பாஜகவிற்கு உண்மையாக தேச பக்தி இருப்பதை நிரூபிக்க ஒரு சான்ஸ்.. கர்நாடக அமைச்சர் செம சவால்
பெங்களூர்: பாஜகவினருக்கு உண்மையிலேயே தேச பக்தி, பண்பாடு இருக்குமானால், காங்கிரஸ், மஜத அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு உங்கள் ஆட்சியில் எந்த பதவியும் கொடுக்க கூடாது என்று, கர்நாடக அமைச்சர் யு.டி.காதர் சட்டசபையில் இன்று தெரிவித்தார்.
முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்த நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் இன்று பேசிய, யு.டி.காதர், கூறியதை பாருங்கள்: "பாஜகவினரை பொறுத்தளவில், அவர்களுக்குத்தான் தேச பக்தி இருப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள். வேறு யாருக்குமே தேச பக்தி இல்லை என்றும் நினைக்கிறார்கள்.

அவர்களுக்குதான் கலாச்சாரம், பண்பாடு இருப்பதாகவும், மற்றவர்களுக்கு அதெல்லாம் இல்லை என்றும் கூட நினைக்கிறார்கள். அப்படியே இருக்கட்டும். நீங்கள்தான் உத்தமர்கள் என்று சொல்லிக்கொள்கிறீர்கள் அல்லவா? அதை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
உண்மையிலேயே உங்களுக்கு தேச பக்தி, பண்பாடு, நியாயத்தின் மீது நம்பிக்கை இருக்குமானால், எங்கள் ஆட்சியை எதிர்த்து மும்பையில் சென்று அமர்ந்து இருக்கிறார்களே, அவர்களுக்கு, உங்கள் ஆட்சி அமைந்தால் எந்த பதவியும் கொடுக்க கூடாது.
மக்கள் இதை பார்த்துக் கொண்டு உள்ளார்கள். நீங்கள் அவர்களுக்கு பதவி கொடுத்தால், நீங்கள் பேசி வரும் நியாயம், தர்மம் எப்படிப்பட்டது என்பது மக்களுக்கு தெரிந்துவிடும். ஜாக்கிரதை.
ராஜினாமா செய்த எம்எல்ஏக்களை அதிருப்தி எம்எல்ஏக்கள் என ஊடகங்கள் குறிப்பிடுவதை கூட நான் விரும்பவில்லை. ஏனெனில் அவர்கள் ரொம்பவே திருப்தியாக உள்ளார்கள். அவர்கள் திருப்திப்படுத்தப்பட்டதால்தான், மும்பையில் சென்று உட்கார்ந்து இருக்கிறார்கள். அல்லது, அவர்கள், பெங்களூரிலேயே இருந்திருப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
-
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு -
மகாராஷ்டிராவை பாருங்க.. தமிழ்நாட்டிலும் இதேமாதிரி செய்யனும்! விஜய்க்கு ஐடியா கொடுத்த அன்புமணி ராமதாஸ் -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
டிகே சிவக்குமாருக்கு புதிய சிக்கல்.. பெங்களூர் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து போர்க்கொடி.. பரபரப்பு -
இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் விஜய்யின் தவெகவுக்கு அழைப்பு இல்லையா? பின்னணி தகவல் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
வெளிச்சம் டிவி என்னுடையது! விசிகவுக்கும் சேனலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! பனையூர் பாபு பரபரப்பு -
எங்க அண்ணனை நான் தான் செய்வேன்.. திருமாவுக்கு கல்தா கொடுக்கும் சிறுத்தை குட்டி! திமுகவில் ஐக்கியம்?












Click it and Unblock the Notifications