அண்ணாமலை காலை சுற்றிய "கயிறு".. எடப்பாடி விரித்த "புலிகேசி" வலை! கர்நாடகாவிலேயே பவரை காட்டும் அதிமுக
பெங்களூர்: கர்நாடகாவில் அதிமுக சார்பாக வேட்பாளர் நிறுத்தப்பட்டு இருப்பது அண்ணாமலைக்கு எதிரான எடப்பாடி பழனிசாமியின் வியூகமாக பார்க்கப்படுகிறது.
பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கட்சியிலேயே நிர்வாகிகள் பலர் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். அண்ணாமலை திமுகவின் சொத்து பட்டியல் என்று சில ஆவணங்களை வெளியிட்ட போதும் பாஜக டாப் தலைவர்கள் யாரும் அண்ணாமலைக்கு ஆதரவாக பேசவில்லை.

அதேபோல் அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்திலும் அமர் பிரசாத் ரெட்டியை தவிர அண்ணாமலைக்கு யாரும் ஆதரவாகவும் கருத்துக்களை பேசவில்லை. பாஜக உள்ளேயே அண்ணாமலை ஆதரவு கோஷ்டி - அண்ணாமலை எதிர்ப்பு கோஷ்டி என்ற கோஷ்டிகள் உருவாகி உள்ளன.
இப்படிப்பட்ட நிலையில் கர்நாடகா சட்டசபை தேர்தல் அண்ணாமலைக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜகவின் துணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்த தேர்தலில் வென்று தனது ஆளுமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அண்ணாமலைக்கு ஏற்பட்டு உள்ளது. இல்லையென்றால் தேர்தல் தோல்வியை காரணமாக வைத்தே அண்ணாமலையை ஓரம்கட்ட டெல்லி நினைக்கலாம் .
அண்ணாமலை டெல்லியிடம் நல்ல பெயர் வாங்க இந்த கர்நாடக தேர்தல் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

கர்நாடகாவில் உள்ளதில் 10 மாவட்டங்களில் 86 தொகுதிகள் அண்ணாமலைக்கு வழங்கப்பட்டு உள்ளது. இது எல்லாம் தமிழர்கள் அதிகம் உள்ள தொகுதிகள் ஆகும்.
உடுப்பி 5 தொகுதிகள், சிக்கமகளூரு 5 தொகுதிகள், தாவணகெரே 7 தொகுதிகள், ஷிவமொகா 7 தொகுதிகள், கோலார் 6 தொகுதிகள், மாண்டியா 7 தொகுதிகள், ஹாசன் 7 தொகுதிகள், தட்சிண கன்னடா 8 தொகுதிகள், பெங்களூரில் 28 தொகுதிகள், உத்தர கன்னடா 6 தொகுதிகள், என்று அண்ணாமலைக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதில் அண்ணாமலை கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தொகுதிதான் புலிகேசி தொகுதி. தமிழர்கள் அதிகம் உள்ள இந்த தொகுதியில் அதிமுக, திமுகவிற்கு கூட ஆதரவாளர்கள் உள்ளனர். இந்த நிலையில்தான் தமிழர்கள் அதிகம் இருக்கும் புலிகேசி நகரில் தனித்து போட்டியிட அதிமுக முடிவு செய்துள்ளது.
புலிகேசி நகர் தொகுதியில் பாஜகவை எதிர்த்து அதிமுக வேட்பாளராக அன்பரசன் போட்டியிடுவார் என அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அண்ணாமலைக்கு குறி வைக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி இந்த முடிவை எடுத்து இருக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைக்கும் என்று அதிமுக மீது எதிர்பார்ப்பு இருந்த நிலையில், பாஜகவை எதிர்க்க, அண்ணாமலையை எதிர்க்க எடப்பாடி முடிவு செய்துள்ளார் .
ஏற்கனவே கர்நாடக சட்டசபை தேர்தலில் பெங்களூர் மாநகர பகுதியில் உள்ள தொகுதிகளில் காங்கிரஸ்தான் அதிக இடங்களை வெல்லும் என்று ஏபிபி சேனல் - சி வோட்டர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏபிபி சேனல் மற்றும் டி வோட்டர் வெளியிட்ட கருத்து கணிப்பில், மொத்தம் அம்மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதில் 127 இடங்கள் வரை அதிகபட்சம் பெற்று காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எத்தனை இடங்கள்:
பாஜக - 68 - 80
காங்கிரஸ் 115-127
மதசார்பற்ற ஜனதா தளம் 23-35
என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதாவது காங்கிரஸ் இந்த தேர்தலில் வெற்றிபெற்று அங்கே ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
முக்கியமாக பெங்களூர் பகுதியில் அதாவது பெங்களூர் மாநகர பகுதியில் உள்ள தொகுதிகளில் காங்கிரஸ்தான் அதிக இடங்களை வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது காங்கிர்ட்ஸ் 15-19 இடங்களை பெங்களூர் மாநகரத்தில் வெல்லும் வாய்ப்புகள் உள்ளன. பாஜக இங்கே 11-15 இடங்களை வெல்லும் வாய்ப்புகள் உள்ளன என்று கணிக்கப்பட்டு உள்ளது.
இப்போது அதே பெங்களூரில் பாஜகவிற்கு எதிராக எடப்பாடி தனது ஆளை இறக்கி இருப்பதால் அண்ணாமலைக்கு எதிரான வியூகமாக இது இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications