கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாருக்கு சூனியம்? பெங்களூர் வீட்டருகே தலையின்றி கிடந்த சேவல் + எலுமிச்சையால் ஷாக்
பெங்களூர்: கர்நாடகா முதல்வராக கடந்த 3ம் தேதி டிகே சிவக்குமார் பதவியேற்றார். இந்நிலையில் தான் பெங்களூர் சதாசிவநகரில் உள்ள டிகே சிவக்குமாரின் வீட்டின் பின்னால் செல்லும் முச்சந்தியில் கழுத்து அறுக்கப்பட்ட சேவல், 3 எலுமிச்சை பழங்கள் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிகே சிவக்குமாரின் அரசியல் வாழ்க்கையில் சரிவை ஏற்படுத்துவதற்காக சூனியம் வைக்கப்பட்டதாக தகவல்கள் பரவி வருகிறது.

கர்நாடகாகாங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக இருந்த சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வராக டிகே சிவக்குமார் பதவியேற்றார். இவர் கடந்த 3ம் தேதி முதல்வராக பதவியேற்று செயல்பட்டு வருகிறார்.
டிகே சிவக்குமார், பெங்களூர் சதாசிவநகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். டிகே சிவக்குமார் வசித்து வரும் வீட்டுக்கு பின்புறம் எஸ் பங்காரப்பா மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் அருகே மூன்று சாலைகள் ஒன்றாக இணையும் முச்சந்தி உள்ளது.
இந்நிலையில் தான் இன்று காலையில் முச்சந்தியில் சேவல் ஒன்று கழுத்து அறுக்கப்பபட்டு கிடந்தது. அதன் அருகே 3 எலுமிச்சை பழங்கள், குங்குமம் உள்ளிட்டவை கிடந்தன. சாலையில் வட்டம் வரைப்பட்டு இருந்தது. இதனை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சாலையில் நடக்கவே பயந்தனர். யாரோ இரவு நேரத்தில் பூஜை செய்து சேவல் பழிகொடுத்ததாக நினைத்தனர்.
மேலும் முதல்வர் டிகே சிவக்குமாரின் இல்லத்தின் அருகே இந்த சம்பவம் நடந்ததால் அவரது அரசியல் வளர்ச்சியை தடுக்கும் வகையில் சூனியம் வைக்கப்பட்டதாக தகவல்கள் பரவி தொடங்கியது. இதுபற்றி அறிந்தவுடன் காவல்துறையினர் அங்கு சென்று சேவல்மற்றும் எலுமிச்சை பழத்தை அப்புறப்படுத்தினர். அதோடு பொதுமக்களிடம் பயத்தை போக்குவதற்காக அந்த இடத்தை சுத்தம் சென்றனர்.
இந்த சேவல் மற்றும் எலுமிச்சை பழம் எப்படி அங்கு வந்தது? என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். முதற்கட்டமாக அந்தபகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications