய வேட்பாளர்கள். கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஷிகாவ்ன் தொகுதியில் போட்டியிட இருக்கிறார்.
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் தொகுதியான ஷிகாரிபுராவில் அவரது மகன் விஜயேந்திரா பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவருமான குமாரசாமிக்கு எதிராக பாஜகவின் சி.பி.யோகேஷ்வர் போட்டியிடுகிறார்.
டி.கே.சிவக்குமாருக்கு குறி: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் கனகபுரா தொகுதியில் போட்டியிட அமைச்சர் ஆர்.அசோகிற்கு பாஜக வாய்ப்பு அளித்து உள்ளது. டிகே சிவகுமாரை போலவே இவரும் ஒக்கலிகா சமூகத்தை சேர்ந்தவர். அமைச்சர் அசோக் பெங்களூரிலுள்ள பத்மநாபநகர் தொகுதியில் வெற்றிபெற்று சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டவர் ஆவார். இவர் கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சராகவும் பதவி வகித்து உள்ளார்.
இந்த நிலையில், பெங்களூரின் முக்கிய ஒக்கலிக புள்ளியாக கருதப்படும் ஆர்.அசோக்கை டிகே சிவகுமாருக்கு எதிராக கனகபுராவில் களமிறக்கி உள்ளது பாஜக. அதே சமயம் அமைத்த ஆர்.அசோக் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கும் பத்மநாபநகர் தொகுதியில் அவரே நிறுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

டார்கெட் சித்தராமையா: அதேபோல் கர்நாடக அமைச்சரான சோமண்ணா, அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவை எதிர்த்து போட்டியிட இருக்கிறார். காங்கிரஸ் சார்பில் சித்தராமையா போட்டியிடும் வருணா தொகுதியில் சோமண்ணாவை வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது பாஜக. சோமண்ணா லிங்காயத்து சமூகத்தை சேர்ந்தவர். வருணா தொகுதியில் ஓரளவுக்கு லிங்காயத்துகளும் உள்ளனர்.
ஆர்.அசோக்கை போன்றே சோமண்ணாவுக்கும் கூடுதலாக ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆம், சோமண்ணா சாம்ராஜ்நகர் தொகுதியிலும் போட்டியிடுகிறார். பாஜகவில் 2 அமைச்சர்கள் தாங்கள் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதியுடன் சேர்ந்த மேலும் ஒரு தொகுதி என மொத்த 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவை இரண்டுமே விஐபி தொகுதிகளாகும். இதன் மூலம் பாஜக கர்நாடக தேர்தலில் காங்கிரஸின் தலைவர்களான சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார் ஆகியோரை குறி வைத்து காய் நகர்த்தியுள்ளது தெளிவாக தெரிகிறது. சிவகுமார் மற்றும் சித்தராமையாதான் கர்நாடக காங்கிரஸ் முதல்வர் முகங்கள். அதில் சித்தராமையா முன்னிலையில் உள்ளார்.
-
இட்லி, வடை, சாம்பார்.. கர்நாடகாவில் நாளை நடக்கும் மிக பெரிய அரசியல் மாற்றம்! ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் -
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications