டெல்லி பக்கம் கிளம்பிய 23 எம்எல்ஏக்கள்.. கர்நாடக அமைச்சரவையில் 20 பேருக்கு அதிரடி மாற்றமா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடக அரசியலில் அமைதிக்கு பின் வீசும் புயலாக, அமைச்சரவை மாற்றத்திற்கான அறிகுறிகள் டெல்லியின் அதிகார மையங்களில் எதிரொலிக்க தொடங்கியுள்ளன.. கடந்த சில நாட்களாக நிலவிய மவுனம் கலைந்து, இப்போது 23 சட்டமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ள விவகாரம் சித்தராமையா அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.. இந்த டெல்லிப் பயணம் வெறும் சந்திப்பு தானா அல்லது ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதற்கான இறுதி எச்சரிக்கையா என்ற கேள்வி எழுந்துள்ளது...!!!

கடந்த 2023-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தபோதே, முதல்வர் பதவி மற்றும் அமைச்சர் பதவிகளில் சுழற்சி முறை பின்பற்றப்படும் என்ற சீக்ரெட் ஒப்பந்தம் போடப்பட்டதாக சொல்லப்பட்டது..

Karnataka Cabinet Reshuffle

கர்நாடகா அமைச்சரவை

இப்போது ஆட்சி அமைந்து குறிப்பிட்ட காலம் கடந்துவிட்ட நிலையில், சீனியர் எம்.எல்.ஏக்கள் தங்களுக்குரிய அங்கீகாரத்தை எதிர்பார்த்து டெல்லிக்கு விரைந்துள்ளதாக தெரிகிறது.. சட்டசபை கொறடா அசோக் பட்டன் மற்றும் மூத்த தலைவர் டி.பி. ஜெயச்சந்திரா தலைமையில் இந்த டீம் தலைநகரில் முகாமிட்டுள்ளது.

இப்போது அமைச்சர்களாக இருப்பவர்களில் சுமார் 15 முதல் 20 பேரை நீக்கிவிட்டு, தங்களுக்கு அந்த இடத்தைக் கொடுக்க வேண்டும் என்பது இவர்களின் பிரதான கோரிக்கையாகவும் இருந்து வருகிறது..

பெரிய ட்விஸ்ட்

இதில் ட்விஸ்ட் என்னவென்றால், 38 புதிய சட்டமன்ற உறுப்பினர்களும் தனியாகக் கூட்டம் போட்டு, "எங்களுக்கு 5 அமைச்சர் பதவிகள் வேண்டும்" என்று பிடிவாதம் பிடிக்க துவங்கி விட்டார்களாம்.. இதனால் பழைய முகங்களுக்கும், புதிய ரத்தத்திற்கும் இடையே ஒரு பனிப்போரே ஆரம்பமாகி உள்ளது என்றே சொல்லலாம்.

இந்த விவகாரத்தில் முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் ஆகியோருக்கு இடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.. சித்தராமையா தனது விசுவாசிகளுக்கு அமைச்சர் பதவிகளைப் பெற்றுத்தர முயற்சிக்கும் நிலையில், டி.கே. சிவக்குமாரோ "முதலில் மேலிடம் சொன்னபடி தலைமை மாற்றத்தை (முதல்வர் பதவி) இறுதி செய்யுங்கள், அதன் பிறகு அமைச்சரவையை மாற்றலாம்" என்பதில் உறுதியாக இருக்கிறார்.. இந்த இழுபறியால் டெல்லி மேலிடம் இப்போது தர்மசங்கடத்தில் உள்ளதாம்.

இதற்கெல்லாம் ஒரு விடை கிடைக்கப்போகும் நாள் மே 4-ம் தேதி தான்.. தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் மற்றும் கர்நாடகாவின் இடைத்தேர்தல் முடிவுகள் அன்றைய தினம் வெளியாக உள்ளன.

சித்தராமையா, சிவக்குமார்

இந்த முடிவுகளைப் பொறுத்தே காங்கிரஸ் தலைமை தனது அடுத்த அதிரடி முடிவை எடுக்கும்.. மாநிலப் பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா சொன்னபடி, மே மாத இரண்டாவது வாரத்தில் கர்நாடக அமைச்சரவையில் மிகப் பெரிய சர்ஜரி நடக்கப்போவது உறுதி.. பழைய அமைச்சர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்களா அல்லது அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சமாதானம் செய்யப்படுவார்களா என்பது தெரியவில்லை,

ஆனால், இந்த அதிரடி நகர்வுகள் என்பது வெறும் பதவி மாற்றத்திற்கான சலசலப்பு மட்டுமல்ல.. வரவிருக்கும் தேர்தல்களை எதிர்கொள்ள கட்சிக்குள் இருக்கும் அதிருப்திக் குரல்களை இப்போதே அடக்கி வைக்க காங்கிரஸ் மேலிடம் போடும் மாஸ்டர் பிளான் இது..

எல்லா தரப்பு எம்.எல்.ஏ-க்களையும் திருப்திப்படுத்தினால் மட்டுமே வரும் காலங்களில் ஆட்சிக்கு ஆபத்து இருக்காது என்பதால், இந்த அமைச்சரவை மாற்றம் என்பது ஒரு சாதாரண நிர்வாக நடவடிக்கை கிடையாது.. இது மொத்தமாக கட்சியை சரிசெய்யும் ஒரு 'ரிப்பேர்' வேலை என்றே அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+