திடீர் திருப்பம்.. பதவி விலகுகிறாரா குமாரசாமி? நம்பிக்கை தீர்மான உரையில் குமாரசாமி பேசியதை பாருங்க
Recommended Video
பெங்களூர்: அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானம் செய்ய முடியாது என்ற சூழ்நிலை எழுந்துள்ள நிலையில், முதல்வர் பதவியை தியாகம் செய்வதற்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. சட்டசபையில் அவர் ஆற்றிய உரை இதை எதிரொலிப்பதாக உள்ளது.
நம்பிக்கை தீர்மானத்தை சட்டசபையில் நேற்று தாக்கல் செய்திருந்தார் குமாரசாமி. ஆனால், நேற்று பல்வேறு அலுவல்களும் திசை மாறி, மாறி மாறி நடைபெற்றதால், சட்டசபை இன்றுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே, இன்று பகல் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஆளுநர் வஜுபாய் வாலா, குமாரசாமிக்கு நேற்று இரவு கடிதம் எழுதி இருந்தார்.

வேறு பேச்சு வேண்டாம்
இந்த நிலையில், இன்று காலை சட்டசபை தொடங்கியதும் வேறு பிரச்சனைகளை பேசி காலம் தாழ்த்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்கள் முயல்வார்கள், என்றுதான் பாஜக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வந்தது. ஆனால், எந்த ஒரு பிரச்சனையையும் பேசக்கூடாது, நேரடியாக நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் முதல்வர் உரையாற்றுவார் என்று அதிரடியாக சபாநாயகர் ஆரம்பத்திலேயே அறிவித்து விட்டார்.

குமாரசாமி பேச்சு
இதையடுத்து, குமாரசாமி தனது உரையை ஆரம்பித்தார். அப்போதுதான், அரசியலுக்கு வந்த காலம் தொட்டு என்னென்ன நடைபெற்றது என்பது குறித்து நினைவுகூர்ந்தார். ஒரு கட்டத்தில், அவர் பேசிய பேச்சுக்கள், முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கு அவர் முடிவு செய்து விட்டதாகவே தெரிந்தது.

நாற்காலி விருப்பம்
குமாரசாமி கூறியதை பாருங்கள்: இந்த முதல்வர் பதவியின் மீதோ, நாற்காலியின் மீதோ எனக்கு மிகுந்த விருப்பம் கிடையாது. நான் எதிர்பாராமல் தான் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டேன். எனது தந்தை பிரதமராக பதவி வகித்தவர். டெல்லி செங்கோட்டையை பார்த்தது எங்கள் குடும்பம். எனவே எங்கள் குடும்பத்திற்கு அதிகார தாகம் இருப்பதாக கூறுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

பாஜகவுக்கு மெசேஜ்
இந்த முதல்வர் பதவி என்பது யாருக்கும் நிரந்தரமானது கிடையாது. உங்களுக்கும் கூட இது நிரந்தரம் கிடையாது. இன்று எம்எல்ஏக்களை தடுத்து வைத்து நீங்கள் ஆட்சியைக் கவிழ்க்கலாம். ஆனால் நாளை இது உங்களுக்கு ஆபத்தாக முடியும். இவ்வாறு குமாரசாமி தனது உரையின் போது குறிப்பிட்டார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications