பிரஸ்மீட்டில் குமாரசாமியின் மூக்கில் வடிந்த ரத்தம்.. Blood thinner மாத்திரை தான் காரணமா? பரபர தகவல்
பெங்களூர்: பெங்களூரில் இன்று நடந்த பிரஸ்மீட்டில் மத்திய அமைச்சர் எச்டி குமாரசாமி பேசியபோது மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது. இதையடுத்து அவர் பெங்களூர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பாதிப்புக்கு அவர் எடுத்து வரும் Blood Thinner மாத்திரை தான் காரணமா? என்பது பற்றிய சந்தேகம் எழுந்துள்ளது.
கர்நாடகாவில் ‛மூடா' எனும் மைசூரு மாநகர வளர்ச்சி குழுமத்தில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகளாக உள்ள பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த 2 கட்சிகளும் கூட்டணியில் உள்ள நிலையில் தான் மூடா முறைகேட்டில் முதல்வர் சித்தராமையாவுக்கு தொடர்பு உள்ளதாக கூறி வருகின்றன.

இதுபற்றி ஆளும் காங்கிரஸ் கட்சி சட்டசபையில் விவாதிக்க அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து மூடா முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சிகள் பாதயாத்திரை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். பெங்களூரில் இருந்து மைசூரு வரை அவர்கள் பாதயாத்திரையாக செல்ல முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக பெங்களூரில் இன்று பாஜக மற்றும் ஜேடிஎஸ் தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். அதன்பிறகு நடந்த பிரஸ்மீட்டில் ஜேடிஎஸ் மாநில தலைவரும், மத்திய அமைச்சருமான குமாரசாமி பேசினார். அப்போது மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் பாஜக மாநில தலைவரான எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
பிரஸ்மீட்டில் குமாரசாமி, முதல்வர் சித்தராமையாவை முறைகேட்டுடன் தொடர்புப்படுத்தி பேசி வந்தார். அப்போது திடீரென்று அவரது மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது. இதையடுத்து சிறிய துண்டை வைத்து மூக்கை பொத்தியபடி குமாரசாமி காரில் ஏறி ஜெயநகரில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு குமாரசாமிக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் குமாரசாமியின் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்ததற்கு அவர் எடுத்து கொள்ளும் Blood Thinner மாத்திரை தான்
காரணம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி அந்த கட்சியின் மஞ்சுநாத் எம்பி கூறுகையில், ‛‛குமாரசாமி Blood Thinner மாத்திரை எடுத்து கொள்கிறார். இதனால் ரத்தம் கசிந்து இருக்கலாம்'' என்றார். அதாவது Blood Thinner மாத்திரை என்பது உடலில் ரத்தம் உறைவதை தடுக்கும் ஒரு வகை மாத்திரையாகும்.
குமாரசாமிக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் ரத்தம் உறைவதை தடுக்க அவர் Blood Thinner மாத்திரைகளை அடிக்கடி பயன்படுத்தி வருகிறார். உடலில் ரத்தம் உறைந்தால் நெஞ்சுவலி மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இதனை தடுக்கவும், ரத்தம் உறைவதை கட்டுப்படுத்தவும் Blood Thinner மாத்திரைகள் பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் குமாரசாமி Blood Thinner மாத்திரை எடுத்து கொண்ட நிலையில் ரத்தம் மூக்கின் வழியாக கசிந்துள்ளதாக அவரது கட்சியினர் மட்டுமே தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் கூட குமாரசாமியின் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்ததற்கு Blood Thinner மாத்திரை தான் காரணம் என்று மருத்துவர்கள் எதுவும் சொல்லவில்லை. தற்போது குமாரசாமிக்கு அப்போலோ மருத்துவமனையில் பரிசோதனைகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் குமாரசாமியின் உடல்நல பாதிப்பு குறித்தும், அவர் எப்படி இருக்கிறார்? என்பது பற்றியும் அப்போலோ சார்பில் மருத்துவ அறிக்கை வெளியிடப்படும். அதன்பிறகே அவரது மூக்கில் இருந்து ரத்தம் கசிந்ததற்கான உண்மையான காரணம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்!












Click it and Unblock the Notifications